வழிபாட்டுத் தலம்
அய்யனார் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | அய்யனார் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | அய்யனார் கோயில் |
| ஊர் | கீழஉறப்பனூர் |
| வட்டம் | திருமங்கலம் |
| மாவட்டம் | மதுரை |
| உட்பிரிவு | 5 |
| திருக்குளம் / ஆறு | கீழஉறப்பனூர் கண்மாய் |
| வழிபாடு | ஒருகால பூசை |
| திருவிழாக்கள் | மாசி மகாசிவராத்திரி |
| காலம் / ஆட்சியாளர் | பாண்டியர் |
| கல்வெட்டு / செப்பேடு | இல்லை |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | கீழஉறப்பனூரில் உள்ள அய்யனார் கோயில் ஒரு திறந்த வெளியில் அமைந்துள்ள குலதெய்வக் கோயிலாகும். அய்யனார் நடுவில் இருக்க, இருபுறமும் பூரணா, புஷ்கலாதேவி அமர்ந்துள்ளனர். அய்யன் ஜடாபாரம் கொண்டு விளங்குகிறார். தேவியர் இருவரும் கையில் மலர்களைப் பிடித்துள்ளனர். |
| தலத்தின் சிறப்பு | கண்மாய்க் கரையில் அமைந்த தலம். பல குடியினருக்கு குலதெய்வக் கோயில். |
|
சுருக்கம்
கீழஉறப்பனூர் அய்யனார் கோயில் பல குடும்பங்களுக்கு குலதெய்வக் கோயிலாக விளங்கும் சிறப்புடையது. கோயில் கட்டுமானம் ஏதுமின்றி மரத்தடி சாமியாக எளிமையுடன் விளங்கும் அய்யனார் இக்கிராமத்தில் காலங்காலமாக வழிபடப்பட்டு வருகிறார்.
|
|
அய்யனார் கோயில்
| கோயிலின் அமைப்பு | கீழஉறப்பனூரில் உள்ள அய்யனார் கோயில் ஒரு திறந்த வெளியில் அமைந்துள்ள குலதெய்வக் கோயிலாகும். அய்யனார் நடுவில் இருக்க, இருபுறமும் பூரணா, புஷ்கலாதேவி அமர்ந்துள்ளனர். அய்யன் ஜடாபாரம் கொண்டு விளங்குகிறார். தேவியர் இருவரும் கையில் மலர்களைப் பிடித்துள்ளனர். கோயில் கட்டுமானம் ஏதுமில்லை. மரத்தின் கீழே எளிய வடிவில் தொன்மை மிக்க வழிபாட்டு மரபாய் அய்யனார் அமர்ந்துள்ளார். |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறை |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | கல்லடி முத்தையா கோயில், கல்யாண கருப்பசாமி கோயில் |
| செல்லும் வழி | மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து திருமங்கலம் சென்று, அங்கிருந்து திருவேடகம் செல்லும் பேருந்தில் ஏறி, வழியில் கீழஉரப்பனூரில் இறங்கலாம். |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 232 |
| பிடித்தவை | 0 |