வழிபாட்டுத் தலம்
ஸ்ரீஈடாடி அய்யனார் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் ஸ்ரீஈடாடி அய்யனார் கோயில்
வேறு பெயர்கள் அய்யன் கோயில்
ஊர் மாடக்குளம்
வட்டம் மதுரை மேற்கு
மாவட்டம் மதுரை
தொலைபேசி 9994163235
உட்பிரிவு 5
திருக்குளம் / ஆறு மாடக்குளம் கண்மாய்
வழிபாடு ஒருகால பூசை
திருவிழாக்கள் மாசி மகாசிவராத்திரி
காலம் / ஆட்சியாளர் பாண்டியர்
கல்வெட்டு / செப்பேடு இல்லை
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் மாடக்குளம் ஸ்ரீஈடாடி அய்யனார் கோயிலில் முத்துக்கருப்பணசாமி காவல் தெய்வமாக உள்ளார். குதிரையில் அமர்ந்து செல்லும் முத்துக்கருப்பணசாமியின் சுதைச்சிற்பம் பெரிய அளவில் திறந்த வெளியில் இக்கோயில் வளாகத்தில் உள்ளது. இச்சிற்பத்தொகுதியின் பின்னே சங்கிலிக்கருப்பசாமி வீரச்சங்கிலி மார்பில் அணிந்து, பக்கவாட்டுக் கொண்டையலங்காரம் கொண்டு, முறுக்கிய மீசையுடன் யானையில் வருகிறார். சின்னக்கருப்பசாமி மற்றும் பெரிய கருப்பசாமி இரு காவல் தெய்வங்களும் குதிரையில் அமர்ந்து வருகின்றனர். இவ்விரு சுதைச்சிற்பங்களுக்கும் முன்னே பெரிய வெள்ளைக் குதிரையில் அய்யனார் சாட்டையை சுழற்றியபடி அமர்ந்து வருகின்ற மற்றுமொரு பிரம்மாண்டமான சுதைச்சிற்பம் இக்கோயிலில் இடம் பெற்றுள்ளது. கருவறையில் அய்யனார் பூரணை புஷ்கலை தேவியுடன் உலோகச் சிற்பமாக காட்சியளிக்கிறார். கருவறையின் முன்னே அய்யனாரின் யானைவாகனம் கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. யானையின் இருபுறமும் நந்தி காட்டப்பட்டுள்ளது. ஓங்கிய அரிவாளுடன் கருப்பணசாமி உருவமும், அருகில் ஒரு பெண் தெய்வமும் கற்சிற்பமாக வளாகத்தில் காட்டப்பட்டுள்ளனர். மதிற்சுவரையொட்டி சுதையாலான குதிரைகள் பல வண்ணங்களில் செய்யப்பட்டு காணிக்கையாக அளிக்கப்பட்ட நிலையில் நிற்கின்றன. கோயில் வளாகத்தின் வலதுபுறத்தில் குதிரை மீதமர்ந்த அய்யனார் உருவம் மிகப்பெரும் வடிவில் கையில் சாட்டையுடன், முறுக்கிய மீசையுடனும் அமைக்கப்பட்டுள்ளது.
தலத்தின் சிறப்பு மாடக்குளம் கண்மாய் மதுரைக்கு குடிநீர் வழங்கும் மிகப்பெரிய நீர்நிலைகளுள் ஒன்றாகும். இந்நீர்நிலைக் கரையில் அமைந்துள்ள ஸ்ரீஈடாடி அய்யனார் கோயில் நீர்நிலைக் காக்கும் தெய்வமாவார்.
சுருக்கம்
மதுரையின் முக்கியமான நீராதாரங்களில் மாடக்குளம் கண்மாயும் ஒன்றாகும். மதுரையின் மேற்குப்பகுதியில் மாடக்குளம் எனும் சிற்றூரை ஒட்டி, ஊருடன் கண்மாய் பெயரும் ஒன்றாக இருக்கிறது. கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை மாடக்குளம் கண்மாயும், திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாயும் ஒன்றாக இணைந்து, இரட்டை சகோதரிகளாக இருந்தன. இவ்விரண்டு கண்மாய்களுக்கும் ஒரே மறுகால்தான் இருந்தது. பரந்து விரிந்த பரப்பளவினால் ‘கடல்’ போன்று இக்கண்மாய் காட்சியளிக்கிறது. மாடக்குளம் ஸ்ரீஈடாடி அய்யனார் கோயில் மலையத்துவச பாண்டிய மன்னனால் கட்டப்பட்டது என்று தலபுராணம் கூறுகிறது. சிவபெருமான் மோகினிக்கு ஈடாக ஆடியதால் ஈடாடி என்று அய்யனார் இங்கு அழைக்கப்படுகிறார் என்பதுவும் தலபுராணக்கூற்று. கரைச்சாமி என்ற மற்றொரு பெயர் கொண்டு அய்யனார் இங்கு விளங்குகிறார். மதுரை நகருக்கு குடிநீர் வழங்கும் மிகப்பெரிய கண்மாயான மாடக்குளத்தினைக் காப்பதால் அய்யனார் இங்கு கரைச்சாமி என்று போற்றப்படுகிறார்.
ஸ்ரீஈடாடி அய்யனார் கோயில்
கோயிலின் அமைப்பு இக்கோயில் வளாகம் பெரியதாக அமைக்கப்பட்டுள்ளது. மதிற்சுவருடன் கூடிய பரந்த வளாகத்தில் குதிரை சுதைச் சிற்பங்களும், யானை மேல் அமர்ந்த சங்கிலிக் கருப்பணசாமி, முத்துக்கருப்பணசாமியும், குதிரைகளில் அமர்ந்துள்ள பெரியகருப்பசாமியும், சின்னக்கருப்பசாமியும், வெண்குதிரையின் மீதமர்ந்து வரும் அய்யனாரும் ஆகிய சுதையாலான வண்ணந்தீட்டப்பட்ட சிற்பங்கள் காணப்படுகின்றன. மேலும் பலிபீடமும், அய்யனின் வாகனமும் முற்றவெளியிலேயே அமைக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து உயரமான படிக்கட்டுகளுடன் கூடிய தூண்களுடன் அமைந்த முன் மண்டபம் விளங்குகிறது. அதனையடுத்து மகாமண்டபம் காணப்படுகிறது. தொடர்ந்து கருவறை விளங்குகிறது. கருவறை விமானம் முழுவதும் சுதை வேலைப்பாடுகளால் விளங்குகிறது. ஒரு தளம் உடையதாய் கருவறை விமானம் காட்சியளிக்கிறது.
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறை
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் ஸ்ரீமடைக்கருப்பர் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், தென்பரங்குன்றம்
செல்லும் வழி மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து மாடக்குளம் வரை பேருந்துகள் செல்கின்றன.
கோவில் திறக்கும் நேரம் காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை
ஸ்ரீஈடாடி அய்யனார் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் மாடக்குளம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் மதுரை
அருகிலுள்ள விமான நிலையம் மதுரை
தங்கும் வசதி மதுரை நகர விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் குணா அமுதன், சதீஷ்குமார், இந்தியா லைப், அ.முகேஷ், மகுவீர் பிரகாஷ், பெருவழுதி, பிடிஎச் வேர்ல்டு, சந்தோஷ் ராஜா, சதீஷ்குமார், ஷ்யாம்சுந்தர் அய்யணன், எம்.டி.கே. சூர்யா, வசந்த் ரவி, விஜயகுமார்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 136
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்