வழிபாட்டுத் தலம்
அய்யனார் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் அய்யனார் கோயில்
வேறு பெயர்கள் அய்யனார் கோயில்
ஊர் அ.கொக்குளம்
வட்டம் திருமங்கலம்
மாவட்டம் மதுரை
உட்பிரிவு 5
திருக்குளம் / ஆறு அ.கொக்குளம் கண்மாய்
வழிபாடு ஒருகால பூசை
திருவிழாக்கள் மாசி மகாசிவராத்திரி
காலம் / ஆட்சியாளர் பாண்டியர்
கல்வெட்டு / செப்பேடு இல்லை
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் கருவறையில் அய்யனார் பூரணாதேவி, புஷ்கலாதேவியுடன் காட்சியளிக்கிறார். அர்த்தமண்டபத்தின் இருபுறமும் விநாயகர், முருகன் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மகாமண்டபத்தின் தூண்களில் குதிரையில் அமர்ந்துள்ள கருப்பசாமி, அய்யனார் உருவங்கள், பெண்தெய்வங்கள், நந்தி, முத்தலைச்சூலம், பறவைகள், கால்நடைகள் ஆகிய புடைப்புச்சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மகாமண்டபத்தின் நுழைவாயில் தோரண முகப்பில் அய்யனார் தேவியுடன் இருத்தல், விநாயகர், முருகன், குறவன், குறத்தி, குதிரையில் அமர்ந்துள்ள கருப்பசாமிகள், முனிவர்கள் ஆகிய சுதையாலான சிற்பங்கள் வனையப்பட்டுள்ளமை சிறப்பு.
தலத்தின் சிறப்பு கண்மாய்க் கரையில் அமைந்த தலம். பல குடியினருக்கு குலதெய்வக் கோயில்.
சுருக்கம்
மதுரை மாவட்டம் திருமங்கலத்திற்கு அருகிலுள்ள அ-கொக்குளம் கிராமத்தில் உள்ள அய்யனார் கோயில் மண்டபம் கருவறை ஆகிய பகுதிகள் கல் வேலைப்பாடுகளாக அமையப்பெற்றுள்ளது. இக்கோயில் இவ்வூரில் உள்ள மக்களுக்கு குலதெய்வக் கோயிலாக விளங்குகின்றது. இக்கோயிலில் அய்யனார் தான் முதன்மை தெய்வமாக விளங்குகிறார்.
அய்யனார் கோயில்
கோயிலின் அமைப்பு கருவறை, அர்த்தமண்டபம், செவ்வக வடிவிலான நீளவாக்கில் மகா மண்டபம், பரந்த வளாகம் ஆகிய அமைப்புகளுடன் இக்கோயில் விளங்குகிறது. கருவறையில் அய்யன் பூரணை, புஷ்கலையுடன் விளங்குகிறார். அர்த்தமண்டபத்தில் இருபுறமும் விநாயகர் மற்றும் முருகன் எழுந்தருளியுள்ளனர். இருபுறமும் முழுத்தூண்களோடு கூடிய மகா மண்டபம் இருவரிசைத் தூண்களுடன் அமைந்துள்ளது. இம்மண்டபத்து தூண்களில் புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. மண்டபத்தின் மேலே முகப்பு நுழைவாயில் காட்டப்பட்டுள்ளது. முகப்புத் தோரணவாயிலில் சுதைச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மகாமண்டபம் படிக்கட்டுகளுடன் கூடியதாக உயரமாக உள்ளது. மண்டபத்தின் முன்னே வளாகத்தில் கருவறைக்கு நேராக கல்லால் ஆன தீபத்தூண் அமைக்கப்பட்டுள்ளது. இத்தூண் கல்பீடம் ஒன்றின் மீது எடுப்பிக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தைச் சுற்றில் மதில் சுவர் கட்டப்பட்டுள்ளது.
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறை
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் வெறிய தேவர் சிவன் கோயில், கொக்குளம் விச்வகர்மா இந்து கோயில்
செல்லும் வழி மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து நாகமலை புதுக்கோட்டை வழியே செல்லும் உசிலம்பட்டி, கம்பம் பேருந்தில் சென்றால் அ.கொக்குளம் ஊரில் இறங்கலாம்.
கோவில் திறக்கும் நேரம் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை
அய்யனார் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் அ.கொக்குளம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் திருமங்கலம்
அருகிலுள்ள விமான நிலையம் மதுரை
தங்கும் வசதி திருமங்கலம், மதுரை நகர விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் வி.பி.விஜய்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 41
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்