Back
வழிபாட்டுத் தலம்
அருள்மிகு யோகநரசிம்மர் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் அருள்மிகு யோகநரசிம்மர் கோயில்
வேறு பெயர்கள் மலைக் கோயில்
ஊர் தேன்கனிக்கோட்டை
வட்டம் கிருஷ்ணகிரி
மாவட்டம் கிருஷ்ணகிரி
உட்பிரிவு 2
மூலவர் பெயர் நரசிம்மர்
தாயார் / அம்மன் பெயர் இலட்சுமி
வழிபாடு இருகால பூஜை
திருவிழாக்கள் வைகுண்ட ஏகாதசி
காலம் / ஆட்சியாளர் கி.பி.15-16-ஆம் நூற்றாண்டு / விஜயநகரர்
கல்வெட்டு / செப்பேடு இல்லை
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் தூண் சிற்பங்கள் இறையுருவங்கள், வாழ்வியல் சிற்பங்கள் என்ற இருநிலைகளில் இங்கு காட்சியளிக்கின்றன. நரசிம்மர், யோக நரசிம்மர், இலட்சுமி நரசிம்மர், கிருஷ்ணர், இராமர், முதியவர், பெருமாள் ஆகிய இறையுருவப் புடைப்புச் சிற்பங்களும், ஆண்-பெண் இணைவுக் காட்சிகள், மகப்பேறு நிலையிலுள்ள பெண், சித்தர் ஆகிய புடைப்புச் சிற்பங்களும் தூண்களில் காணப்படுகின்றன. மேலும் கருடன் மற்றும் அனுமன் வாகனங்கள் உள்ளன.
தலத்தின் சிறப்பு 500 ஆண்டுகள் பழமையானது. விசயநகர-நாயக்கர் கலைப்பாணியைக் கொண்டுள்ளது.
சுருக்கம்
தேன்கனிக்கோட்டையிலிருந்து சிறிது தொலைவில் அமைந்துள்ள குன்றின் மீது அமைந்துள்ள இலட்சுமி நரசிம்மர் கோயில் ஒரு மலைக் கோயிலாகும். இக்கோயில் பழமையான கோயிலாக இருப்பினும் தற்போது முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் கல்வெட்டுகள் எதுவும் காணப்பெறவில்லை. எனவே இக்கோயிலின் பழமையை அறியக்கூடவில்லை. இக்கோயிலில் உள்ள தூண்களில் எண்ணற்ற நரசிம்மர் வடிவங்களும், கிருஷ்ணர், இராமர், அனுமன் போன்ற புடைப்புச்சிற்பங்களும், ஆண்-பெண் இணைவினைக் காட்டும் வாழ்வியல் சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன. வாழ்வியல் காட்சிகள் புடைப்புச்சிற்பங்களாக காட்டப்பட்டுள்ளமையால் உள்ளுர் மக்கள் இக்கோயிலை காதலர் கோயில் என்று அழைக்கின்றனர்.
அருள்மிகு யோகநரசிம்மர் கோயில்
கோயிலின் அமைப்பு இக்கோயில் மலைமீது அமைந்துள்ளது. மலையடிவாரத்திலிருந்து படிக்கட்டுகள் கோயிலுக்கு செல்கின்றன. கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. இராஜகோபுரத்துடன் கூடியதாக நுழைவாயில் உள்ளது. தெற்குப் பகுதியில் சிறிய கோபுரம் ஒன்றும் காட்சியளிக்கின்றது.கோபுர நுழைவாயிலைத் தொடர்ந்து கொடிமரம், பலிபீடம் அமைக்கப்பட்டுள்ளன. அர்த்தமண்டப முகப்பில் சுதையாலான துவாரபாலகர்கள் காட்சியளிக்கின்றனர். இரு கருவறைகள் உள்ளன. நரசிம்மருக்கும், சக்கரத்தாழ்வார்க்குமான திருமுன்களாக (சந்நிதி) அவை காட்சியளிக்கின்றன. அர்த்தமண்டபம், மகாமண்டபம் இவற்றில் தூண்கள் அமைக்கப்பட்டு, அத்தூண்களில் புடைப்புச் சிற்பங்கள் அதிகளவில் செதுக்கப்பட்டுள்ளன. கல்யாண மண்டபம், திருச்சுற்று மாளிகை ஆகியன அமைக்கப்பட்டுள்ளன.
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் சந்திரசூடேசுவரர் கோயில், பெண்ணேசுவரம்
செல்லும் வழி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள தேன்கனிக் கோட்டையிலிருந்து சிறிது தொலைவில் அமைந்துள்ள மலைமீது இக்கோயில் உள்ளது.
கோவில் திறக்கும் நேரம் காலை 7.30 மணி முதல் 12.30 மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 வரை
அருள்மிகு யோகநரசிம்மர் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் தேன்கனிக்கோட்டை
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் ஓசூர்
அருகிலுள்ள விமான நிலையம் கோயம்புத்தூர்
தங்கும் வசதி தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் தாமஸ் அலெக்சாண்டர்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தாமஸ் அலெக்சாண்டர்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 01 Jul 2017
பார்வைகள் 54
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்