வழிபாட்டுத் தலம்
புருடோத்தம பெருமாள் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | புருடோத்தம பெருமாள் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | திருவண்புருடோத்தம் |
| ஊர் | திருநாங்கூர் |
| வட்டம் | சீர்காழி |
| மாவட்டம் | நாகப்பட்டினம் |
| உட்பிரிவு | 2 |
| மூலவர் பெயர் | புருடோத்தமன் |
| தாயார் / அம்மன் பெயர் | புருடோத்தம நாயகி |
| திருக்குளம் / ஆறு | திருப்பாற்கடல் தீர்த்தம் |
| வழிபாடு | நான்கு கால பூசை |
| திருவிழாக்கள் | கருடசேவை |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.7-ஆம் நூற்றாண்டு / பல்லவர், முற்காலச் சோழர் |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | புருடோத்தமன், கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம். |
| தலத்தின் சிறப்பு | 1300 ஆண்டுகள் பழமையானது. திவ்ய தேசம். திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. |
|
சுருக்கம்
திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட இத்தலம் திருநாங்கூரிலேயே உள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள எம்பெருமான் புருஷோத்தமன். “புருஷோத்தம இதி வைஷ்ணவா” என்று ஸ்ரீவைஷ்ணவர்கள் எம்பெருமானை புருஷோத்தமன் என்ற பெயரில் அழைப்பார்கள். இவனைப் பற்றிக் கூறும் வித்தைக்கு “புருஷோத்தம வித்னய” என்று பெயர். தமிழ்நாட்டில் உள்ள திவ்ய தேசங்களில் புருஷோத்தமன் என்ற பெயரில் எம்பெருமான் எழுந்தருளியிருப்பது இங்கு மட்டுந்தான். புருஷோத்தமனைத் தான் தூய தமிழில் புருடோத்தமன் என்கிறார் மங்கை மன்னன். குழந்தைக்கு வரும் துன்பத்தை தாய் தந்தை போக்குவர். தம்மிடம் தோன்றிய பிரம்மா முதலான தேவாதி தேவர்கட்கு உண்டாகும் துன்பத்தைப்போக்கி தம்மை எதிர்ப்பவர்களை அழித்து உலகத்தை ரட்சிக்கும் புருடோத்தமன் இவனே. (பக்தர்களும், முக்தர்களும், நித்யர்களுமாகிய புருஷர்கள் யாவரினுஞ் சிறந்தவனென்னும் பொருள்படும்) குறைவில்லா ரட்சிப்புத் தன்மை கொண்டு வள்ளல்போல் தன் அருளை வாரி வழங்குதலால் (வள்ளல் தன்மையை உயர்வு படுத்திக் காட்ட) வண் புருடோத்தமன் ஆனான். இந்த சம்பந்தத்தால் இத்தலம் வண் புருடோத்தமமாயிற்று. திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாக்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம். மணவாள மாமுனிகளும் இங்கு எழுந்தருளினார். தை அமாவாசைக்கு மறுநாளான கருட சேவைக்கு இந்தப் புருடோத்தமனும் புறப்படுவார்.
|
|
புருடோத்தம பெருமாள் கோயில்
| கோயிலின் அமைப்பு | இக்கோயிலின் விமானம் சஞ்சீவி விக்ரஹ விமானம் என்ற வகையைச் சார்ந்தது. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | பள்ளிகொண்ட ரங்கநாதர் கோயில், வைகுண்டநாதர் கோயில், மதங்கீசுவரர் கோயில் |
| செல்லும் வழி | இத்தலம் சீர்காழியிலிருந்து கிழக்கே 5 மைல் தொலைவில் அமைந்துள்ளது. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Nov 2018 |
| பார்வைகள் | 23 |
| பிடித்தவை | 0 |