Back
வழிபாட்டுத் தலம்
திருச்சாட்டியக்குடி வேதபுரீசுவரர் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் திருச்சாட்டியக்குடி வேதபுரீசுவரர் கோயில்
வேறு பெயர்கள் திருச்சாட்டியக்குடி
ஊர் திருச்சாட்டியக்குடி
வட்டம் கொள்ளிடம்
மாவட்டம் நாகப்பட்டினம்
உட்பிரிவு 1
மூலவர் பெயர் வேதநாதர், வேதபுரீஸ்வரர், ரிக்வேதநாதர்
தாயார் / அம்மன் பெயர் வேதநாயகி
தலமரம் வன்னி 
திருக்குளம் / ஆறு வேத தீர்த்தம்
வழிபாடு நான்கு கால பூசை
திருவிழாக்கள் மாசிமக உற்சவம் இத்தலத்தில் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. நவராத்திரி விழாவும் இத்தலத்தில் சிறப்புடையது.
காலம் / ஆட்சியாளர் கி.பி.10-ஆம் நூற்றாண்டு / சோழர்
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் மூலவர் சிவலிங்கத் திருமேனி; அம்பாள், சண்டிகேஸ்வரி
தலத்தின் சிறப்பு 1100 ஆண்டுகள் பழமையானது. கருவூர்த்தேவர், திருவிசைப்பா பாடியுள்ளார்.
சுருக்கம்
இத்தலத்திற்கு ஒன்பதின்மரில் கருவூர்த்தேவர், திருவிசைப்பா பாடியுள்ளார். ஒன்பதாம் திருமுறையான திருவிசைப்பா திருப்பல்லாண்டுப் பதிகங்கள் - சிவபெருமானின் திருமேனிச் சிறப்பு, அடியார்க்கருளிய அப்பெருமானின் நலங்கள் முதலியவற்றையும் எடுத்துரைப்பதோடு, ஆங்காங்குச் சைவசமயத் தத்துவக் கருத்துக்களையும் புகழ்ந்தோதுகிறது.
திருச்சாட்டியக்குடி வேதபுரீசுவரர் கோயில்
கோயிலின் அமைப்பு கருவறையில் மூலவர் சிவலிங்கத் திருமேனி; சற்று உயர்ந்த பாணம்; சதுர ஆவுடையார் அமைப்பு. அம்பாள் கோயில் தனிக்கோயிலாக உள்ளது. சண்டிகேஸ்வரி மூர்த்தம் வெளியில் இடப்பால் (மண்டபத்தில்) உள்ளது.
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் கீழ்வேளூர், கச்சனம், திருத்துறைப்பூண்டி
செல்லும் வழி திருவாரூர் கீழ்வேளூரிலிருந்து (கீவ) கச்சினம் வழியாகத் திருத்துறைப்பூண்டிக்கு செல்லும் வழியில் இத்தலம் உள்ளது. மேலும், திருவாரூரிலிருந்து தேவூர் வழியாக நாகப்பட்டினம் செல்லும் பாதையில் தேவூரை அடுத்துச் சாலையோரத்தில் சாட்டியக்குடி உள்ளது. பிரதான சாலையிலிருந்து சற்றுத் தள்ளி, உள்ளே கோயிலிருக்கிறது. கோயில் வரை பேருந்து செல்லும்.
கோவில் திறக்கும் நேரம் காலை 6.30 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 வரை
திருச்சாட்டியக்குடி வேதபுரீசுவரர் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் தேவூர்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் திருத்துறைப்பூண்டி
அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி
தங்கும் வசதி திருத்துறைப்பூண்டி வட்டார விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 05 Dec 2018
பார்வைகள் 203
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்