வழிபாட்டுத் தலம்
கற்குடைய அய்யனார் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் கற்குடைய அய்யனார் கோயில்
வேறு பெயர்கள் அய்யனார் கோயில்
ஊர் கொட்டக்குடி
வட்டம் மேலூர்
மாவட்டம் மதுரை
தொலைபேசி 097874 94470
உட்பிரிவு 5
திருக்குளம் / ஆறு காஞ்சரங்கோட்டை கண்மாய்
வழிபாடு ஒருகால பூசை
திருவிழாக்கள் மாசி மகாசிவராத்திரி
காலம் / ஆட்சியாளர் பாண்டியர்
கல்வெட்டு / செப்பேடு இல்லை
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் நுழைவாயிலில் சுதைச்சிற்பங்களாக அய்யன் மற்றும் பரிவாரத் தெய்வங்கள் காட்டப்பட்டுள்ளனர். கோயில் வளாகத்தில் பெரிய அளவில் யானைச் சிற்பம் உள்ளது. தொடர்ந்து காவல் பூதங்கள் இரண்டு கையில் வாளை ஓங்கிய நிலையில் நிற்கின்றன. கருவறையில் அய்யன் வீற்றிருக்கிறார். கோயில் திருச்சுற்றில் பரிவாரத் தெய்வங்களுக்கான சிறு சிறு சந்நிதிகள் அமைக்கப்பட்டு வழிபாட்டில் உள்ளன. நேர்த்திக்கடனாக மக்கள் செலுத்தும் புரவிகள் வரிசையாக நிற்கின்றன. கருவறை விமானத்தில் அய்யன் மற்றும் கருப்பசாமியின் சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. கருவறையின் வலதுபுறத்தில் சேமக்குதிரை முன்னங்கால்களைத் தூக்கிக் கொண்டு பாய்கிறது. தூக்கிய முன்னங்கால்களை பெருவீரர்கள் இருவர் தங்கள் தலையில் தாங்கியுள்ளனர். இச்சிற்பங்கள் யாவும் சுதைச்சிற்பங்களாக வடிக்கப்பட்டு வண்ணந்தீட்டப்பட்டுள்ளன.
தலத்தின் சிறப்பு கல்யானை கரும்பு தின்ற அற்புதம் நடந்த தலம். புரவி எடுப்பு திருவிழா புகழ்பெற்றது.
சுருக்கம்
மிகவும் பழைமையான கற்குடைய அய்யனார் கோயிலை சீரமைத்து கோபுரத்துடன் கோயில் கட்டியவர் ஏழுஅப்பச்சி என்பவர் ஆவார். மூலவரான ஐயனார் சைவம். கோயில் வளாகத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்ற கருப்பன், சின்னகருப்பன், பெரியகருப்பன் போன்ற காவல் தெய்வங்களுக்கு கிடா பலியிடுவதும், சேவல் நேர்ந்துவிடுவதும் உண்டு. ஐயனாருக்கு ஐப்பசி கடைசி வெள்ளி திருவிழா நடக்கும். கல்யானை கரும்பு தின்ற அற்புதம் நடந்த தலம். ஐப்பசித் திருவிழாவில் புரவி எடுப்பு சிறப்பாக நடக்கும்.
கற்குடைய அய்யனார் கோயில்
கோயிலின் அமைப்பு கொட்டக்குடி அய்யனார கோயில் நுழைவாயில் தோரண முகப்பு கோபுரத்துடன் விளங்குகிறது. இதனைத் தாண்டி உள்ளே சென்றால் அய்யனின் வாகனமான யானை சிற்பம் காணப்படுகிறது. தொடர்ந்து இரு பூதங்கள் கோயில் வாயிலின் இருபுறமும் ஓங்கிய வாளுடன் நிற்கின்றனர். தொடர்ந்து உள்ளே சென்றால் மண்டபத்துடன் கூடிய கருவறையும், அதன்மேல் விமானமும் காட்சியளிக்கிறது. கோயிலின் கருவறையின் வலதுபுறம் சேமக்குதிரை பாய்ந்த நிலையில் உள்ளது. நேர்த்திக்கடன் புரவிகள் வரிசையாக நிற்கின்றன. காவல் தெய்வங்களான கருப்பசாமிக்கு சிறு சந்நிதி அமைக்கப்பட்டு வழிபாட்டில் உள்ளத.
பாதுகாக்கும் நிறுவனம் தனியார்
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் திருவாதவூர் சிவன் கோயில், ஸ்ரீமுத்துப்பிடாரி அம்மன் கோயில், மாணிக்கம்பட்டி காளியம்மன் கோயில்
செல்லும் வழி மதுரையிலிருந்து மேலூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றால் சுமார் 25 கி.மீ. தொலைவில் உப்பாற்றின் கரையில் இவ்வூர் அமைந்துள்ளது.
கோவில் திறக்கும் நேரம் காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை
கற்குடைய அய்யனார் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் கொட்டக்குடி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் மதுரை
அருகிலுள்ள விமான நிலையம் மதுரை
தங்கும் வசதி மேலூர் நகர விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் செல்வராஜா, அஜித்குமார், ஷியாமி சிவா, மேடி மாதவ், மதுப்ரகாஷ், மணிகண்டன் அ., நாகராஜன், இராஜசேகரன் சேவுகன், இரவிச்சந்திரன், பி.கே.சந்தானம், ஸ்ரீராம்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 57
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்