வழிபாட்டுத் தலம்
அய்யனார் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் அய்யனார் கோயில்
வேறு பெயர்கள் அய்யனார் கோயில்
ஊர் மேட்டு நீரத்தான்
வட்டம் வாடிப்பட்டி
மாவட்டம் மதுரை
தொலைபேசி 91 96884 17579
உட்பிரிவு 5
திருக்குளம் / ஆறு மேட்டு நீரேத்தான் கண்மாய்
வழிபாடு ஒருகால பூசை
திருவிழாக்கள் மாசி மகாசிவராத்திரி
காலம் / ஆட்சியாளர் பாண்டியர்
கல்வெட்டு / செப்பேடு இல்லை
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் மேட்டுநீரேத்தான் அய்யனார் கோயிலில் கருவறையில் அய்யனார் சாஸ்தா கோலத்தில் அமர்ந்துள்ளார். சாஸ்தாவின் வலதுபுறத்தில் விநாயகர் உள்ளார். கோயில் வளாகத்தில் நீண்ட நெடிய உருவமாக கருப்பசாமி வீச்சரிவாளுடன் வீராவேசமாக நிற்கிறார். இடது கையில் சுக்குமாந்தடியை ஊன்றியுள்ளார். இச்சிற்பம் முழுவதும் சுதையாலானது. இச்சிற்பத்தின் முன்னே மற்றுமொரு கருப்பசாமி உருவம் சிறிய உருவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அய்யனார் கருவறை விமானத்தில் அய்யன் சுதைச் சிற்பங்கள் மூன்று தளங்களிலும் இடம் பெற்றுள்ளன. மகா மண்டபத்தின் நாற்புறமும் சுதையாலான பூதகணங்கள் நந்திகளுடன் காட்டப்பட்டுள்ளன.
தலத்தின் சிறப்பு மேட்டுநீரேத்தான் கண்மாய் கரையில் இவ்வய்யனார் கோயில் உள்ளது. பல இனத்தவருக்கு குலதெய்வமாக விளங்குகிறது இக்கோயில்.
சுருக்கம்
மேட்டுநீரேத்தான் அய்யனார் கோயில் ஆதி அய்யனார் கோயில் என வழங்கப்படுகிறது. இப்பகுதியில் அய்யனார் வழிபாடு பன்னெடுங்காலமாக இருந்து வந்துள்ளது என்பதை இது காட்டுகிறது. கேட்ட வரும் தரும் அய்யனார் , சோணையா சாமியை (19 அடி உயரம்) வணங்க வரும் பக்தர்களுக்கு கேட்ட வரம் கிடைக்கிறது என்பது நம்பிக்கை. நேர்த்திக்கடன் நிறைவேற்ற கிடாவெட்டு அதிகளவில் நடக்கிறது. மேட்டுநீரேத்தான் ஆதி அய்யனார் கோயில் புராதன சிறப்பு மிக்கது. இக்கோயில் மேட்டுநீரேத்தான் - வாடிப்பட்டி நீரேத்தான் மக்களுக்கு பாத்தியப்பட்டது. இருகிராமங்களின் மையப்பகுதியில் கோயில் அமைந்திருப்பது சிறப்பு. இக்கோயிலின் வீடு வாடிப்பட்டி நீரேத்தானில் உள்ளது. புரட்டாசியில் கோயில் விழா இரு நாட்கள் நடக்கும். விழா நடத்துவது குறித்து இரு கிராமத்து பெரியோர் கோயிலுக்கு சென்று அய்யனாரிடம் உத்தரவு கேட்பர். பல நேரங்களில் கேட்டதும் உத்தரவு கிடைக்கும். சில நேரங்களில் கிடைக்காது. இதையடுத்து அடுத்த வாரம் கேட்பர். உத்தரவு கொடுத்தால் 15 நாள் சாட்டு துவங்கும். காப்பு கட்டிய பின் கிராமத்தவர்கள் வெளியூர் போக மாட்டார்கள். சாட்டுதல் தெரிந்தால் வெளியூர்காரர்கள் கிராமத்தை விட்டு வெளியேறி சென்று விடுவர்.
அய்யனார் கோயில்
கோயிலின் அமைப்பு பச்சைப்பசேலென்ற வயல்வெளிகளுக்கு நடுவே மேட்டுநீரேத்தான் ஆதிஅய்யனார் கோயில் அமைந்துள்ளது. மிக உயரமான கொடிமரம் இக்கோயிலுக்கு உரியது. கொடிமரம் தாண்டி பலிபீடம், மற்றும் அய்யனின் யானை வாகனம் அமைக்கப்பட்டுள்ளது. தற்காலத்தில் அமைக்கப்பட்டுள்ள மிக நீண்ட மண்டபம் நெகிழித் தகடுகளால் விழாக்காலத்திற்காக போடப்பட்டுள்ளது. தொடர்ந்து மகா மண்டபம் சிறுகோபுர நுழைவாயிலுடன் வரவேற்கிறது. தொடர்ந்து அய்யனின் கருவறை. கருவறை சதுர வடிவில் உள்ளது. கருவறை விமானம் திராவிடப் பாணியில் மூன்று தளங்களைக் கொண்டதாக உள்ளது. மூன்று தளங்களும் சுதைச் சிற்பங்களைக் கொண்டுள்ளது. கோயில் வளாகத்தில் சோணையா சாமியின் 19 அடி உயர சுதைச் சிற்பம் பிரம்மாண்டமாய் உள்ளது.
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறை
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் விநாயகர் கோயில், கிருஷ்ணர் கோயில், சின்னமநாயக்கன்பட்டி தொட்டிச்சி அம்மன் கோயில்
செல்லும் வழி மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து வாடிப்பட்டி செல்லும் பேருந்தில் ஏறி, வாடிப்பட்டியில் இருந்து மேட்டுநீரத்தானை அடையலாம்.
கோவில் திறக்கும் நேரம் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை
அய்யனார் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் மேட்டு நீரேத்தான்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் வாடிப்பட்டி
அருகிலுள்ள விமான நிலையம் மதுரை
தங்கும் வசதி வாடிப்பட்டி வட்டார விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் இராமச்சந்திரன், அஜித்நிவி, அசோக் வெங்கடேசன், கவுதம் வெங்கடேசன், மீனாட்சி சுந்தரேசுவரன், சுந்தரராஜன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 342
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்