Back
வழிபாட்டுத் தலம்
திருச்சி புனித லூர்து அன்னை ஆலயம்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் திருச்சி புனித லூர்து அன்னை ஆலயம்
வேறு பெயர்கள் புனித லூர்து அன்னை கிறித்துவ ஆலயம்
மாவட்டம் திருச்சிராப்பள்ளி
உட்பிரிவு 8
தாயார் / அம்மன் பெயர் புனித லூர்து அன்னை
தலமரம் கிறிஸ்துமஸ் மரம்
ஆகமம் வேதாகமம்
வழிபாடு வார நாட்கள் : காலை: 5.30 a.m & 6.30 a.m மாலை: 6.30 p.m ஞாயிறு : காலை: 5.15 a.m, 6.15 a.m & 7.30 a.m மாலை: 6.30 p.m
திருவிழாக்கள் கிறிஸ்துமஸ், ஈஸ்டர், ஆங்கிலப்புத்தாண்டு
காலம் / ஆட்சியாளர் கி.பி.1896
சுவரோவியங்கள் மேற்கூரையிலும் பக்கவாட்டிலும் வண்ண ஓவியங்கள். பெரும்பாலானவை கண்ணாடி ஓவியங்களாக இருக்கின்றன.
சிற்பங்கள் லூர்து அன்னையின் சிற்பம் ஆலயத்தின் வழிபாட்டிடத்தின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
தலத்தின் சிறப்பு 114 ஆண்டுகள் பழமையானது.
சுருக்கம்
திருச்சிராப்பள்ளி நகரின் மத்தியில், மெயின்கார்டு கேட் அருகே புனித லூர்து அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயமும் இதன் வரலாறும் புனித ஜோசப் கல்லூரி வரலாறும் வளாகங்களும் இணைநதே உள்ளன. இந்த ஆலயத்தின் எதிரே திருச்சி மலைக் கோட்டையும் தெப்பகுளமும் அமைந்துள்ளன. தெப்பகுளத்தின் கிழக்குக் கரையில், கிளைவ்ஸ் கட்டடம் இருக்கும் இடத்தில் இருந்து இந்த ஆலயத்தினையும் தெப்பக்குள மண்டபத்தையும் ஒரு சேர மத நல்லிணக்கத்தோடு காணலாம். திருச்சியில் கோட்டைப் பகுதியில் கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயம் கட்டத் தொடங்கியபோது இயேசு சபையில் பிரெஞ்ச்சு நாட்டைச் சேர்ந்த இறைப் பணியாளர்களே அதிகம் இருந்தனர். அவர்கள் தங்கள் நாட்டில் (பிரான்ஸ்) காட்சி தந்த லூர்து அன்னையின் பெயரையே இந்த தேவாலயத்திற்கும் சூட்டினார்கள். ஆலயத்தின் நூற்றாண்டு விழா (1896 –1998) நடந்தது. அப்போது தேவாலயம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. இப்போதும் திருச்சிக்கு கம்பீரம் சேர்க்கும் விதமாக புனித லூர்து அன்னை ஆலயம் இருந்து வருகிறது.
திருச்சி புனித லூர்து அன்னை ஆலயம்
கோயிலின் அமைப்பு தேவாலயத்தின் வாயில் வியக்கத்தக்கதாய் காணப்படுகிறது. தேவாலயம் கோதிக் கட்டடக்கலை (Gothic architecture) அமைப்பில் உருவானது. இந்த கோதிக் கட்டடக் கலையினைப் பற்றிய பயிற்சிகள் , ஆலயத்தை கட்டும் பணியை மேற்கொண்ட தனம் சவரிமுத்து மேஸ்திரியாருக்கும் மற்றவர்களுக்கும் சொல்லித் தரப்பட்டன. இதன் மேற்பார்வையை அருள்தந்தை பெர்னார்டுசெல் பார்த்துக் கொண்டார். தேவாலயம் கட்டுவதற்கு தேவையான கற்கள் கல்லூரியின் உள்ளே இருந்த கல் குவாரியில் இருந்தே வெட்டி எடுக்கப்பட்டன. சுடு சிற்பங்கள் இங்கிருந்த களி மண்ணாலேயே செய்யப்பட்டன. கட்டட அமைப்பில் பிரான்ஸ்சில் உள்ள லூர்து நகர் தேவாலயம் போன்றே இந்த திருச்சி புனித லூர்து அன்னை தேவாலயமும் கட்டப்பட்டது . கோயிலின் உள்ளே நன்கு விசாலமான அமைப்பு. அண்ணாந்து பார்க்க வைக்கும் மேற்கூரையிலும் பக்கவாட்டிலும் வண்ண ஓவியங்கள். பெரும்பாலானவை கண்ணாடி ஓவியங்களாக இருக்கின்றன.
பாதுகாக்கும் நிறுவனம் திருச்சி மறை மாவட்ட திருச்சபை
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் திருச்சி மலைக் கோட்டை, தெப்பகுளம், கிளைவ்ஸ் கட்டடம்
செல்லும் வழி திருச்சி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.
கோவில் திறக்கும் நேரம் வார நாட்கள் : காலை: 5.30 a.m மற்றும் 6.30 a.m மாலை: 6.30 p.m ஞாயிறு : காலை: 5.15 a.m, 6.15 a.m மற்றும் 7.30 a.m மாலை: 6.30 p.m
திருச்சி புனித லூர்து அன்னை ஆலயம்
அருகிலுள்ள பேருந்து நிலையம் திருச்சி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் திருச்சி
அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி
தங்கும் வசதி திருச்சி நகர விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 27 Feb 2021
பார்வைகள் 48
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்