வழிபாட்டுத் தலம்
ஸ்ரீமாவடி கருப்பசாமி கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | ஸ்ரீமாவடி கருப்பசாமி கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | கருப்பசாமி கோயில் |
| ஊர் | கூடல்நகர் |
| வட்டம் | மதுரை |
| மாவட்டம் | மதுரை |
| உட்பிரிவு | 5 |
| திருக்குளம் / ஆறு | வைகை ஆறு |
| வழிபாடு | ஒருகால பூசை |
| திருவிழாக்கள் | மாசி மகாசிவராத்திரி |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.17-ஆம் நூற்றாண்டு/நாயக்கர் காலம் |
| கல்வெட்டு / செப்பேடு | இல்லை |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | ஸ்ரீமாவடி கருப்பசாமி கோயிலில் மாவடி கருப்பசாமி நின்ற நிலையில் கற்சிற்பமாகவும், சுதைச் சிற்பங்களாகவும் காட்சியளிக்கிறார். கருப்பசாமியின் சுதைச்சிற்பங்கள் பெரிய அளவில் ஒன்றும், சிறிய அளவில் ஒன்றுமாய் இரண்டு சிற்பங்களாக பீடத்தின் மீது நின்ற நிலையில் உள்ளன. கருப்பசாமி ஓங்கிய வீச்சரிவாளுடனும், நீண்ட முறுக்கிய மீசையுடனும், உருட்டிய விழிகளும், நெரித்த புருவமும் கொண்டவராய், தீயோருக்கு அச்சம் ஊட்டுபவராய் காணப்படுகிறார். |
| தலத்தின் சிறப்பு | மதுரை நகருக்குள் அமைந்த காவல்தெய்வக் கோயிலாகும். கருப்பசாமி ஊர்க்காவல், எல்லைக்காவல் முதலியவற்றிற்காக வழிபடப்பெறுகிறார். |
|
சுருக்கம்
மதுரை மாநகரம் கூடல்நகரில் ஸ்ரீமாவடி கருப்பசாமி கோயில் அமைந்துள்ளது. கருப்பசாமி வழிபாடு இங்கு பல காலமாக நடைபெற்று வருவதாகத் தெரிகிறது. இங்குள்ள கருப்பசாமி கோயில் கட்டிட அமைப்பில்லாது திறந்த வெளியில் அமைந்துள்ளது. படிகளுடன் கூடிய பீடத்தின் மீது கருப்பசாமியின் சிலையை வைத்து வணங்குகிறார்கள். காவல் தெய்வமாகிய கருப்பசாமிகள் பலர். இங்குள்ள கருப்பசாமி தெய்வம் ஸ்ரீமாவடி கருப்பசாமி என்று பெயர் பெறுகிறார். ஊர்க்காவல் தெய்வமாகிய கருப்பசாமி வழிபாடு தென்தமிழகம் எங்கும் குறிப்பாக மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் பரவலாகக் காணப்படுகின்றது.
|
|
ஸ்ரீமாவடி கருப்பசாமி கோயில்
| கோயிலின் அமைப்பு | ஸ்ரீமாவடி கருப்பசாமி கோயில் கட்டிட அமைப்பு இன்றி உள்ள ஒரு வழிபாட்டுத் தலமாகும். படிகளுடன் கூடிய பீடத்தின் மீது கருப்பசாமி சிலை வைக்கப்பட்டு வணங்கப்படுகிறது. கருப்பசாமியின் முன்னால் இரு உயரமான கற்கள் தூண் போன்று நடப்பட்டு, அவற்றில் மணிகள் கட்டப்பட்டுள்ளன. பீடத்தின் மீது கருப்பசாமி மூன்று வடிவத்தில் காணப்படுகிறார். ஒன்று கற்சிற்பமாகவும், மற்றவை இரண்டும் சுதையாலான உருவங்களும் ஆகும். கூடல் நகர் வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஒரு சிற்றூராகும். இப்பகுதியில் பண்டைய காலத்தில் வேளாண்மை செழித்திருந்தது. எனவே நிலத்தை, பயிர்களை, கால்நடைகளை காக்கும் தெய்வமாக இங்கு ஸ்ரீமாவடி கருப்பசாமி வழிபடப்பெற்றும், தற்போது வரை அவ்வழிபாட்டு மரபு தொடர்கிறது. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | தனியார் |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | மதுரை மீனாட்சியம்மன் கோயில், கூடல் அழகர் பெருமாள் கோயில், கோச்சடை முத்தையா கோயில் |
| செல்லும் வழி | மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து கூடல்நகருக்கு பேருந்தில் செல்லலாம். |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 70 |
| பிடித்தவை | 0 |