வழிபாட்டுத் தலம்
அருள்மிகு சுகந்தவனேசுவரர் (எ) ஆண்டபிள்ளை நாயனார் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | அருள்மிகு சுகந்தவனேசுவரர் (எ) ஆண்டபிள்ளை நாயனார் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | பெரிச்சிக்கோயில் |
| ஊர் | பெரிச்சிக்கோயில் |
| வட்டம் | திருப்பத்தூர் |
| மாவட்டம் | சிவகங்கை |
| உட்பிரிவு | 1 |
| மூலவர் பெயர் | சுகந்தவனேசுவரர் |
| தாயார் / அம்மன் பெயர் | சாமீபவல்லி |
| தலமரம் | வன்னி |
| திருக்குளம் / ஆறு | திருக்கிணறு |
| வழிபாடு | காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம் |
| திருவிழாக்கள் | மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம், அன்னாபிஷேகம், கார்த்திகை சோமவாரம், சனிப்பெயர்ச்சி, அஷ்டமி பூஜை |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.7-18-ஆம் நூற்றாண்டு |
| கல்வெட்டு / செப்பேடு | ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் காலத்துக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | இக்கோயில் கருவறையில் சுகந்தவனேசுவரர் இலிங்க வடிவில் காட்சி தருகிறார். சாமீபவல்லி அம்மன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். நால்வர் சிற்பங்கள் நின்ற நிலையில் விளங்குகின்றன. ஸ்ரீகாசி வயிரவர் எனப்படும் காலபைரவர் நவபாஷாண பைரவராக விளங்குகிறார். வன்னி மரத்து விநாயகர், திருச்சுற்றில் சண்டேசுவரர், தென்முகக்கடவுள் ஆகிய திருவுருவங்கள் வழிபாட்டில் உள்ளன. சனீஸ்வரருக்கு தனித் திருமுன் அமைந்துள்ளது. |
| தலத்தின் சிறப்பு | 1300 ஆண்டுகள் பழமையானது. திருஞானசம்பந்தர் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம். |
|
சுருக்கம்
பெரிச்சிக்கோயில் என்ற கிராமத்தில் அமைந்துள்ள சுகந்தவனேசுவரர் திருக்கோயில் கி.பி.7-ஆம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தரால் தேவாரப்பாடல் பெற்ற திருத்தலமாகும். இத்தலத்து இறைவன் ஆண்டப்பிள்ளை நாயனார் என்றழைக்கப்படுகிறார். இக்கோயில் சிவகங்கை சமஸ்தானத்திற்குரிய தேவஸ்தானக் கோயிலாக விளங்கி வருகின்றது. இக்கோயிலில் நடைபெறும் வயிரவ வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது. திருவிளையாடற்புராணத்தில் வன்னிமரமும், கிணறும், இலிங்கமும் சாட்சி சொன்ன திருவிளையாடல் இத்தலத்தோடு தொடர்புடையது.
|
|
அருள்மிகு சுகந்தவனேசுவரர் (எ) ஆண்டபிள்ளை நாயனார் கோயில்
| கோயிலின் அமைப்பு | இக்கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் பண்டைய கட்டடக்கலை எச்சங்களைக் கூட அரிதாகவே காணவேண்டியுள்ளது. சதுரவடிவமான கருவறை, அர்த்த மண்டப அமைப்பற்ற நீண்ட மண்டபம், அதனைத் தொடர்ந்து நந்தி மண்டபம் எனப்படும் நவீன பாணி மண்டபக் கூரை என தற்போது காணப்படுகின்றது. திருச்சுற்றில் சாமீபவல்லி திருமுன், பைரவர் திருமுன் பைரவருக்கு எதிரே சனீஸ்வரர திருமுன் ஆகிய புனரமைக்கப்பட்ட புதிய கோயில்கள் காட்சியளிக்கின்றன. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | சிவகங்கை சமஸ்தானம்-தேவஸ்தானம் |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | மலையரசி அம்மன் கோயில், கோனாபட்டு கொப்புடையம்மன் கோயில், கண்ட்ரமாணிக்கம் மாணிக்க நாச்சி கோயில், நாச்சியார்புரம் பெரியநாச்சி கோயில் |
| செல்லும் வழி | கண்டரமாணிக்கம் என்னும் ஊருக்கு அருகே இக்கோயில் உள்ளது. திருப்பத்தூரில் இருந்து 10 கி.மீ. தூரத்திலும், காரைக்குடியில் இருந்து 19 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 7.00 மணி முதல் 11.00 மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 20 Jun 2017 |
| பார்வைகள் | 53 |
| பிடித்தவை | 0 |