வழிபாட்டுத் தலம்
அய்யனார் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | அய்யனார் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | அய்யனார் கோயில் |
| ஊர் | விராட்டிபத்து |
| வட்டம் | மதுரை மேற்கு |
| மாவட்டம் | மதுரை |
| உட்பிரிவு | 5 |
| திருக்குளம் / ஆறு | விராட்டிபத்து கண்மாய் |
| வழிபாடு | ஒருகால பூசை |
| திருவிழாக்கள் | மாசி மகாசிவராத்திரி |
| காலம் / ஆட்சியாளர் | பாண்டியர் |
| கல்வெட்டு / செப்பேடு | இல்லை |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | விராட்டிபத்து அய்யனார் கோயில் மிகவும் சிறிய கட்டிட அமைப்பைப் பெற்று விளங்குகிறது. சிறிய கருவறையின் மையப்பகுதியில் அய்யனார் துணைவியருடன் வீற்றிருக்கிறார். கருவறையின் வெளியே இருபுறமும் நாகம்மாள், விநாயகர் வலதுபுறமும், கருப்பசாமியும், முருகனும் இடது புறமும் காட்டப்பட்டுள்ளனர். அய்யனாரின் வாகனமாக அமர்நிலையிலுள்ள நந்தி காட்டப்பட்டுள்ளது. |
| தலத்தின் சிறப்பு | கண்மாய்க் கரையில் அமைந்த தலம். பல குடியினருக்கு குலதெய்வக் கோயில். |
|
சுருக்கம்
மதுரை மாவட்டம், மதுரை மேற்குப் பகுதியில் நாகமலைப் புதுக்கோட்டை செல்லும் வழியில் அமைந்திருக்கும் ஊர் விராட்டிப்பத்து. இவ்வூர் பழமையான மக்கள் வாழ்விடப்பகுதியாகும். கால்நடை மேய்ச்சலையும், வேளாண்மையையும் முதன்மையாகக் கொண்ட விராட்டிப்பத்து நாட்டு வைத்தியத்திற்கு பெயர் பெற்ற ஊராகும். இவ்வூரின் கண்மாய்க் கரையின் அருகே அய்யனார் கோயில் அமைந்துள்ளது. விராட்டிப்பத்து அய்யனார் ஊரின் காவல் தெய்வமாகவும், பல இனத்தாருக்கு குலதெய்வமாகவும் விளங்குகிறார்.
|
|
அய்யனார் கோயில்
| கோயிலின் அமைப்பு | விராட்டிப்பத்து என்பது பிராட்டிபற்று என்று பெயரின் மருவிய வழக்காகும். மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு உரிய நிலங்கள் இங்கு அவர் பெயரால் பற்று வைக்கப்பட்டிருந்தன. எனவே இப்பகுதி பிராட்டி பற்று என்று பண்டு வழங்கியது. அவ்வழக்கு மருவி விராட்டிப்பத்து என தற்போது வழக்கத்தில் உள்ளது. விராட்டிப்பத்தில் உள்ள அய்யனார் கோயில் கட்டிட அமைப்பைப் பொறுத்தவரை எளிய வடிவாகும். சிறிய கருவறை, சிறிய மண்டபம் ஆகியவையே இக்கோயிலின் கட்டிட அமைப்புகளாகும். கருவறையில் அய்யனார் துணைவியருடன் அமர்ந்த கோலத்தில் உள்ளார். மண்டபத்தில் பரிவாரத் தெய்வங்களும், வாகனமும் அமைக்கப்பட்டுள்ளன. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறை |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | சமணமலை தமிழ்-பிராமிக் கல்வெட்டு, செட்டிபொடவு தீர்த்தங்கரர் சிற்பங்கள், சமணமலை கருப்பசாமி கோயில் |
| செல்லும் வழி | மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து நாகமலை புதுக்கோட்டை செல்லும் பேருந்தில் சென்றால் விராட்டிபத்து ஊரில் இறங்கலாம். |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 74 |
| பிடித்தவை | 0 |