Back
வழிபாட்டுத் தலம்
திருஎவ்வுள் வீரராகவப் பெருமாள் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் திருஎவ்வுள் வீரராகவப் பெருமாள் கோயில்
வேறு பெயர்கள் திருஎவ்வுள், வீச்சாரண்யச் ஷேத்ரம், எவ்வுள்ளுர்
ஊர் திருவள்ளூர்
வட்டம் திருவள்ளூர்
மாவட்டம் திருவள்ளூர்
உட்பிரிவு 2
மூலவர் பெயர் வீரராகவப் பெருமாள்
தாயார் / அம்மன் பெயர் கனக வல்லி (வஸு மதி தேவி)
திருக்குளம் / ஆறு ஹ்ருத்தபாப நாசினி
ஆகமம் பாஞ்சராத்திரம்
வழிபாடு ஆறு கால பூசை
திருவிழாக்கள் தை மாதம் பிரம்மோற்சவம், சித்திரை மாதம் பிரம்மோற்சவம், பவித்ர உற்சவம், தை அமாவாசை, வைகுண்ட ஏகாதசி
காலம் / ஆட்சியாளர் கி.பி.8-9-ஆம் நூற்றாண்டு / பல்லவர், சோழர், விசயநகரர்
கல்வெட்டு / செப்பேடு பிற்காலப் பல்லவ மன்னர்கள் மற்றும் விசயநகரர் காலக் கல்வெட்டுகள் இங்கு காணக்கிடைக்கின்றன.
சிற்பங்கள் வீரராகவப் பெருமாள், புஜங்கசயனம் கிழக்கு நோக்கிய திருமுகமண்டலம். கனகவல்லித் தாயார் தனி சன்னதியில் அமர்ந்த கோலம். லட்சுமி நரசிம்மர், சக்கரத்தாழ்வார் சன்னதிகளும் சிறப்புப் பெற்றவை.
தலத்தின் சிறப்பு 1200 ஆண்டுகள் பழமையானது. திவ்ய தேசம். திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த திருப்பதிகளுள் இதுவும் ஒன்று.
சுருக்கம்
இராவணனைக் கொன்ற இராமபிரான் தான் எவ்வுள்ளில் கிடக்கிறாரென்று திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்தலத்திற்கு சென்னையிலிருந்து எண்ணற்ற பேருந்துகள் உண்டு. திருமழிசையாழ்வாரால் ஒரு பாடலாலும் திருமங்கையாழ்வாரால் பத்துப் பாசுரங்களிலும் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம். என்னுடைய இன்னமுதை, எவ்வுள் பெருமலையை என்று தமது பெரிய திருமடலில் திருமங்கை மயங்கி நிற்பார். திருவேங்கடவனுக்குள்ள சுப்ரபாதம் போன்று இப்பெருமானுக்கும் வீரராகவ சுப்ரபாதம் உண்டு. ஸ்ரீகிங்கிருஹேசஸ்துதி என்ற பெயரால் சுவாமி தேசிகன் இப்பெருமானுக்கு தனி ஸ்துதி நூல் ஒன்று யாத்துள்ளார். வடலூர் இராமலிங்க அடிகளார் இப்பெருமாள் மீது பக்திகொண்டு திருப்பஞ்சகம் என்னும் ஐந்து பாக்களைப் பாடியுள்ளார். இத்தலம் புத்திரப்பேறளிக்கும் தலமாகவும், திருமணமாகாதவர்கள் வேண்டிக்கொண்டால் திருமணம் சித்திக்கும் தலமாகவும், எத்தகைய கொடூர நோயாளியும் இப்பெருமானை மனமுருகவேண்டி இங்குள்ள ஹ்ருத்த பால நாசினியில் நீராடி நோய் நீங்கப் பெறுவதால் நோய் நீக்கும் ஸ்தலமாகவும், ஒரு பெரிய பிரார்த்தனை ஸ்தலமாக விளங்குகிறது. இப்பெருமானை வேண்டினோர்க்கு நோய் நீங்கப்பெறுவது கண்கூடு. எனவே இப்பெருமானுக்கு வைத்திய வீரராகவன் என்னும் சிறப்புத் திருநாமமுண்டு. சகல பாபங்களையும் போக்கும் பாபநாசினியாகத் திகழ்கிறது இத்தலம். அமாவாசையன்று இதில் நீராடுவது சகல பாபங்களையும் போக்குமென்பது ஐதீஹம். தை அமாவாசையன்று இங்கு பெருந்திரளாக பக்தர்கள் கூடியிருந்து நீராடுவர். ஹிருத்த, இருதயத்தில் உள்ள, பாபநாசினி-பாபங்களை நாசம் செய்யவல்லதால் இத்தீர்த்தத்திற்கு ஹ்ருத்த பாபநாசினி என்னும் பெயருண்டாயிற்று இத்தீர்த்தமும் சன்னதியும் அஹோபில மடத்தின் நிர்வாகத்திற்குட்பட்டதாகும்.
திருஎவ்வுள் வீரராகவப் பெருமாள் கோயில்
கோயிலின் அமைப்பு இக்கோயில் கருவறை விமானம் விஜயகோடி விமானம் என்றழைக்கப்படுகிறது. கருவறையில் எம்பெருமான் பள்ளி கொண்ட திருக்கோலத்தில் உள்ளார். கனகவல்லித் தாயாருக்கு தனி சன்னதி உண்டு. லட்சுமி நரசிம்மர், சக்கரத்தாழ்வார் சன்னதிகளும் சிறப்புப் பெற்றவை.
பாதுகாக்கும் நிறுவனம் அகோபில மடம்
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் கோயில் பதாகை சுந்தரராஜப் பெருமாள் கோயில், கூவம் அருள்மிகு திரிபுராந்தகர் கோயில், திருத்தணி முருகன் கோயில், திருத்தணி வீரட்டானேசுவரர் கோயில், தண்டலம் தடுத்தாலீசுவரர் கோயில், திருவாலாங்காடு வடவாரண்யேசுவரர் கோயில்
செல்லும் வழி சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் பேருந்துகள் பலவும் இவ்வூர் வழியாகவே செல்கின்றன.
கோவில் திறக்கும் நேரம் காலை 6.30 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 வரை
திருஎவ்வுள் வீரராகவப் பெருமாள் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் திருவள்ளூர்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் திருவள்ளூர்
அருகிலுள்ள விமான நிலையம் சென்னை - மீனம்பாக்கம்
தங்கும் வசதி திருவள்ளூர் நகர விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 05 Dec 2018
பார்வைகள் 51
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்