வழிபாட்டுத் தலம்
அருள்மிகு மணவாளேஸ்வரர் திருக்கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | அருள்மிகு மணவாளேஸ்வரர் திருக்கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | திருவேள்விக்குடி |
| ஊர் | திருவேள்விக்குடி |
| வட்டம் | மயிலாடுதுறை |
| மாவட்டம் | நாகப்பட்டினம் |
| தொலைபேசி | 04364 235462 |
| உட்பிரிவு | 1 |
| மூலவர் பெயர் | கௌதகேஸ்வரர், கல்யாணசுந்தரேஸ்வரர், மணவாளேஸ்வரர் |
| தாயார் / அம்மன் பெயர் | பரிமளசுகந்தநாயகி, கௌதகேசி, நறுஞ்சாந்து நாயகி. |
| திருக்குளம் / ஆறு | கெளதுகா பந்தன தீர்த்தம், மங்கள தீர்த்தம் |
| வழிபாடு | காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம் |
| திருவிழாக்கள் | மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம் |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.9-10ஆம் நூற்றாண்டு/ முற்காலச் சோழர்கள் |
| கல்வெட்டு / செப்பேடு | செம்பியன் மாதேவி, இராஜராஜ சோழன், பராக்கிரம சோழன் ஆகியோர் காலத்திய கல்வெட்டுக்கள் இக்கோவிலில் உள்ளன. கல்வெட்டுக்களில் இறைவன் மணவாளநம்பி, மங்கலநக்கர், திருவேள்விக்குடி உடையார் என்னும் பெயர்களால் குறிக்கப்படுகிறார். |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | இறைவன் கருவறை தேவகோட்டச் சிற்பங்களாக தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், அர்த்தநாரீஸ்வரர், சந்திரசேகரர், பிட்சாடனர் ஆகியோர் உள்ளனர். இத்தலத்திலுள்ள அர்த்தநாரீஸ்வரர் சிற்பத்தில் தேவி வலதுபுறமும், இறைவன் இடதுபுறமும் உள்ளதைக் காணலாம். அர்த்த மண்டபத்தின் வெளிப்புறக் கோட்டத்தில் நடராஜர், அகத்தியர் மற்றும் விநாயகர் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தளப்பகுதியில் சுதைச்சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சண்டிகேசுவரர் வடக்குத் திருச்சுற்றில் காட்சியளிக்கிறார். |
| தலத்தின் சிறப்பு | 1300 ஆண்டுகள் பழமையானது. திருஞானசம்பந்தர், சுந்தரர் இவர்களால் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம். |
|
சுருக்கம்
திருவேள்விக்குடி கல்யாணசுந்தரேசுவரர் கோயில் காவிரியின் வடகரையில் அமைந்துள்ள திருத்தலம். திருஞானசம்பந்தர், சுந்தரர் இவர்களால் பாடல் பெற்ற தேவாரத் தலம். தேவாரத்தலங்கள் 274-இல் இத்தலம் 23-வது தலமாகும். இத்தலத்தின் அருகிலேதான் திருமணஞ்சேரி திருத்தலம் அமைந்துள்ளது. இக்கோயில் இரண்டும் ஒன்றாக இணைத்துப் பாடல் பெற்றுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. முற்காலச் சோழர் கலைப்பாணியில் கட்டப்பட்ட இக்கோயிலில் பராந்தகச் சோழன், செம்பியன்மாதேவி இவர்களது கலைப்பணியும், கல்வெட்டுகளும் காணக்கிடைக்கின்றன. நீண்ட நாட்கள் திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து கெளதுகா பந்தன தீர்த்தத்தில் நீராடி மணவாளேஸ்வரர் மற்றும் பரிமளசுகந்த நாயகியை வழிபட்டால் திருமணம் நடைபெறும் என்பது இத்தலத்தின் சிறப்பாகும்.
|
|
அருள்மிகு மணவாளேஸ்வரர் திருக்கோயில்
| கோயிலின் அமைப்பு | இங்குள்ள கோவில் மூன்று நிலைகளுடன் கூடிய கிழக்கு நோக்கிய இராஜகோபுரமும், இரண்டு திருச்சுற்றுகளும் உடையதாய் திகழ்கிறது. இறைவன் கருவறைக்கு முன்னே அர்த்த மண்டம், மகாமண்டபம் உள்ளன. இறைவன் கருவறை தேவகோட்டச் சிற்பங்களாக தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், அர்த்தநாரீஸ்வரர், சந்திரசேகரர், பிட்சாடனர் ஆகியோர் உள்ளனர். இத்தலத்திலுள்ள அர்த்தநாரீஸ்வரர் சிற்பத்தில் தேவி வலதுபுறமும், இறைவன் இடதுபுறமும் உள்ளதைக் காணலாம். அர்த்த மண்டபத்தின் வெளிப்புறக் கோட்டத்தில் நடராஜர், அகத்தியர் மற்றும் விநாயகர் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மணவாளேஸ்வரர் கருவறை விமானம் தாங்குதளம் முதல் கூரைப்பகுதி வரை கற்றளியாகவும், விமானத்தின் தளப்பகுதி தற்காலப் பணியாக சுதை அமைப்பாகவும் காட்சியளிக்கிறது. தளப்பகுதியில் சுதைச்சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வடக்குத் திருச்சுற்றில் சண்டிகேசுவரருக்கு தனி திருமுன் தற்காலப் பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. விமானத்தின் சுவர் மற்றும் தாங்குதளத்தில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. பரிமளசுகந்த நாயகியின் திருமுன் (சந்நிதி) முதல் திருச்சுற்றில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலின் தீர்த்தமான கெளதுகா பந்தன தீர்த்தம் கோயிலின் முகப்பு வாயிலுக்கு எதிரே அமைந்துள்ளது. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | திருமணஞ்சேரி, வழுவூர் கோயில், ஆக்கூர் சிவன் கோயில் |
| செல்லும் வழி | மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை வழியில் உள்ள குத்தாலத்தில் இருந்து வடகிழக்கே 3 கி.மீ. தொலைவில் திருவேள்விக்குடி மணவாளேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 7.00 மணி முதல் 11.00 மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 வரை |
அருள்மிகு மணவாளேஸ்வரர் திருக்கோயில்
| அருகிலுள்ள பேருந்து நிலையம் | திருவேள்விக்குடி, குத்தாலம் |
|---|---|
| அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் | மயிலாடுதுறை, நாகப்பட்டினம் |
| அருகிலுள்ள விமான நிலையம் | திருச்சி |
| தங்கும் வசதி | மயிலாடுதுறை விடுதிகள் |
| ஒளிப்படம் எடுத்தவர் | அருண்குமார் பங்கஜ் |
| ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | அருண்குமார் பங்கஜ் |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 16 Jun 2017 |
| பார்வைகள் | 698 |
| பிடித்தவை | 0 |