வழிபாட்டுத் தலம்
அய்யனார் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் அய்யனார் கோயில்
வேறு பெயர்கள் அய்யனார் கோயில்
ஊர் கீழமதிகட்டினான்
வட்டம் மதுரை மேற்கு
மாவட்டம் மதுரை
உட்பிரிவு 5
திருக்குளம் / ஆறு கீழமதிகட்டினான் கண்மாய்
வழிபாடு ஒருகால பூசை
திருவிழாக்கள் மாசி மகாசிவராத்திரி
காலம் / ஆட்சியாளர் பாண்டியர்
கல்வெட்டு / செப்பேடு இல்லை
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் கீழமதிகட்டினான் அய்யனார் கோயிலில் சுதையாலான சிற்பங்களின் எண்ணிக்கை அதிகம். இச்சிற்பங்கள் வண்ணங்கள் பூசப்பெற்றும், அழகுடன் அமைக்கப்பெற்றும், தமிழக நாட்டார் சிற்பக்கலை மரபிற்கு சான்றாகத் திகழ்கிறது. அய்யனார் வெண்புரவியில் அமர்ந்துள்ளார். புரவி முன்னங்கால்களைத் தூக்கியபடி உள்ளது. அவற்றின் கால்களைத் தங்களது தோள்களில் தாங்கியபடி இரண்டு பூதங்கள் நிற்கின்றன. இப்பூதங்களுக்கு நடுவே, குதிரைக்குக் கீழே மகாகாளி பத்து கைகளுடன் ஆயுதங்கள் ஏந்தியபடி தலைமாலையினை கழுத்தில் அணிந்து கோபக்கனலுடன் நிற்கிறாள். குதிரையின் ஒருபுறம் அய்யப்பன் புலியின் மீது வருகின்ற சிற்பமும் அவரை வணங்கிய நிலையில் இராஜசேகர பாண்டியனும், அவர் மனைவியும் நிற்கின்ற சிற்பமும் அமைக்கப்பட்டுள்ளன. காவல் தெய்வங்களாக கருப்பசாமி விளங்குகின்றார். அக்கினிவீரபத்திரர், ஸ்ரீகருப்பண்ணசாமி, முத்துக்கருப்பண்ணசாமி, ஸ்ரீசோணை சாமி, ஸ்ரீசமைய கருப்பணசாமி, ஸ்ரீநாகம்மாள் ஆகிய சிற்பங்கள் கல்லால் ஆனவை. ஸ்ரீஇருளாயி அம்மன், ஸ்ரீஇருளப்பசாமி, பெரிய கருப்பசாமி, ஸ்ரீசங்கையா சாமி, தடாதகை அம்மன் ஆகிய சிற்பங்கள் சுதையால் வடிக்கப்பெற்றும் வண்ணம் பூசப்பெற்றுள்ளன. கருப்பசாமி, அக்கினி வீரபத்திரர் ஆகிய தெய்வங்களின் சுதைச் சிற்பங்கள் சன்னிதிகளின் முகப்புத் தோரணங்களின் நடுவே காட்டப்பட்டுள்ளன.
தலத்தின் சிறப்பு கண்மாய்க் கரையில் அமைந்த தலம். பல குடியினருக்கு குலதெய்வக் கோயில்.
சுருக்கம்
மதுரை மாவட்டம் மதுரை மேற்கு வட்டத்தில் அமைந்துள்ள ஊர் கீழமதிகட்டினான். இங்குள்ள அய்யனார் கோயில் மிகவும் புகழ் பெற்றது. இக்கோயில் பெரிய பரந்த வளாகத்தினை உடையதாக உள்ளது. அய்யனார், கருப்பசாமி, அக்கினிவீரபத்திரர் ஆகிய தெய்வங்களுக்கு தனித் தனியே சந்நிதிகள் உள்ளன. இந்த சந்நிதிகளுக்கு நடுவே அமைந்துள்ள அய்யனார் குதிரையில் அமர்ந்து வரும் மிகப்பெரிய பிரம்மாண்டமான சிற்பம் மிகவும் எழில்வாய்ந்தது.
அய்யனார் கோயில்
கோயிலின் அமைப்பு கீழமதிகட்டினான் அய்யனார் கோயில் கருவறை விமானம் ஒரு தளத்தைப் பெற்று விளங்குகிறது. திராவிடபாணியில் விமானம் அமைந்துள்ளது. விமானத்தின் தளச்சிற்பங்கள் சுதையால் செய்யப்பட்டு வண்ணம் தீட்டப்பெற்றவை. இக்கோயில் முழுவதும் செங்கல் கட்டிடமாக காட்சியளிக்கிறது. அய்யனார் சன்னிதி முதன்மையாக உள்ளது. படிக்கட்டுகளுடன் கூடிய மகா மண்டபத்தைத் தொடர்ந்தாற் போன்று கருவறை காட்சியளிக்கிறது. மகா மண்டபம் தூண்களுடன் அமைந்துள்ளது. அக்கினி வீரபத்திரருக்கு தனியே சந்நிதி உள்ளது.
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறை
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் ஸ்ரீசாலைக்கரை முத்தையா கோயில், ஸ்ரீநாகமலை முத்தையா சுவாமி கோயில்
செல்லும் வழி மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து நாகமலை புதுக்கோட்டை வழியே செல்லும் பேருந்தில் சென்றால் கீழமதிகட்டினான் ஊரில் இறங்கலாம்.
கோவில் திறக்கும் நேரம் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை
அய்யனார் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் கீழமதிகட்டினான்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் மதுரை
அருகிலுள்ள விமான நிலையம் மதுரை
தங்கும் வசதி மதுரை நகர விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் Farm box, இராஜா புண்ணியவான், மாரிமுத்து, மீம்ஸ் கிங்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 59
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்