வழிபாட்டுத் தலம்
சுடலை மாடன் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | சுடலை மாடன் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | சுடலை மாடசாமி |
| ஊர் | துவரிமான் |
| வட்டம் | திருப்பரங்குன்றம் |
| மாவட்டம் | மதுரை |
| உட்பிரிவு | 5 |
| திருக்குளம் / ஆறு | துவரிமான் கண்மாய் |
| வழிபாடு | ஒருகால பூசை |
| திருவிழாக்கள் | மாசி மகாசிவராத்திரி |
| காலம் / ஆட்சியாளர் | பாண்டியர் |
| கல்வெட்டு / செப்பேடு | இல்லை |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | துவரிமானில் உள்ள சுடலை மாடன் கோயில் திறந்தவெளியில் மரத்தினடியில் சுடலைமாடன் சிற்பத்துடன் விளங்குகிறது. மற்ற சிற்பங்கள் ஏதும் இங்கு காணப்படவில்லை. |
| தலத்தின் சிறப்பு | சுடலை மாடன் வழிபாடு தென் தமிழகத்தில் புகழ்பெற்ற வழிபாடு. |
|
சுருக்கம்
சுடலைமாடன் வழிபாடு கன்னியாகுமரி, நாகர்கோயில், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றது. மதுரையைப் பொறுத்தவரை பரிவாரத் தேவதைகளுள் ஒன்றாக சுடலை மாடன் வழிபடப்படுகிறார். துவரிமான் கண்மாய் கரையில் இக்கோயில் அமைந்துள்ளது.
|
|
சுடலை மாடன் கோயில்
| கோயிலின் அமைப்பு | துவரிமான் சுடலைமாடன் கோயில் அய்யனார் கோயிலோடு இணைந்த உபகோயிலாக உள்ளது. சுடலைமாடனுக்கு இங்கு தனியாக கருவறை அமைக்கப்படவில்லை. அய்யனாருக்கு தனி சந்நிதி காணப்படுகின்றது. கருவறையில் அய்யனார் பூரணை தேவி, பொற்கலை தேவியுடன் காட்சியளிக்கிறார். கோயில் வளாகத்தின் பரப்பும் சிறிய அளவிலேயே காணப்படுகின்றது. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | தனியார் |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | ஸ்ரீஇரங்கராஜன் பெருமாள் கோயில், சாலைக்கரை முத்தையா கோயில் |
| செல்லும் வழி | மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து மேலக்கால் சாலை வழியாக சுமார் 8 கி.மீ. தொலைவில் துவரிமான் அமைந்துள்ளது. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 55 |
| பிடித்தவை | 0 |