வழிபாட்டுத் தலம்
கருப்பசாமி கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | கருப்பசாமி கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | கருப்பு கோயில் |
| ஊர் | கீழஉறப்பனூர் |
| வட்டம் | திருமங்கலம் |
| மாவட்டம் | மதுரை |
| உட்பிரிவு | 5 |
| திருக்குளம் / ஆறு | கீழஉறப்பனூர் கண்மாய் |
| வழிபாடு | ஒருகால பூசை |
| திருவிழாக்கள் | மாசி மகாசிவராத்திரி |
| காலம் / ஆட்சியாளர் | பாண்டியர் |
| கல்வெட்டு / செப்பேடு | இல்லை |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | கீழஉறப்பனூரில் உள்ள கருப்பசாமி கோயில் ஒரு உபதெய்வக் கோயிலாகும். இக்கோயில் பெண்தெய்வத்திற்கு முதன்மையானது. பெண் தெய்வக் கோயிலுக்கு காவல் தெய்வமாக கருப்பசாமி கோயில் அமைந்துள்ளது. சுமார் ஆறடி உயரத்திற்கும் மேலாக பீடத்தின் மீது நின்ற நிலையில் வீச்சரிவாளை ஓங்கிய நிலையில் கருப்பசாமி காணப்படுகிறார். |
| தலத்தின் சிறப்பு | காவல் தெய்வம் கருப்பசாமி வீரக்கடவுளாக இங்கு வழிபடப்படுகிறது. |
|
சுருக்கம்
கருப்பசாமி வழிபாடு என்பது வீரவழிபாடாகும். ஊர், பெண், ஆநிரை, வயல்வெளி இவற்றைக் காக்கும் வீரர்கள் கருப்பசாமிகள் ஆவர். தென்மாவட்டங்களில் ஆநிரை காத்து நின்று தன் இன்னுயிர் நீத்த வீரர்களே கருப்பசாமிகளாக, காவல் தெய்வங்களாக வணங்கப்பட்டு வருகின்றனர். வடதமிழகத்தின் நடுகல் வழிபாடு இதனோடு ஒத்தது. சங்க இலக்கியங்கள் மற்றும் தொல்காப்பியம் குறிப்பிடும் புறத்திணைகளான வெட்சித்திணை, கரந்தைத் திணை இவற்றில் கரந்தைத் திணை வீரர்களே இக்கருப்பசாமி தெய்வங்கள். பெரும்பாலும் முல்லைத் திணையான பாண்டிய நாட்டில் வெட்சிப் பூசல்களும், கரந்தைப் பூசல்களும் எண்ணிறந்து நடைபெற்றன. எனவே அந்நிலப்பகுதியில் காவல் தெய்வமான கருப்பசாமியின் வழிபாடும் அதிகம்.
|
|
கருப்பசாமி கோயில்
| கோயிலின் அமைப்பு | கீழஉறப்பனூரில் அமைந்துள்ள கருப்பசாமி கோயில் அம்மன் கோயிலின் காவல் தெய்வக் கோயிலாக அமைந்துள்ளது. கருப்பசாமிக்கு தனியே ஒரு சிறு கோயில் மண்டபம் போன்ற அமைப்பில் தூண்களுடனும், விமானத்துடனும் விளங்குகிறது. விமானத்தின் சிகரத்தின் நாற்புறமும் மூலைகளில் அரிவாள் ஏந்திய காவற் பூதங்களும், யானைகளும் சுதைச் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன. கிரீவக் கோட்டங்களின் நாற்புறமும் சுதையாலான கருப்பசாமி ஓங்கிய அரிவாளுடன் காட்சியளிக்கிறார். நான்கு தூண்கள் அமைக்கப்பட்டுள்ள மண்டபம் படிக்கட்டுகளுடன் கூடியது. படிக்கட்டுகளின் முன்பு இருபுறமும் நட்டு வைத்த கல்லில் மணிகள் தொங்கவிடப்பட்டுள்ளன. கருப்பசாமி கோயிலின் இடதுபுறம் அம்மன் கோயில் அமைந்துள்ளது. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | தனியார் |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | அய்யனார் கோயில், சிவனாமல் கோயில் |
| செல்லும் வழி | மதுரை நகரிலிருந்து திருமங்கலம் சாலை வழியாக 27 கி.மீ. தொலைவில் கீழ உரப்பனூர் அமைந்துள்ளது. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 25 |
| பிடித்தவை | 0 |