Back
வழிபாட்டுத் தலம்
திருநல்லூர் பஞ்சவர்ணேசுவரர் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் திருநல்லூர் பஞ்சவர்ணேசுவரர் கோயில்
வேறு பெயர்கள் திருநல்லூர்
ஊர் திருநல்லூர்
வட்டம் வலங்கைமான்
மாவட்டம் திருவாரூர்
உட்பிரிவு 1
மூலவர் பெயர் பஞ்சவர்ணேஸ்வரர், கல்யாண சுந்தரேஸ்வரர், பெரியாண்டேஸ்வரர்
தாயார் / அம்மன் பெயர் கிரிசுந்தரி, பர்வதசுந்தரி, கல்யாணசுந்தரி
தலமரம் வில்வம்
திருக்குளம் / ஆறு சப்தசாகர தீர்த்தம்
வழிபாடு நான்கு கால பூசை
திருவிழாக்கள் மாசிமகப் பெருவிழா
காலம் / ஆட்சியாளர் கி.பி.7-ஆம் நூற்றாண்டு / முற்காலச் சோழர்
சுவரோவியங்கள் இல்லை
தலத்தின் சிறப்பு 1300ஆண்டுகள் பழமையானது. தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்.
சுருக்கம்
சோழநாட்டு (தென்கரை)த் தலம். கோச்செங்கட்சோழனால் கட்டப்பட்ட மாடக்கோயில். திருநாவுக்கரசு நாயனாருக்குத் திருவடி சூட்டியதும், அமர்நீதி நாயனாரை ஆட்கொண்டதுமாகிய அற்புதத் தலம். இச்சிகரத்திற்கு - மலைக்குச் ‘சுந்தரகிரி’ என்ற பெயர; தென் கயிலாயம் என்று இத்தலமும் வழங்கப்படுகின்றது. திருச்சித்திமுற்றத்துச் சிவக்கொழுந்தீசரை வழிபட்டு, ‘கோவாய் முடுகி’ என்ற பதிகம் பாடி, தனக்குத் திருவடி தீட்சை செய்யுமாறு அப்பர் வேண்ட, அவரை இறைவன் திருநல்லூருக்கு வருமாறு அருளி, “உன்னுடைய நினைப்பதனை முடிக்கின்றோம், என்று அவர்தம் சென்னிமிசைப் பாதமலர் சூட்டி”யருளினார். இச்செய்தியை நம்பியாண்டார் நம்பிகளும் தாம் அருளியுள்ள திருத்தொண்டர் திருவந்தாதியுள் “நற்றவன் நல்லூர்ச் சிவன் திருப்பாதம் தன் சென்னி வைக்கப் பெற்றவன்” எனக் குறித்துள்ளார். இதுபற்றியே இன்றும் இத்தலத்தில் சடாரி போன்று திருவடி சூட்டப்படுகின்றது. அமர்நீதி நாயனார் துலையேறியபோது இறைவன் அவருக்குக் காட்சி வழங்கி ஆட்கொண்டருளிய (முத்தியருளிய) அருட்சிறப்பும் உடையது இத்தலம். மிகப்பழமையான, அருமையான, சிறப்புமிக்க திருக்கோயில்.
திருநல்லூர் பஞ்சவர்ணேசுவரர் கோயில்
கோயிலின் அமைப்பு கோயிலின் முன்னால் உள்ளது. படித்துறைகளையுடையது. குளக்கரையில் ஒருபுறம் அமர்நீதி நாயனார் மடாலயம் உள்ளது. ஐந்து நிலைகளையுடைய அழகான ராஜகோபுரம் நம்மை அழைக்கின்றது. உள்ளே விசாலமான இடம். கவசமிட்ட கொடிமரம் உள்ளது. முன்பு விநாயகர் உள்ளார். அடுத்து வடபால் வசந்த மண்டபமும், தென்பால் அமர்நீதியார் துலையேறிய துலா மண்டபமும் ள்ளன. இங்குள்ள அஷ்டபூஜ காளி பிரசித்தி பெற்றது. உள்கோபுரம் மூன்று நிலைகளையுடையது - கீழே கல்கட்டிடம் மேலே சுதை வேலைப்பாடுடையது. உள்ளே நுழைந்தால் நேரே காசி ிநாயகர் தரிசனம். வலம்பர, பாணலிங்கம், விசுவநாதர் சந்நிதிகள். சோமாஸ்கந்தர் மண்டபமும், முருகன் சந்நிதியும் உள்ளன. வடபால் அமர்நீதி நாயனார், மனைவி, குழந்தை, குந்திதேவி முதலியோரின் ருவங்கள் உள்ளன. மாடக்கோயிலில் கோஷ்டமூர்த்தங்களாக விநாயகர், அடுத்து யோகத்தின் மேன்மையை விளக்கும் விநாயகரின் மற்றொரு உருவம், தக்ஷிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரமன், துர்க்கை ஆகியோர் திருவுருவங்கள் உள்ளன. சண்டேசுவரர் சந்நிதி உள்ளது அழகான நடராசசபை.
பாதுகாக்கும் நிறுவனம் திருவாவடுதுறை ஆதீனத்தின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள்
செல்லும் வழி தஞ்சாவூர் - கும்பகோணம் சாலையில் சென்று; பிரிகின்ற வலங்கைமான் சாலையில் 2 கி.மீ. சென்று இத்தலத்தை அடையலாம்.
கோவில் திறக்கும் நேரம் காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 வரை
திருநல்லூர் பஞ்சவர்ணேசுவரர் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் திருநல்லூர்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி
தங்கும் வசதி வலங்கைமான் வட்டார விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Nov 2018
பார்வைகள் 32
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்