Back
வழிபாட்டுத் தலம்
அருள்மிகு அருணஜடேசுவரர் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் அருள்மிகு அருணஜடேசுவரர் கோயில்
வேறு பெயர்கள் தாடகையீச்சுரம், தாலவனேஸ்வரர் கோயில், செஞ்சடையப்பர் திருக்கோயில்
ஊர் திருப்பனந்தாள்
வட்டம் கும்பகோணம்
மாவட்டம் தஞ்சாவூர்
உட்பிரிவு 1
மூலவர் பெயர் செஞ்சடையப்பர், தாலவனேஸ்வரர்
தாயார் / அம்மன் பெயர் பெரிய நாயகி (பிரகந்நாயகி)
தலமரம் பனை மரம்
திருக்குளம் / ஆறு பிரம்ம தீர்த்தம்
ஆகமம் காமிகாகமம்
வழிபாடு ஆறுகால பூஜை.
திருவிழாக்கள் சித்திரை திருக்கல்யாணம், ஆடிப்பூரம், நவராத்திரி, சிவராத்திரி
காலம் / ஆட்சியாளர் கி.பி.9-ஆம் நூற்றாண்டு / முற்காலச் சோழர்
தலத்தின் சிறப்பு 1300 ஆண்டுகள் பழமையானது. தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்.
சுருக்கம்
தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் இத்தலம் 50 வது தலம் ஆகும். திருஞானசம்பந்தர், அப்பர் இத்தலத்தைப் பாடியுள்ளனர். திருப்பனந்தாள் பழம்பெரும் பதி. திருப்பனந்தாளில் குமரகுருபரர் காசிமடத்தை நிறுவினார். திருப்பனந்தாள் மடம் சைவ சமய மடங்களுள் குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும்.
அருள்மிகு அருணஜடேசுவரர் கோயில்
கோயிலின் அமைப்பு மேற்கு நோக்கி உள்ள செஞ்சடையப்பர் கோயிலின் வாயிலில் நீண்டுயர்ந்த கோபுரம் உள்ளது. உள்ளே நுழைந்ததும் 16 கால் மண்டபம் இருக்கிறது. இம்மண்டபத்தின் கீழ்ப்புறம் நாககன்னிகை தீர்த்தம் இருக்கிறது. கோயிலின் வெளிச்சுற்றின் கீழ்ப் பக்கத்தில் தலமரமாக பனைமரமும் அதன் அருகில் தாடகை வழிபட்ட சிவலிங்கம் வைக்கப்பட்டுள்ளது. மூலவர் செஞ்சடையப்பர் திருமுன் (சன்னிதி) மேற்கு நோக்கி உள்ளது. இதற்கு வடக்கில் மேற்கு நோக்கிய பெரியநாயகி (பிரஹந்நாயகி) யின் திருமுன் இருக்கிறது.
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறை
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் திருமங்கலக்குடி, ஆடுதுறை, தென்குரங்காடு துறை
செல்லும் வழி கும்பகோணம் - அணைக்கரை வழித்தடத்தில் கும்பகோணத்தில் இருந்து 18 கி.மி. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. கும்பகோணம் - மயிலாடுதுறை சாலை வழியிலுள்ள ஆடுதுறை அடைந்து அங்கிருந்தும் திருப்பனந்தாள் செல்ல சாலை வசதி உள்ளது.
கோவில் திறக்கும் நேரம் காலை 7.00 -12.00 முதல் மாலை 4.00-8.30 வரை
அருள்மிகு அருணஜடேசுவரர் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் திருப்பனந்தாள்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் கும்பகோணம், ஆடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி
தங்கும் வசதி கும்பகோணம் விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் American Institute of Indian Studies
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் American Institute of Indian Studies
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 07 Sep 2018
பார்வைகள் 168
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்