வழிபாட்டுத் தலம்
அருள்மிகு காமநாதீஸ்வரர் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | அருள்மிகு காமநாதீஸ்வரர் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | காமநாதீஸ்வரர் |
| ஊர் | ஆறகழூர் |
| வட்டம் | ஆறகழூர் ஆத்தூர் |
| மாவட்டம் | சேலம் |
| தொலைபேசி | 04282-260107, 99433 15532 |
| உட்பிரிவு | 1 |
| மூலவர் பெயர் | காமநாதீஸ்வரர் |
| தாயார் / அம்மன் பெயர் | அம்பாள் பெரியநாயகி |
| தலமரம் | மகிழம் |
| திருக்குளம் / ஆறு | அக்னி தீர்த்தம் |
| வழிபாடு | காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம் |
| திருவிழாக்கள் | மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம், அன்னாபிஷேகம், கார்த்திகை சோமவாரம், ஆருத்ரா தரிசனம், மட்டையடி உற்சவம் |
| கல்வெட்டு / செப்பேடு | ஆறகழுரைச் சேர்ந்த சிவத்தொண்டன் என்பவர் அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோருடைய திருவுருவங்களை செய்துவித்து அவர்களை கோவிலின் சுற்றுப் பிரகாரத்தில் அமைத்து நால்வருக்கும் திருமஞ்சனம், திருவிளக்கு திருப்பள்ளிதாமம் மற்றும் கோவில் பூசை செலவினங்களுக்காக 5,000 பொற்காசுகளை கொடையாக வழங்கி அதை கோவிலின் கருவூலத்தில் சேர்த்தார் என கல்வெட்டொன்று குறிப்பிடுகிறது. |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | இக்கோயிலில் கோட்டச் சிற்பங்களாக தட்சிணாமூர்த்தி, நான்முகன் சிற்பங்கள் உள்ளன. அய்யனார், அய்யன், பிராம்மி, வைஷ்ணவி, வாராகி, கௌமாரி, இந்திராணி, காளி, சூரியன், அஷ்ட பைரவர்களான அசிதாங்க, சண்ட, குரோதன, உன்மத்த, கபால, பீஷண, அஷ்டபுஜ, குரு ஆகியோர், முருகன், கணபதி, நாயன்மார் நால்வர், வீரபத்திரர், அன்னபூரணி, தவ்வை, காமநாதீஸ்வரர், கஜலெட்சுமி ஆகிய சிற்பங்கள் தனிச் சிற்பங்களாக காணப்படுகின்றன. மேலும் தூண்களில் பெண்ணடியார்கள், ஆடல் பெண்டிர் மற்றும் இசைக்கலைஞர்கள் புடைப்புச் சிற்பங்களாகக் காட்டப்பட்டுள்ளனர். அய்யனாரின் செப்புத் திருமேனி இக்கோயிலில் இடம் பெற்றுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. |
| தலத்தின் சிறப்பு | 1100 ஆண்டுகள் பழமையானது. |
|
சுருக்கம்
ஆறகழூர் காமநாதீஸ்வரர் கோயில் காமன் வழிபட்ட தலமாகும். இங்கு அட்ட பைரவர்கள் வழிபடப்படுகின்றனர். அசிதாங்க, சண்ட, குரோதன, உன்மத்த, கபால, பீஷண, அஷ்டபுஜ, குரு ஆகிய எண் பைரவர்களுக்கு தேய்பிறை அட்டமி நாளில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகின்றது. மேலும் பஞ்சபூதத் தலங்களில் இத்தலம் வாயுத்தலம் எனப்படுகின்றது. சூரியன் பூசனை செய்ததால் பாஸ்கரத்தலம் என்றும் வழங்கப்படுகின்றது. ஆறே அகழியாக- அமைந்துள்ளதால் ஆறகழூர் எனப் பெயர் பெறலாயிற்று. ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது இது. பாடல்பெற்ற திருத்தலமான இது, முழுவதும் கல்லினால் கட்டப்பட்டது. சோழ அரசுக்குக் கட்டுப்பட்ட சிற்றரசர் வானவராயன் என்பவர் இந்த ஊரை ஆண்டுள்ளார்.
|
|
அருள்மிகு காமநாதீஸ்வரர் கோயில்
| கோயிலின் அமைப்பு | இந்தக் கோவிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரமும், கருவறையில் ஆனந்த விமானமும் அமைக்கப்பட்டுள்ளது. கோவில் கருவறை சதுரவடிவமானது. இறைவனின் கருவறைக்கு வடபுறம் தனிச் சன்னிதியில் பெரியநாயகி அம்பாள் அருள்பாலிக்கிறார். அம்பிகை முன்பும் இராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இறைவன் கருவறைக்கு முன் அர்த்தமண்டபம், மகாமண்டபம் உள்ளன. முதல் சுற்றில் உற்சவ மண்டபம், திருக்குளம், தலவிருட்சம், பலிபீடம், நந்தி ஆகியன அமைந்துள்ளன. இரண்டாம் சுற்றின் தாழ்வறையில் சந்திர, சூரியன், பைரவர், சமயக்குரவர்கள் காட்சி தருகின்றனர். கருவறை சுற்றுப் பிரகாரத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், விஷ்ணு துர்க்கை ஆகியோர் வீற்றிருக்கின்றனர். சண்டிகேஸ்வரர், முருகன், நவக்கிரக சன்னிதிகளும் உள்ளன. இங்கு பிரம்மாவிற்கும், நடராஜருக்கும் தனித்தனி சன்னிதி இருக்கிறது. கோவிலின் வடபக்கம் அறுபத்துமூன்று நாயன்மார்களின் திருமேனிகள் காணப்படுகின்றன. இத்தலத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட வள்ளி- தெய்வானை சமேத சுப்பிர மணிய சுவாமி மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | ஆறகளூர் பெருமாள் கோயில், தியாகனூர், தியாகனூர் புத்தர் |
| செல்லும் வழி | சேலம் ஆத்தூர்-தலைவாசல் சாலை வழியாக ஆறகலூர் வழியாகச் செல்லலாம். தலைவாசலிலிருந்து 6.2கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. ஆத்தூரிலிருந்து 24.7 கி.மீ. தொலைவில் உள்ளது. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 7.30 மணி முதல் 12.30 மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 16 Jun 2017 |
| பார்வைகள் | 131 |
| பிடித்தவை | 0 |