வழிபாட்டுத் தலம்
அருள்மிகு அரசடி கருப்பசாமி கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | அருள்மிகு அரசடி கருப்பசாமி கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | கருப்பசாமி கோயில் |
| ஊர் | ஆனையூர் |
| வட்டம் | மதுரை |
| மாவட்டம் | மதுரை |
| உட்பிரிவு | 5 |
| திருக்குளம் / ஆறு | ஆனையூர் கண்மாய் |
| வழிபாடு | ஒருகால பூசை |
| திருவிழாக்கள் | மாசி மகாசிவராத்திரி |
| காலம் / ஆட்சியாளர் | பாண்டியர் |
| கல்வெட்டு / செப்பேடு | இல்லை |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | ஆனையூர் கருப்பசாமி கோயிலின் கருவறையில் கருப்பசாமி நின்ற நிலையில் காட்டப்பட்டுள்ளார். முறுக்கிய மீசையுடனும், கையில் வெட்டு அரிவாளுடனும் கோபக்கனலுடன் கருப்பசாமி உள்ளார். கருவறை விமானத்தில் சுதைச்சிற்பங்களில் அய்யனார் காணப்படுகிறார். மண்பத்தின் முகப்பில் அய்யனாரின் உருவம் அமைக்கப்பட்டுள்ளது. |
| தலத்தின் சிறப்பு | பிற்காலப் பாண்டியர் மற்றும் நாயக்கர் காலத்திலிருந்து இக்கோயில் வழிபாட்டில் உள்ளது. |
|
சுருக்கம்
ஆனையூரில் அமைந்துள்ள கருப்பசாமி கோயில் ஏரியின் கரையில் அமைந்துள்ளது. நீர்நிலைக் காக்கும் கடவுளாக இங்கு கருப்பசாமி வழிபாடு நடைபெற்று வருகிறது. ஆனையூர் கிராமத்தினருக்கும், சுற்றியுள்ள ஊரார்களுக்கும் இக்கோயில் குலதெய்வக் கோயிலாகும்.
|
|
அருள்மிகு அரசடி கருப்பசாமி கோயில்
| கோயிலின் அமைப்பு | ஆனையூர் கருப்பசாமி கோயில் ஒரு தளத்துடன் கூடிய கருவறை விமானத்தைப் பெற்று விளங்குகிறது. இக்கோயில் ஆனையூரின் கண்மாய் கரையோரம் அமைந்துள்ள இயற்கை எழில் சூழ்ந்த கோயிலாகும். கருவறை, மகாமண்டபம் ஆகிய இரண்டு அமைப்புகளை மட்டும் கட்டிட அமைப்பாக பெற்று விளங்குகிறது. கருவறை சதுர வடிவில் உள்ளது. மகாமண்டபம் நீள் வடிவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் தற்காலத்தில் கட்டப்பட்டுள்ளது. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | தனியார் |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | அருள்மிகு ஸ்ரீஅய்யனார்சாமி கோயில், இராகவேந்திரர் கோயில், ஸ்ரீபாலநாகம்மாள் கோயில், ஸ்ரீபாடையா சாமி கோயில் |
| செல்லும் வழி | மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து ஆனையூருக்கு பேருந்துகள் செல்கின்றன. மதுரை பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் ஆனையூர் அமைந்துள்ளது. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 32 |
| பிடித்தவை | 0 |