Back
வழிபாட்டுத் தலம்
திருக்காரகம் கருணாகரப்பெருமாள் கோவில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் திருக்காரகம் கருணாகரப்பெருமாள் கோவில்
வேறு பெயர்கள் திருக்காரகம்
ஊர் பெரிய காஞ்சி
வட்டம் காஞ்சிபுரம்
மாவட்டம் காஞ்சிபுரம்
உட்பிரிவு 2
மூலவர் பெயர் கருணாகரப் பெருமாள்
தாயார் / அம்மன் பெயர் பத்மாமணி, நாச்சியார், ராமா மணி நாச்சியார்
திருக்குளம் / ஆறு அக்ராய தீர்த்தம்
வழிபாடு நான்கு கால பூசை
திருவிழாக்கள் வைகுண்ட ஏகாதசி, இராமநவமி, நவராத்திரி
காலம் / ஆட்சியாளர் கி.பி.8-16-ஆம் நூற்றாண்டு/ பல்லவ, பாண்டிய சோழப் பேரரசுகள் மற்றும் விசயநகர நாயக்கர்
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் இங்கு இறைவன் கருணாகரப் பெருமாள் என்ற திருப்பெயரால் அழைக்கப்படுகிறார். நின்ற திருக்கோலத்தில் வடக்கு நோக்கியுள்ளார்.
தலத்தின் சிறப்பு 108- திவ்ய தேசங்களில் ஒன்று. திருமங்கையாழ்வார் மங்களாசாசனம்.
சுருக்கம்
திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்தலம் காஞ்சியில் உலகளந்த பெருமாள் சன்னிதிக்கு உட்புறமாகவே அமைந்துள்ளது. உலகளந்த பெருமாள் சன்னதியில் அடங்கியுள்ள திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்று. காரகம் என்னும் பெயர் வந்துற்ற காரணம் அறியுமாறில்லை. கார்ஹமஹரிஷி என்னும் முனிவர் இப்பெருமானைக் குறித்துத் தவமிருந்து அளவிறந்த ஞானம் பெற்று உய்ந்தமையால் அவர் பெயரின் பொருட்டே திவ்ய தேசம் விளங்கி நின்று கார்ஹகம் ஆகி காரகம் ஆயிற்றென்பர். இருப்பினும் இது ஆய்வுக்குரிய விஷயமாகும். எவ்விதம் இப்பெருமாள் (காரகத்தான்) உலகளந்த பெருமாளின் சன்னதிக்கு வந்துற்றார் என்பதும் ஆராய்தற்குரியதாகும். தனித்த ஸ்தல புராணம் இல்லை. திருமங்கையாழ்வாரின் மங்களாசாசனம் மட்டும் இத்தலத்திற்குத் திவ்யம் தந்து திவ்ய தேசத்திற்குள் அமிழ்த்துகிறது. உலகமேத்தும் காரகத்தாய் என்ற திருமங்கையாழ்வாரின் மங்களாசாசனத்தைப் பார்க்கும் போது இத்தலம் ஒருபோது பெருஞ்சிறப்புப் பெற்றிருந்ததோ என்று எண்ணத் தோன்றுகிறது. கல்விக்கும். அறிவாற்றலுக்கும் இப்பெருமாள் வரப்பிரசாதி.
திருக்காரகம் கருணாகரப்பெருமாள் கோவில்
கோயிலின் அமைப்பு இக்கோயிலின் கருவறை விமானம் வாமன விமானம், ரம்ய விமானம் என்ற அமைப்பாகும். திருக்காரகம் பெருமாள் கோயில் திருஊரகம் கோயிலுக்குள்ளேயே சிற்றாலயமாக அமைந்துள்ளது. இங்கு இறைவன் கருணாகரப் பெருமாள் என்ற திருப்பெயரால் அழைக்கப்படுகிறார். நின்ற திருக்கோலத்தில் வடக்கு நோக்கியுள்ளார்.
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறை
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் காஞ்சி காமாட்சியம்மன் கோயில், வரதராஜப்பெருமாள் கோயில், வைகுண்டப் பெருமாள் கோயில், ஏகாம்பரேஸ்வரர் கோயில்
செல்லும் வழி பெரிய காஞ்சி என அழைக்கப்படும் பகுதியில் காமாட்சியம்மன் கோவிலுக்கு எதிரில் நான்கு ராஜவீதிகட்கு மத்தியில் அமைந்துள்ளது இத்தலம்.
கோவில் திறக்கும் நேரம் காலை 5.00 -12.30 முதல் மாலை 4.30-9.30 வரை
திருக்காரகம் கருணாகரப்பெருமாள் கோவில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் காஞ்சிபுரம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் காஞ்சிபுரம்
அருகிலுள்ள விமான நிலையம் சென்னை - மீனம்பாக்கம்
தங்கும் வசதி காஞ்சிபுரம் விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 20 Sep 2017
பார்வைகள் 36
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்