Back
வழிபாட்டுத் தலம்
மகேந்திரப்பள்ளி திருமேனியழகர் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் மகேந்திரப்பள்ளி திருமேனியழகர் கோயில்
வேறு பெயர்கள் மயேந்திரப்பள்ளி
ஊர் மகேந்திரப்பள்ளி
வட்டம் காட்டுமன்னார்குடி
மாவட்டம் கடலூர்
உட்பிரிவு 1
தாயார் / அம்மன் பெயர் வடிவாம்பிகை
தலமரம் கண்ட மரம், தாழை
திருக்குளம் / ஆறு மகேந்திர தீர்த்தம்
ஆகமம் சிவாகமம்
வழிபாடு ஆறுகால பூசை
திருவிழாக்கள் மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரை
காலம் / ஆட்சியாளர் கி.பி.7-12-ஆம் நூற்றாண்டு / பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் வெளித்திருச்சுற்றில் விநாயகர், காசிவிசுவநாதர், திருமால் தேவியருடன், சிவலிங்கம், பைரவர், சூரியன், சந்திரன் சந்நிதிகள் உள்ளன. வலம் முடித்து, முன்னுள்ள வெளவவால் நெத்தி மண்டபத்தையடைந்தால் வலப்புறம் அம்மன் கருவறை உள்ளது. நின்ற திருக்கோலம். உள்ளே சென்றால் வலப்பால் நடராசசபை, சிவகாமியும் மாணிக்க வாசகரும் உடன் காட்சியளிக்கின்றனர். கிழக்கு திசையில் கருவறை. சதுரவடிவ கருவறையில் மூலவர் காட்சியளிக்கிறார். இத்தலத்தில் முருகப்பெருமான் சிங்காரவேலனாக ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் நீன்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.
தலத்தின் சிறப்பு 1300 ஆண்டுகள் பழமையானது. தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலம். திருஞானசம்பந்தர் பாடியுள்ளார்.
சுருக்கம்
திருமகேந்திரப்பள்ளி திருமேனியழகர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரை தலத்தில் ஒன்றாகும். இது மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி நகரின் அருகில் அமைந்துள்ளது. இவ்வாலயம் கொள்ளிட நதியின் தென்கரையில் அமைந்துள்ளது. இத்தலத்திலிருந்து 2 கி.மி. தொலைவில் கொள்ளிடம் கடலில் கலக்கிறது. இந்திரன் (மகேந்திரன்) வழிபட்டதால் இத்தலத்திற்கு மகேந்திரப்பள்ளி என்று பெயர்.
மகேந்திரப்பள்ளி திருமேனியழகர் கோயில்
கோயிலின் அமைப்பு கிழக்கு நோக்கிய வாயிலாக மூன்று நிலைகளையுடைய சிறிய இராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. வெளித்திருச்சுற்றில் விநாயகர், காசிவிசுவநாதர், திருமால் தேவியருடன், சிவலிங்கம், பைரவர், சூரியன், சந்திரன் சந்நிதிகள் உள்ளன. வலம் முடித்து, முன்னுள்ள வெளவவால் நெத்தி மண்டபத்தையடைந்தால் வலப்புறம் அம்மன் கருவறை உள்ளது. நின்ற திருக்கோலம். உள்ளே சென்றால் வலப்பால் நடராசசபை, சிவகாமியும் மாணிக்க வாசகரும் உடன் காட்சியளிக்கின்றனர். கிழக்கு திசையில் கருவறை. சதுரவடிவ கருவறையில் மூலவர் காட்சியளிக்கிறார். விநாயகருக்கு தனிசன்னதி இருக்கிறது. இவருக்கு இருபுறமும் ராகு, கேது இருவரும் உள்ளனர். ஆலயத்தின் தீர்த்தம் இந்திர தீர்த்தம் என்கிற மகேந்திர தீர்த்தம். இது கோபுர வாயிலுக்கு எதிரே வெளியே உள்ளது.
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் ஆச்சாள்புரம், சீர்காழி தோணியப்பர் கோயில்
செல்லும் வழி கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் இத்தலம் அமைந்துள்ளது. சிதம்பரத்திலிருந்து-சீர்காழி செல்லும் சாலையில் கொள்ளிடம் புதிய பாலத்தைத் தாண்டி, கொள்ளிடம் ஊரை அடைந்து, மெயின் ரோட்டில் வழிகாட்டிப் பலகையுள்ள இடத்தில் இடதுபுறமாக சென்றால் இத்தலத்தை அடையலாம். சிதம்பரத்தில் இருந்து சீர்காழி செல்லும் சாலையில் கொள்ளிடம் சென்று, அங்கிருந்து ஆச்சாள்புரம் வழியாக நல்லூர் - முதலைமேடு ஆகிய ஊர்களைக் கடந்து திருமயேந்திரப்பள்ளியை அடையலாம்.
கோவில் திறக்கும் நேரம் காலை 9.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை, மாலை 6.00 மணி முதல் 7.00 மணி வரை
மகேந்திரப்பள்ளி திருமேனியழகர் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் மயேந்திரப்பள்ளி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் காட்டுமன்னார்குடி
அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி
தங்கும் வசதி காட்டுமன்னார்குடி வட்டார விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் திரு.வேலுதரன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 27 Feb 2021
பார்வைகள் 56
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்