வழிபாட்டுத் தலம்
கடவு காத அய்யனார் கோவில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் கடவு காத அய்யனார் கோவில்
வேறு பெயர்கள் அய்யனார் கோயில்
ஊர் பூலாங்குளம்
வட்டம் மதுரை மேற்கு
மாவட்டம் மதுரை
உட்பிரிவு 5
திருக்குளம் / ஆறு பூலாங்குளம் கண்மாய்
வழிபாடு ஒருகால பூசை
திருவிழாக்கள் மாசி மகாசிவராத்திரி
காலம் / ஆட்சியாளர் பாண்டியர்
கல்வெட்டு / செப்பேடு இல்லை
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் கடவு காத்த அய்யனார் கோயிலின் நுழைவாயில் முகப்புத் தோரணவாயிலில் அய்யனார் சுதைச் சிற்பங்கள் உள்ளன. கோயில் மதிற்சுவரின் முன்னே இரு பூதகணங்கள் நின்ற நிலையில் உள்ளன. கோயில் வளாகத்தில் அய்யனார் அரியணையில் அமர்ந்து குதிரை மீதேறி வருவதாக சுதைச்சிற்பமும், கருப்பசாமி குதிரை மீதேறி வருவதாக சுதைச்சிற்பமும் கோயிலின் இருபுறமும் வைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் முகப்பில் அய்யனார் சுதைச்சிற்பம் காட்டப்பட்டுள்ளது. விநாயகர், முருகன், அய்யனார், சிம்மம் ஆகிய சிற்பங்களும் உள்ளன. கருவறையில் அய்யனார் அமர்ந்த கோலத்தில் உள்ளார்.
தலத்தின் சிறப்பு கடவு காத அய்யனார் பல்வேறு சாதியினருக்கு குலதெய்வமாய் விளங்குகிறார்.
சுருக்கம்
கடவு காத்த அய்யனார் கோயில் பச்சைப்பசேலென்ற இயற்கை எழில் விளங்கும் இடத்தின் நடுவே அமைந்துள்ளது. சுற்றிலும் வயல்வெளிகள் விளங்கும் வேளாண்மை மற்றும் கால்நடைகள் செழித்து வளரக்கூடிய இடமாக இவ்விடம் பண்டிலிருந்து விளங்கியுள்ளது என்பதை கணிக்கமுடிகிறது. இவ்விடத்தில் தலங்கொண்ட அய்யனார் கால்நடைகளையோ அல்லது வேளாண்நிலத்தையோ காத்து வந்துள்ளார். எனவே தான் கடவு காத்த அய்யனார் என்ற பெயர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடவு காத அய்யனார் கோவில்
கோயிலின் அமைப்பு கோயில் மதிற்சுவருடன் கூடியதாக உள்ளது. ஒரு தளமுடைய கருவறை விமானம் உடையது. கருவறை மற்றும் ஒரு சிறு மண்டபம் ஆகியவை கட்டிட அமைப்பாக காட்சியளிக்கிறது. திறந்த வெளியிலேயே பெரிய சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பாதுகாக்கும் நிறுவனம் தனியார்
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் சோணை முத்தையா சாமி கோயில், நொண்டிச்சாமி கோயில், பொன்னர் சங்கர் கோயில், முருகன் கோயில்
செல்லும் வழி மதுரையிலிருந்து சிவகங்கை செல்லும் சாலையில் மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 11 கி.மீ. தொலைவில் ஆண்டார் கொட்டாரம் சக்கிமங்கலம் சாலையில் அமைந்துள்ளது.
கோவில் திறக்கும் நேரம் காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை
கடவு காத அய்யனார் கோவில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் பூலாங்குளம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் மதுரை
அருகிலுள்ள விமான நிலையம் மதுரை
தங்கும் வசதி மதுரை நகர விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் ஆர்.சங்கர், கார்த்திக் இராமமூர்த்தி, வினோத் கமல்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 27
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்