Back
வழிபாட்டுத் தலம்
புருடோத்தமப்பெருமாள் கோவில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் புருடோத்தமப்பெருமாள் கோவில்
வேறு பெயர்கள் திருக்கரம்பனூர்
ஊர் திருக்கரம்பனூர்
வட்டம் உத்தமர் கோயில்
மாவட்டம் திருச்சிராப்பள்ளி
உட்பிரிவு 2
மூலவர் பெயர் புருடோத்தமன்
தாயார் / அம்மன் பெயர் பூர்ணவல்லி, பூர்வாதேவி
தலமரம் கதலீ (வாழை மரம்)
திருக்குளம் / ஆறு கதம்ப தீர்த்தம்
வழிபாடு நான்கு கால பூசை
திருவிழாக்கள் கார்த்திகை தீபம், மாசி நீராட்டு, வைகுண்ட ஏகாதசி, கதம்ப தீர்த்தவாரி
காலம் / ஆட்சியாளர் கி.பி.7-ஆம் நூற்றாண்டு / பல்லவர், முற்காலச் சோழர்
கல்வெட்டு / செப்பேடு திருமங்கையாழ்வார் கரம்பனூரில் தங்கியிருந்துதான் ஸ்ரீரங்கத்தின் கோவில் மதில், மண்டபம், போன்றவற்றிற்குத் திருப்பணிகள் செய்தார். கதம்ப புஷ்கரணியின் வடக்கேயுள்ள தோப்பும், நஞ்செயும் எழிலார்ந்த சோலையும், திருமங்கை மன்னன் தங்கியிருந்ததின் காரணமாகவே “ஆழ்வார் பட்டவர்த்தி” என்று இன்றும் அழைக்கப்படுகிறது. கி.பி. 1751 இல் ஆங்கிலேயருக்கும், பிரஞ்சுக்காரருக்கும் நடந்த போரில் கர்னல் ஜின்ஜன் என்பவன் திருச்சிராப்பள்ளிக் கோட்டையிலிருந்து பின்வாங்கி இந்த சோலையில் அடைக்கலம் புகுந்தான். ஆங்கிலப் படை வீரர்களோ, பிரஞ்சுபடை வீரர்களோ இக்கோவிலுக்கு எவ்வித ஊறும் விளைவிக்காதது மட்டுமன்றி நிலங்களையும் ஆபரணங்களையும் தானமாக கொடுத்தனர் என்று பிரஞ்சுக்காரர்களின் வரலாற்றுக் குறிப்புகள் பரக்கப் பேசுகின்றன.
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் புருடோத்தமன், புஜங்க சயனக் கோலம் கிழக்கு நோக்கி திருமுக மண்டலம். இந்த ஆலயத்தில் மகாமண்டபத்தில் பிரமனுக்கு உள்ள கோயிலில் சரசுவதி தேவி எழுந்தருளியுள்ளாள்.
தலத்தின் சிறப்பு 1300 ஆண்டுகள் பழமையானது. திவ்ய தேசம். திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த திருப்பதிகளுள் இதுவும் ஒன்று.
சுருக்கம்
ஆழ்வார்களில் திருமங்கையாழ்வார் மட்டும் மங்களாசாசனம். பிள்ளைப் பெருமாள் ஐயங்காரும் மங்களாசாசனம் செய்துள்ளார். ஸ்ரீ ரங்கநாதனே ஆண்டுதோறும் இங்கு எழுந்தருளி கதம்ப தீர்த்தத்தில் தீர்த்தம் சாதிப்பது இன்றும் வழக்கமான விசேடத் திருவிழாவாகும்.
புருடோத்தமப்பெருமாள் கோவில்
கோயிலின் அமைப்பு இங்குள்ள ராஜகோபுரம், மற்றதிவ்ய தேசங்களைவிட மிகச் சிறியதாக இருந்தாலும், மிகவும் கலை நுணுக்கங்களுக்கும், பேரழகுக்கும் பெயர் பெற்றதாகும். இக்கோயில் கருவறை உத்யோக விமானம் ஆகும்.
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் திருவெறும்பூர், துடையூர் விஷமங்களேசுவரர் கோயில், திருச்சி குடைவரைக் கோயில்கள்
செல்லும் வழி
கோவில் திறக்கும் நேரம் காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 வரை
புருடோத்தமப்பெருமாள் கோவில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் திருச்சி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் திருச்சி
அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி
தங்கும் வசதி திருச்சி நகர விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Nov 2018
பார்வைகள் 37
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்