Back
வழிபாட்டுத் தலம்
அருள்மிகு ஒச்சாண்டம்மன் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் அருள்மிகு ஒச்சாண்டம்மன் கோயில்
வேறு பெயர்கள் ஒச்சாண்டம்மன் கோயில்
ஊர் பாப்பாபட்டி
வட்டம் உசிலம்பட்டி
மாவட்டம் மதுரை
உட்பிரிவு 5
தாயார் / அம்மன் பெயர் ஒச்சாண்டம்மன், ஆண்டாயி ஆச்சி அம்மன்
திருக்குளம் / ஆறு ஒச்சாண்டம்மன் கோயில் திருக்குளம்
வழிபாடு இருகால பூசை
திருவிழாக்கள் மாசி மகாசிவராத்திரி, ஆடித் திருவிழா, தை வெள்ளி, பங்குனித் திருவிழா
காலம் / ஆட்சியாளர் கி.பி.17-ஆம் நூற்றாண்டு/நாயக்கர் காலம்
கல்வெட்டு / செப்பேடு இல்லை
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் இக்கோயிலின் முதன்மை தெய்வமான ஒச்சாண்டியம்மன் தனி கருவறையில் அருள்பாலித்து வருகிறார். கருவறையின் வாயிலில் மாயாண்டிச்சாமி சிற்பம் காணப்படுகின்றது. பெரிய கருப்பு, பெரிய தவசி சாமி, செந்தவசி சாமி, மாயாண்டிச்சாமி ஆகிய தெய்வங்களுக்கு சிற்பங்களும், காளாஞ்சி கருப்பு, கோட்டைக் கருப்பு, சந்தனக்கருப்பு, கருந்தவசி, ஆச்சிக்கிழவி ஆண்டாயி ஆகிய தெய்வங்களுக்கு பீடங்களும் அமைக்கப்பட்டு வழிபாட்டில் உள்ளன. உலகநாதன்-ஒச்சாண்டம்மன், பேச்சியம்மன், பெரியகருப்பசாமி, சின்னசாமி, அக்கினிதங்கு-மதனதங்கு ஆகிய தெய்வங்களுக்கு தனித்தனி சன்னதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. கோயில் மண்டபங்களில் அமைந்துள்ள தூண்களில் இராமன், கிருஷ்ணன், அம்மன், விஷ்ணு, சிவலிங்கம், முனிவர், விலங்குகள், காவல் தெய்வங்களாகிய கருப்பசாமிகள் ஆகிய சிற்பங்கள் புடைப்புச் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. ஒச்சாண்டம்மன் கருவறையின் முன்பு யானை வாகனம் காட்டப்பட்டுள்ளது. இச்சிற்பங்கள் யாவும் கல்லால் வடிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
தலத்தின் சிறப்பு ஒச்சாண்டம்மன் கோயில் கருமாந்தூர், பாப்பாபட்டி ஆகிய ஊர் மக்களுக்கு குலதெய்வமாக விளங்குகின்றது. நாயக்கர் காலத்திலிருந்தே இக்கோயில் வழிபாட்டில் உள்ளது.
சுருக்கம்
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்த பாப்பாபட்டி ஊராட்சியில் உள்ள ஒரு கிராமம் ஆகும். பாப்பாபட்டி உசிலம்பட்டி வட்டத்தின் வாலாந்தூர் உள்வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களில் ஒன்றாகும். இங்குள்ள ஒச்சாண்டி அம்மன் கோயில் இவ்வூரின் முக்கிய வழிபாட்டுத் தலமாகும். இக்கோயில் பெரிய கட்டிட அமைப்பைக் கொண்டு விளங்குகிறது. இங்கு மூலவரான ஒச்சாண்டியம்மன், பெரிய கருப்பு, காளாஞ்சி கருப்பு, சின்னசாமி, கருந்தவசி, பேச்சியம்மன், ஆச்சிக்கிழவி ஆண்டாயி ஆகிய பல தெய்வங்களும் வழிபாட்டில் உள்ளன.
அருள்மிகு ஒச்சாண்டம்மன் கோயில்
கோயிலின் அமைப்பு ஒச்சாண்டம்மன் கோயில் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டது. நாயக்கர் கால மண்டபத் தூண்களுடன் விளங்குகின்றது. ஒச்சாண்டம்மன் கோயில் கல்லால் ஆன பெரிய மதிற்சுவரைப் பெற்றுள்ளது. மதில் சுவரைத் தாண்டிய பின் உள்ள பெரிய வளாகத்தில் அடுக்குத்தீபம் வைக்கப்பட்டுள்ளது. இது கோயிலின் முன்பாக மையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அடுக்குத் தீபம் கல்லால் ஆனது. அதனையடுத்து இருபுறமும் உயர்ந்த மேடை போன்ற அமைப்பு காணப்படுகிறது. இது கோயில் நிருவாகத்தார், கணக்கர் ஆகியோர் அமரும் இடமாகும். இந்த முகமண்டபத்தையடுத்து மகாமண்டபம் இருவரிசைத் தூண்களுடன் காணப்படுகிறது. மையப்பகுதியில் உண்டியல், நந்தாவிளக்கு, யானை வாகனம், பலிபீடம் ஆகியன அமைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்தாற் போன்று கருவறையில் ஒச்சாண்டம்மன் அருள்பாலிக்கிறார். ஒச்சாண்டம்மன் நடுவில் அமர இருபுறமும் இருதேவியர் அமர்ந்துள்ள புடைப்புச் சிற்பமாகக் காணப்படுகின்றது. பிரமகுல இராக்கம்மாள் என்னும் தெய்வம் சுதைச் சிற்பமாகவும், ஆண்டாயி ஆச்சிக்கிழவிக்கு புடைப்புச் சிற்பமாகவும் வழிபாட்டில் உள்ளன. இக்கோயிலுக்கு திருக்குளம் ஒன்று நாயக்க மன்னர் காலத்தில் அமைக்கப்பட்டது. கற்படிக்கட்டுகளுடன் கூடிய தீர்த்தத்துறையாக இக்குளம் விளங்குகிறது.
பாதுகாக்கும் நிறுவனம் ஊர் நிர்வாகம்
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் பில்லியம்மாள் கோயில்
செல்லும் வழி உசிலம்பட்டியிலிருந்து 10 கிமீ தொலைவிலும்,  மதுரையிலிருந்து 36 கிமீ தொலைவிலும் பாப்பாபட்டி கிராமம் உள்ளது.
கோவில் திறக்கும் நேரம் காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை
அருள்மிகு ஒச்சாண்டம்மன் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் பாப்பாபட்டி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் திருமங்கலம்
அருகிலுள்ள விமான நிலையம் மதுரை
தங்கும் வசதி உசிலம்பட்டி வட்டார விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் ஆனந்த்குமார், எம்.ஆர்.அருண், டேவிட்ராஜ், இந்திரசித்து கிருஷ்ணன், ஆர்.கே.கலைவாணன், கார்த்திக், சின்னா, பிரபாகரன், இராஜா, இராக்கி ராகுல், சந்தோஷ், சிவக்கொடி, சுஜி. சுந்தர்கழி. முருகன், விக்னேஷ்வரன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 124
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்