Back
வழிபாட்டுத் தலம்
தீபப்பிரகாசப் பெருமாள் கோவில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் தீபப்பிரகாசப் பெருமாள் கோவில்
வேறு பெயர்கள் திருத்தண்கா
ஊர் திருத்தண்கா
வட்டம் காஞ்சிபுரம்
மாவட்டம் காஞ்சிபுரம்
உட்பிரிவு 2
மூலவர் பெயர் தீபப் பிரகாசர், விளக்கொளிப் பெருமாள் திவ்யப் பிரகாசர்
தாயார் / அம்மன் பெயர் மரகதவல்லி
திருக்குளம் / ஆறு சரஸ்வதி தீர்த்தம்
வழிபாடு நான்கு கால பூசை
திருவிழாக்கள் வைகுண்ட ஏகாதசி, இராமநவமி, நவராத்திரி
காலம் / ஆட்சியாளர் கி.பி.10-ஆம் நூற்றாண்டு
சுவரோவியங்கள் இங்குள்ள வேதாந்த தேசிகரின் சன்னதியில் உட்புறச் சுவர்களில் எல்லாம் ஸ்வாமி தேசிகனின் ஜெனனம் முதலான வரலாற்றை சித்தரிக்கும் நிகழ்ச்சிகள் அழகோவியமாகத் தீட்டப்பட்டுள்ளன.
சிற்பங்கள் இச்சன்னதியில் தேசிகன் ஞான முத்திரையோடு எழுந்தருளியுள்ளார். இங்குள்ள ஸ்வாமி தேசிகனின் திருமேனியை அவரது குமாரர் நயினவராதாச்சாரியார் தான் பிரதிஷ்டை செய்தார். ஸ்ரீஸ்வாமி தேசிகர் தனது வாழ்நாளெல்லாம் வைத்து வழிபட்ட திருவாராதனப் பெருமாளான ஸ்ரீலெட்சுமி ஹயக்ரீவர் தற்போது இச்சன்னதியில்தான் உள்ளார். தேசிகன் சன்னதி தெற்கு நோக்கி அமைந்ததாகும்.
தலத்தின் சிறப்பு 1200 ஆண்டுகள் பழமையானது. திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற திருப்பதி.
சுருக்கம்
தண் என்றால் குளிர்ச்சி. கா என்றால் சோலை. குளிர்ச்சி பொருந்திய சோலையைத் தெரிவு செய்து பிரம்மன் வேள்விச்சாலை அமைத்த இடமாதலால் திருத்தண்கா என்றாயிற்று. திருமங்கையாழ்வாரால் மட்டும் 2 பாக்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம். தலைப்பிலிட்ட பாடலில் இப்பெருமாளின் திருநாமமான விளக்கொளியையும், பிராட்டியின் திருநாமமான மரகதவல்லி என்பதையும் இத்திவ்ய தேசத்தின் திருநாமமான திருத்தண்கா என்பதையும் ஒரே வரியில் முறைப்படுத்தி மங்களாசாசனம் செய்துள்ளார் திருமங்கை. திருவேங்கடத்து எம்பெருமானையே ஈண்டு கண்டதாக திருமங்கை மங்களாசாசனம் செய்துள்ளார். வைணவ சம்பிரதாயத்தில் பாஷ்யகார சித்தாந்தம் என்பதைப் போதித்த மாமேதை ஸ்ரீஸ்வாமி தேசிகன் இங்குதான் அவதரித்தார். அதாவது (இத்தலம்) தூப்புல் என்னும் பகுதியே அவரது அவதார ஸ்தலமாகும்.
தீபப்பிரகாசப் பெருமாள் கோவில்
கோயிலின் அமைப்பு
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் வரதராஜப் பெருமாள் கோயில், வைகுண்டப் பெருமாள் கோயில், ஏகாம்பரேசுவரர் கோயில், காமாட்சியம்மன் கோயில்
செல்லும் வழி காஞ்சி மாநகரிலேயே அமைந்துள்ளது. அட்ட புயக்கர சன்னதியிலிருந்து மேற்குத் திக்கில் சுமார் அரை மைல் தொலைவில் உள்ளது.
கோவில் திறக்கும் நேரம் காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 வரை
தீபப்பிரகாசப் பெருமாள் கோவில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் காஞ்சிபுரம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் காஞ்சிபுரம்
அருகிலுள்ள விமான நிலையம் சென்னை - மீனம்பாக்கம்
தங்கும் வசதி காஞ்சிபுரம் விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 23 Nov 2018
பார்வைகள் 29
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்