வழிபாட்டுத் தலம்
மலையடிப்பட்டி சிவன் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | மலையடிப்பட்டி சிவன் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | ஆலத்தூர் குடைவரைக் கோயில் |
| ஊர் | மலையடிப்பட்டி |
| வட்டம் | கீரனூர் |
| மாவட்டம் | புதுக்கோட்டை |
| உட்பிரிவு | 1 |
| மூலவர் பெயர் | ஸ்ரீவாசீஸ்வரமுடையார் |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி. 9ஆம் நூற்றாண்டு / தந்தி வர்மன், விடேல் விடுகு முத்தரையன் குவாவன் சாத்தன் |
| கல்வெட்டு / செப்பேடு | பல்லவர் கால கிரந்தக் கல்வெட்டுகள், பாண்டியர், சோழர் தமிழ்க் கல்வெட்டுகள், விஜயநகரர் கல்வெட்டுகள் உள்ளன. இக்குடைவரைக் கோயிலைத் தந்திவர்மன் காலத்தில் கி.பி. 812-இல் விடேல்விடுகு முத்தரையன் குவாவன் சாத்தன் என்பவன் திருவாலந்தூர் மலையில் எடுப்பித்ததாக இங்குள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது. |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | கருவறையில் தாய்ப்பாறையில் இலிங்கவடிவில் இறைவன் உள்ளார். அர்த்தமண்டபத்தில் துவாரபாலகர் சிற்பங்கள் உள்ளன. மண்டபச் சுவரில் கருவறைக்கு நேராக சங்கரநாராயணர், துர்க்கை சிற்பத் தொகுதிகள் புடைப்புச் சிற்பங்களாக அமைந்துள்ளன. ஏழுகன்னிகளின் சிற்பத் தொகுதியும் அமைந்துள்ளது. |
| தலத்தின் சிறப்பு | 1100 ஆண்டுகள் பழமையானது. பல்லவர் காலத்தில் எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இப்பகுதியினை ஆண்ட முத்தரையர்கள் இக்குடைவரையை எடுப்பித்தனர். |
|
சுருக்கம்
சிவன் குடைவரைக் கோயில் சிறிய கருவறை மற்றும் அர்த்த மண்டபத்துடன் காணப்படுகின்றது. கருவறையில் இலிங்க வடிவமுள்ளது. முன்மண்டபத்தில் விநாயகர், சங்கரநாராயணர், கொற்றவை, சப்தமாதர்கள் சிற்பங்கள் உள்ளன. இக்குடைவரைக் கோயிலைத் தந்திவர்மன் காலத்தில் கி.பி. 812-இல் விடேல்விடுகு முத்தரையன் குவாவன் சாத்தன் என்பவன் திருவாலந்தூர் மலையில் எடுப்பித்ததாக இங்குள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது.
|
|
மலையடிப்பட்டி சிவன் கோயில்
| கோயிலின் அமைப்பு | குடைவரைக்கோயில் இது. அர்த்தமண்டபத்தையும், முகமண்டபத்தையும் கொண்டுள்ளது. அர்த்தமண்டபத்தில் துவாரபாலகர் சிற்பங்கள் உள்ளன. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | விஷ்ணு குடைவரைக் கோயில், குன்னாண்டார் கோயில் |
| செல்லும் வழி | புதுக்கோட்டை சென்று அங்கிருந்து கீரனூர் வழியாக மலையடிப்பட்டி செல்லலாம். |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 6.00-12.30 முதல் மாலை 5.00-8.30 வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 May 2017 |
| பார்வைகள் | 700 |
| பிடித்தவை | 0 |