வழிபாட்டுத் தலம்
விளமல் பதஞ்சலி மனோகரர் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | விளமல் பதஞ்சலி மனோகரர் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | திருவிளமர், திருவடி க்ஷேத்திரம், சிவபாத ஸ்தலம் |
| ஊர் | விளமல் |
| வட்டம் | திருவாரூர் |
| மாவட்டம் | திருவாரூர் |
| தொலைபேசி | 9489479896, 9942881778 |
| உட்பிரிவு | 1 |
| மூலவர் பெயர் | பதஞ்சலி மனோகரர் |
| தாயார் / அம்மன் பெயர் | யாழினும் மென்மொழியம்மை, மதுரபாஷினி |
| தலமரம் | வில்வம், கிளுவை |
| திருக்குளம் / ஆறு | அக்னி தீர்த்தம் |
| ஆகமம் | சிவாகமம் |
| வழிபாடு | நான்கு கால பூசை |
| திருவிழாக்கள் | மார்கழி திருவாதிரை, ஆடிப்பூரம், நவராத்திரி, புரட்டாசி அமாவாசை, ஐப்பசி அன்னாபிஷேகம் |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.7-ஆம் நூற்றாண்டு / பல்லவர், முற்காலச் சோழர், விசயநகரர், சம்புவராயர் |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | கோபுர வாயிலின் இருபுறமும் விநாயகரும் முருகனும் வீற்றிருக்கின்றனர். உள்ளே நந்தி, பலிபீடம் ஆகியவற்றைக் காணலாம். கோயில் முன் மண்டபத்தில் பதஞ்சலி முனிவரின் திருவுருவம் உள்ளது. வியாக்ரபாத முனிவர், சூரியன் ஆகியோர் சிற்பங்கள் இக்கோயிலில் காணப்படுகின்றன. இறைவன் கிழக்கு நோக்கி மண்ணால் ஆன சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கருவறை தேவகோட்டங்களில் தட்சிணாமூர்த்தி, மஹாவிஷ்ணு மற்றும் அர்த்தமண்டப கோட்டங்களில் கணபதி, துர்க்கை ஆகிய சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. |
| தலத்தின் சிறப்பு | 1300 ஆண்டுகள் பழமையானது. தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம். திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற தலம். சோழர் கால கல்வெட்டுகளைக் கொண்டுள்ளது. |
|
சுருக்கம்
திருவிளமர் என்ற இவ்வூர் தற்போது விளமல் என்றழைக்கப்படுகிறது. விளமல் பதஞ்சலி மனோகரர் கோயில் பாடல் பெற்ற காவிரித் தென்கரைத் தலங்களில் 90ஆவது தேவாரத்தலமாகும். திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியுள்ள இப்பதிகம் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. பதஞ்சலி முனிவரோடு தொடர்புடைய திருத்தலமாக இக்கோயில் தலபுராணத்தின் வழி அறியப்படுகிறது.
|
|
விளமல் பதஞ்சலி மனோகரர் கோயில்
| கோயிலின் அமைப்பு | இக்கோயிலின் கருவறை விமானம் தாங்குதளம் முதல் கூரைப்பகுதி வரை கற்றளியாகவும், தளப்பகுதி சுதையாலும் அமைந்துள்ளது. கோயில் திருச்சுற்றில் பிற்காலத்திய சிறு சன்னதிகள் அமைந்துள்ளன. தளங்களற்ற கோபுர அடித்தளம் முகப்புத் தோரண வாயிலாக உள்ளது. அக்னி தீர்த்தக் குளம் கோயிலின் முன் காணப்படுகிறது. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | திருவாரூர் தியாகராஜர் கோயில், திருக்குவளை, திருக்கண்ணமங்கை, திருவலிவலம் |
| செல்லும் வழி | திருவாரூர் - தஞ்சாவூர் சாலையில் திருவாரூரில் இருந்து 3 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது. விளமல் பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலேயே கோவில் உள்ளது. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 7.30 மணி முதல் பகல் 12.00 மணி வரை மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 20 Mar 2019 |
| பார்வைகள் | 104 |
| பிடித்தவை | 0 |