Back
வழிபாட்டுத் தலம்
பவளவண்ணப்பெருமாள் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் பவளவண்ணப்பெருமாள் கோயில்
வேறு பெயர்கள் திருப்பவளவண்ணம்
ஊர் பெரிய காஞ்சி
வட்டம் காஞ்சிபுரம்
மாவட்டம் காஞ்சிபுரம்
உட்பிரிவு 2
மூலவர் பெயர் பவள வண்ணர்
தாயார் / அம்மன் பெயர் பவள வல்லி
திருக்குளம் / ஆறு சக்ர தீர்த்தம்
வழிபாடு நான்கு கால பூசை
திருவிழாக்கள் வைகுண்ட ஏகாதசி, இராமநவமி
காலம் / ஆட்சியாளர் கி.பி.7-ஆம் நூற்றாண்டு
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் இந்த பச்சை வண்ணர் ஆதிசேடன் மீது அமர்ந்த திருக்கோலத்தில் பரமபத நாதனாக எழுந்தருளியுள்ளார்.
தலத்தின் சிறப்பு 1200 ஆண்டுகள் பழமையானது. திருமங்கையாழ்வார்பாடல் பெற்ற திருப்பதி.
சுருக்கம்
எம்பெருமானின் நிறத்தைக்கொண்டு மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம் இது ஒன்றுதான். எம்பெருமான் நான்குயுகங்களிலும்தான் கொண்ட 4 வர்ணங்களை இங்கு காட்டிக்கொள்வதாக ஐதீஹம். இந்தப் பவள வண்ணர் கோவிலுக்கு எதிரிலேயே பச்சைவண்ணர் (மரகத வண்ணர்) கோவில் அமைந்துள்ளது இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று எதிர்த்திசையில் அமைந்துள்ளது. காலாண்டார் கோவிலில் பவள வண்ணரும் அதற்கெதிரில் அமைந்துள்ள பெரிய கம்மாளர் தெருவில் பச்சை வண்ணர் கோவிலும் அமைந்துள்ளது. இவ்விரண்டு பெருமாள்களையும் கூர்ந்து நோக்கினால் வண்ண வேறுபாடுகளை உணரலாம். பச்சை வண்ணர் கோவிலை திருமங்கை மங்களாசாசனம் செய்யவில்லை. இருப்பினும் இங்கு வரும் பக்தர்கள் பவளவண்ணரைச் சேவித்துவிட்டு பச்சை வண்ணரையும் சேவித்துச் செல்வதையே மரபான கொள்கையாகக் கொண்டுள்ளனர். இந்த பச்சை வண்ணர் ஆதிசேடன் மீது அமர்ந்த திருக்கோலத்தில் பரமபத நாதனாக எழுந்தருளியுள்ளார். இவர் பிரும்மரிஷிக்கு காட்சி கொடுத்ததாக ஐதீஹம். இக்கோவில்கள் சென்னை ஸ்ரீ கரலபாடி ஆழ்வாரய்யா சாரீட்டீஸ் எனப்படும் அறக்கட்டளை நிர்வாகத்திற்குட்பட்டது. சுமார் நூறாண்டுகட்குமுன் வைணவ சம்பிரதாயத்தில் இருந்த கரலபாடி ஆழ்வாரய்யாவின் கனவில் தோன்றி பழுதுற்ற இத்தலங்களைப்புதுப்பிக்க எம்பெருமானே கட்டளை இட்டதாகவும் செய்தி. திருமங்கையாழ்வாரால் மட்டும் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம். அச்வினி தேவதைகட்கும், பார்வதி தேவிக்கும் பெருமாள் காட்சி கொடுத்ததாக ஐதீஹம். பிள்ளைப் பெருமாளயங்கார் தமது நூற்றெட்டு திருப்பதியந்தாதியில் இதே வண்ணமயக்கை நிரல்படுத்தி இத்தலத்திற்குப் பாடல் இட்டுள்ளார்.
பவளவண்ணப்பெருமாள் கோயில்
கோயிலின் அமைப்பு இக்கோயில் விமானம் ப்ரவாள விமானம் என்னும் கட்டிட வகையைக் கொண்டுள்ளது.
பாதுகாக்கும் நிறுவனம் ஸ்ரீ கரலபாடி ஆழ்வாரய்யா சாரீட்டீஸ்
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் வைகுண்டப் பெருமாள் கோயில், வரதராஜப் பெருமாள் கோயில், பச்சைவண்ணப் பெருமாள் கோயில்
செல்லும் வழி இந்தப் பவளவண்ணர் கோவில் பெரிய காஞ்சிபுரத்தில் உள்ள காலாண்டார் தெருவில் உள்ளது. காஞ்சிபுரம் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 2 பர்லாங் தொலைவு.
கோவில் திறக்கும் நேரம் காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 வரை
பவளவண்ணப்பெருமாள் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் காஞ்சிபுரம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் காஞ்சிபுரம்
அருகிலுள்ள விமான நிலையம் சென்னை - மீனம்பாக்கம்
தங்கும் வசதி காஞ்சிபுரம் நகர விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    6 Files

  • TVA_TEM_000200/TVA_TEM_000200_த...

  • TVA_TEM_000200/TVA_TEM_000200_த...

  • TVA_TEM_000200/TVA_TEM_000200_த...

  • TVA_TEM_000200/TVA_TEM_000200_த...

  • TVA_TEM_000200/TVA_TEM_000200_த...

  • TVA_TEM_000200/TVA_TEM_000200_த...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Nov 2018
பார்வைகள் 74
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்