வழிபாட்டுத் தலம்
விருதால் உடைய அய்யனார் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் விருதால் உடைய அய்யனார் கோயில்
வேறு பெயர்கள் அய்யனார் கோயில்
ஊர் சமயநல்லூர்
வட்டம் வாடிப்பட்டி
மாவட்டம் மதுரை
உட்பிரிவு 5
திருக்குளம் / ஆறு தோடனேரி கண்மாய்
வழிபாடு ஒருகால பூசை
திருவிழாக்கள் மாசி மகாசிவராத்திரி
காலம் / ஆட்சியாளர் பாண்டியர்
கல்வெட்டு / செப்பேடு இல்லை
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் கருவறையில் அய்யனார் பூரணை, புஷ்கலையுடன் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். கருவறையின் எதிரே பலிபீடம் மற்றும் இரு யானை வாகனங்கள் கற்சிற்பங்களாக காட்சியளிக்கின்றன. கோயில் திருச்சுற்றில் காவல் தெய்வங்களான பெரிய கருப்பசாமி, பெருமாள், மதுரைவீரன், சுடலைமாடன், பிள்ளையார், ஆகிய தெய்வங்களுக்கு தனியே சந்நிதிகள் வழிபாட்டில் உள்ளன. மேலும் அய்யனாருக்குரிய குதிரை வாகனங்கள் சுடுமண் சிற்பங்களாக வரிசையாக காணிக்கையாக்கப்பட்டுள்ளன. சோணைசுவாமி, சின்னகருப்பு, மதயானை கருப்பசாமி, வீரணசாமி ஆகிய தெய்வங்களுக்கு பீடங்கள் அமைக்கப்பட்டு வழிபடப்படுகின்றன. நாகம்மாள் சிற்பம் கல்லால் வடிக்கப்பட்டு வழிபாட்டில் உள்ளது. பெருமாள் திருமகள், நிலமகளுடன் உள்ள செப்புத்திருமேனிகள் ஊஞ்சல் உற்சவம், திருவிழா ஊர்வலம் போன்ற நாட்களில் வழிபடப்படுகின்றன.
தலத்தின் சிறப்பு தோடனேரி கண்மாய் கரை மேல் அமர்ந்த அய்யனார். பழமையான வழிபாட்டுத்தலம்.
சுருக்கம்
விருதால் உடைய அய்யனார் கோயில் மதுரை சமயநல்லூர் பகுதியில் சிறப்புப் பெற்ற கோயிலாகும். சமயநல்லூரில்உள்ள தோடனேரி கண்மாய் கரையில் இக்கோயில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. விருதா+ஆல் என்று பிரித்து பொருளுணர, விருதா என்றால் விழுதுகளற்ற ஆலமரம் என்பதாகும். கல்லால மரம் என்று இதற்கு பெயர். இம்மரத்தினை உடைய இம்மரத்தின் கீழ் அமர்ந்த அய்யனார் என்ற பொருளில் விருதால் உடைய அய்யனார் எனப் பொருள் கொள்ளப்படுகிறது. இக்கோயிலில் பெருமாள் வழிபாடும் நடைபெறுகிறது. மேலும் காவல் தெய்வங்களான கருப்பசாமிகள் பலர் இங்கு அருள் பாலிக்கின்றனர்.
விருதால் உடைய அய்யனார் கோயில்
கோயிலின் அமைப்பு விருதால் உடைய அய்யனார் கோயில் வளாகத்தில் அய்யனார் சந்நிதி தவிர பெருமாள், முருகன், கணபதி, கருப்பசாமி, நாகம்மாள் ஆகிய தெய்வங்களுக்கு தனித்தனி சந்நிதிகள் உள்ளன. மேலும் காவல் தெய்வங்களான சின்னகருப்பு, மதயானை கருப்பு, சோணை கருப்பு, வீரணசாமி ஆகியோருக்கு பீடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோயில் வளாகத்தைச் சுற்றிலும் காவல்தெய்வங்களும், பெண் தெய்வங்களும் சிறு சந்நிதி கொண்டு வழிபடப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது.
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறை
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் தோடனேரி கருப்பசாமி கோயில், கட்டப்புளி கருப்பசாமி கோயில்
செல்லும் வழி மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் சமயநல்லூர் அமைந்துள்ளது.
கோவில் திறக்கும் நேரம் காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை
விருதால் உடைய அய்யனார் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் சமயநல்லூர்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் சமயநல்லூர்
அருகிலுள்ள விமான நிலையம் மதுரை
தங்கும் வசதி மதுரை நகர விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் எம்.ஆர்த்தி சந்தனக்குமார், சந்துரு, ஸ்ரீவேல்முருகன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 51
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்