வழிபாட்டுத் தலம்
வேப்பத்தூர் ஸ்ரீவீற்றிருந்த பெருமாள் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | வேப்பத்தூர் ஸ்ரீவீற்றிருந்த பெருமாள் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | சங்ககாலக் கோயில்-செங்கல் தளி |
| ஊர் | வேப்பத்தூர் |
| வட்டம் | கும்பகோணம் |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| உட்பிரிவு | 2 |
| வழிபாடு | ஒருகால பூசை |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.4-5-ஆம் நூற்றாண்டு |
| கல்வெட்டு / செப்பேடு | இல்லை |
| சுவரோவியங்கள் | கருவறையின் உட்பக்கச் சுவர்களில் ஓவியங்களைக் காணமுடிந்தது. அவை மிகவும் சிதிலமடைந்துள்ளன. |
| சிற்பங்கள் | இல்லை |
| தலத்தின் சிறப்பு | சங்க காலத்தைச் சேர்ந்த செங்கல் தளி. |
|
சுருக்கம்
அமர்ந்த நிலையில் விஷ்ணு இருப்பதாக அமைக்கப்பட்ட ஒரு கோயில். வீற்றிருந்த பெருமாள் என்பது ஆலயத்தின் பெயர். ஆனால் பெருமாள் சிலை ஆலயத்தில் இல்லை. இந்த ஆலயத்திற்குச் தனிச்சிறப்புண்டு. அதாவது பல்லவர் காலத்தில் கட்டப்பட்டு அல்லது அதற்கும் முன்னதாக கட்டப்பட்டு பின் பல்லவர் காலத்தில் பராமரிக்கப்பட்டு, பின்னர் சோழர் காலத்தில் புணரமைக்கப்பட்டு மாற்றங்களைக் கண்டு பின்னர் விஜயநககரப் பேரரசு ஆட்சி செய்த காலத்தில் புணரமைக்கப்பட்டு பின்னர் படிப்படியாக அதன் சிறப்புக்களை இழந்த ஒரு கோயில் இது. இன்று ஒறைக் கோபுரத்துடன் நின்றாலும் அதன் உள்ளே தெரியும் ஓவியங்கள் இக்கோயிலை நாம் நிச்சயம் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தையே தோற்றுவிக்கின்றது. தற்சமயம் கோயிலில் சிலைகள் யாதும் இல்லை. சுவர் சித்திரங்கள் ஒன்றன் மேல் ஒன்றாக ஆய்வாளர்களுக்குப் பெருத்த குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றன. புத்த விகாரையை நினைவுறுத்தும் சிற்பங்களை பரந்தாமன் குறிப்பிட்டுக் காட்ட அவற்றைப் பார்க்க முடிந்தது.
|
|
வேப்பத்தூர் ஸ்ரீவீற்றிருந்த பெருமாள் கோயில்
| கோயிலின் அமைப்பு | அமர்ந்த நிலையில் விஷ்ணு இருப்பதாக அமைக்கப்பட்ட ஒரு கோயில். வீற்றிருந்த பெருமாள் என்பது ஆலயத்தின் பெயர். ஆனால் பெருமாள் சிலை ஆலயத்தில் இல்லை. இந்த ஆலயத்திற்குச் தனிச்சிறப்புண்டு. அதாவது பல்லவர் காலத்தில் கட்டப்பட்டு அல்லது அதற்கும் முன்னதாக கட்டப்பட்டு பின் பல்லவர் காலத்தில் பராமரிக்கப்பட்டு, பின்னர் சோழர் காலத்தில் புணரமைக்கப்பட்டு மாற்றங்களைக் கண்டு பின்னர் விஜயநககரப் பேரரசு ஆட்சி செய்த காலத்தில் புணரமைக்கப்பட்டு பின்னர் படிப்படியாக அதன் சிறப்புக்களை இழந்த ஒரு கோயில் இது. சங்க காலத்திய செங்கலின் அளவையில் இக்கோயிலின் கட்டுமானச் செங்கல் காணக்கிடைக்கின்றது. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்து சமய அறநிலையத்துறை |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | கும்பகோணம் கோயில்கள் |
| செல்லும் வழி | கும்பகோணத்திலிருந்து வேப்பத்தூர் செல்லலாம். |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 57 |
| பிடித்தவை | 0 |