Back
வழிபாட்டுத் தலம்
அருள்மிகு அழகதேவர் திருக்கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் அருள்மிகு அழகதேவர் திருக்கோயில்
வேறு பெயர்கள் குலதெய்வக் கோயில்
ஊர் சொரிக்காம்பட்டி
வட்டம் திருமங்கலம்
மாவட்டம் மதுரை
உட்பிரிவு 5
திருக்குளம் / ஆறு சொரிக்காம்பட்டி கண்மாய்
வழிபாடு ஒருகால பூசை
திருவிழாக்கள் பொங்கல், சல்லிக்கட்டு
காலம் / ஆட்சியாளர் பொ.ஆ.1600
கல்வெட்டு / செப்பேடு இக்கோயிலில் தற்காலத்தில் வெட்டப்பட்ட இரண்டு கல்வெட்டுகள் உள்ளன. இரு கல்வெட்டுகளும் தோரண வாயிலின் இருபுறமும் வைக்கப்பட்டுள்ளது. பொ.ஆ.2002-இல் இக்கோயில் கட்டப்பட்டதை தெரிவிக்கும் ஒரு கல்வெட்டும், பொ.ஆ.2011-இல் இக்கோயிலுக்கு தோரணவாயில் அமைத்துக் கொடுத்தவர் விபரம் கூறும் மற்றொரு கல்வெட்டும் இங்குள்ளன.
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் கோயிலின் நுழைவில் அமைக்கப்பட்டுள்ள தோரண வாயிலின் மேற்பகுதியில் காளை மாட்டின் திமிலைப் பிடித்தபடி, திமிறும் மாட்டை அடக்கும் முகமாக அழகதேவர் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. மாட்டின் வாலைப் பிடித்தபடி மற்றொரு வீரர் நிற்கிறார். இருவருடைய ஆடையும், தோற்றமும் பண்டைய தமிழ்மரபை, பண்பாட்டை வெளிப்படுத்துகிறது. இச்சிற்பத்தின் இருபுறமும் காளம் என்னும் இசைக்கருவியை ஊதியபடி இரு வீரர்கள் காட்டப்பட்டுள்ளனர். கருவறையில் உள்ள அழகதேவர் சிற்பம் கல்லால் ஆனது. இச்சிற்பமும் அழகதேவர் ஏறுதழுவிய நிலையில் செதுக்கப்பட்டுள்ளது.
தலத்தின் சிறப்பு 400 ஆண்டுகள் பழமையானது. வீரர் வழிபாட்டுக்குரிய கோயில்.
சுருக்கம்
மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டத்தில் அமைந்துள்ள சொரிக்காம்பட்டி ஊரில் சல்லிக்கட்டு வீரர் ஒருவருக்கு கோயில் எடுப்பிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் 400 ஆண்டுகள் பழமையானது. மதுரை மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களில் ஆண்டுதோறும் தைமாதம் பொங்கல் திருவிழாவின் போது சல்லிக்கட்டு எனப்படும் ஏறுதழுவுதல் விளையாட்டு வீரர்களிடையே நடைபெறும்.அந்நாளில் 400 ஆண்டுகளுக்கு முன் மாடுபிடி சண்டையில் உயிரிழந்த வீரர் அழகதேவர் என்பவருக்கு கருப்பையாத் தேவர் வகையறாவினரால் ஒரு கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலில் சல்லிக்கட்டு வீரர்கள் தங்கள் வெற்றி வேண்டி வழிபாடு செய்கின்றனர்.
அருள்மிகு அழகதேவர் திருக்கோயில்
கோயிலின் அமைப்பு இக்கோயில் மிக உயர்ந்த தோரணவாயிலோடு நம்மை வரவேற்கிறது. வாயிலைத் தாண்டி இரும்பினாலான கதவு அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து சற்று உள்ளே தள்ளி கோயில் அமைந்துள்ளது. கோயில் பசுமையான மரங்களின் நடுவே ஒரு மண்டபம் போன்ற அமைப்பில் உள்ளது. தூண்களோடு கூடிய மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறிய கருவறையில் மாடுபிடி வீரர்களின் தெய்வமான அழகதேவரின் சிற்பம் வழிபாட்டில் உள்ளது.
பாதுகாக்கும் நிறுவனம் கருத்தமாயத்தேவர் வகையறா
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் இராக்கம்மாள் அம்மன் கோயில், கருப்பசாமி கோயில், முனியாண்டி கோயில்
செல்லும் வழி மதுரையிலிருந்து பேருந்தில் திருமங்கலம் சென்று அங்கிருந்து சொரிக்காம்பட்டி செல்லலாம்.
கோவில் திறக்கும் நேரம் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை
அருள்மிகு அழகதேவர் திருக்கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் சொரிக்காம்பட்டி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் திருமங்கலம்
அருகிலுள்ள விமான நிலையம் மதுரை
தங்கும் வசதி திருமங்கலம், மதுரை நகர விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் அழகுபாண்டி, ஸ்ரீவாணிதாசன், Deity Cap
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 47
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்