வழிபாட்டுத் தலம்
பழவேற்காடு சின்ன பள்ளிவாசல்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | பழவேற்காடு சின்ன பள்ளிவாசல் |
|---|---|
| வேறு பெயர்கள் | அல்மஜிதுல் முஷர்ரஃப் பள்ளிவாசல் |
| ஊர் | பழவேற்காடு |
| வட்டம் | பொன்னேரி |
| மாவட்டம் | திருவள்ளூர் |
| உட்பிரிவு | 8 |
| வழிபாடு | ஐந்து காலத் தொழுகை |
| திருவிழாக்கள் | ரமலான், பக்ரீத், மிலாடி நபி |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.1708 |
| கல்வெட்டு / செப்பேடு | இல்லை |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | இல்லை |
| தலத்தின் சிறப்பு | 400 ஆண்டுகள் பழமையானது. |
|
சுருக்கம்
பழவேற்காடு சின்ன பள்ளிவாசல் அல்மஜிதுல் முஷர்ரஃப் பள்ளிவாசல் எனப்படும். அல்மஜிதுல் முஷர்ரஃப் என்னும் இசுலாம் பெரியாரின் பெயரில் இப்பள்ளிவாசல் கட்டப்பட்டது. இதனைக் கட்டியவர்கள் முகம்மது பீர் சாகிப், முகம்மது அலி நயினா சாகிப் மற்றும் முகம்மது பீர் பக்கர் சாகிப் என்பவர்கள் ஆவர். இப்பள்ளிவாசலிலுள்ள சூரிய நிழல் கடிகாரம் புகழ் பெற்றது. இந்த சூரிய நிழல் கடிகாரம் கி.பி.1915-ஆம் ஆண்டு அல்ஹாஜ் மௌலானா முகம்மது சாகிப், முகம்மது அப்துல்லா அவர்களால் அமைக்கப்பட்டது. உலகிலேயே ஒரே மாதிரியாக இரு கடிகாரங்களில் ஒன்றான இந்த சூரிய நிழல் கடிகாரம் போல் லண்டனில் உள்ள மசூதி ஒன்றில் மட்டுமே உள்ளது.
|
|
பழவேற்காடு சின்ன பள்ளிவாசல்
| கோயிலின் அமைப்பு | இந்த மசூதி இந்தோ-அரேபிய கட்டிடக்கலைப் பாணியில் கட்டப்பட்டுள்ளது. நுழைவாயில் முகப்பின் மேலே இரண்டு மினார்களைக் கொண்டதாக உள்ளது. மினார்கள் உயரத்தில் குறைந்தவை. உள்ளே நுழைந்தவுடன் நீண்ட செவ்வக வடிவில் வழிபாட்டிடம் விளங்குகிறது. தூண்களைப் பெற்று முன்மண்டபத்தைப் போன்று காட்சியளிக்கிறது. மையப்பகுதியில் இறைவனுக்குரிய இடமாகத் திகழ்கிறது. மேற்கூரைப்பகுதியில் பிறைவடிவத்தினை உச்சியில் கொண்ட இரண்டு மினார்களும், ஒலிபெருக்கிகளும், சிறிய உயரம் குறைந்த ஸ்தூபிகளும் காணப்படுகின்றன. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | பழவேற்காடு மசூதி கமிட்டிதாரர்கள் |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | பழவேற்காடு- டச்சு கல்லறை, பழவேற்காடு ஏரி |
| செல்லும் வழி | சென்னையில் இருந்து பொன்னேரி வழியாக ஆந்திரம் செல்லும் வழியில், 60 கி.மீ., தொலைவில் பழவேற்காடு அமைந்துள்ளது, |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 5.00 முதல் பகல் 12.00 மணி வரை மாலை 5.00 முதல் இரவு 7.00 மணி வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 27 Feb 2021 |
| பார்வைகள் | 33 |
| பிடித்தவை | 0 |