Back
வழிபாட்டுத் தலம்
கானாட்டம்புலியூர் பதஞ்சலிநாதர் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் கானாட்டம்புலியூர் பதஞ்சலிநாதர் கோயில்
வேறு பெயர்கள் மதூகவனம், திருக்கானாட்டுமுள்ளூர்
ஊர் கானாட்டம் புலியூர்
வட்டம் காட்டுமன்னார்குடி
மாவட்டம் கடலூர்
தொலைபேசி 04144 - 208 508, 208091, 93457 78863
உட்பிரிவு 1
தாயார் / அம்மன் பெயர் கோல்வளைக்கையம்பிகை, கானார்குழலாள், அம்புஜாட்சி
தலமரம் வெள்ளெருக்கு
திருக்குளம் / ஆறு சூரிய புஷ்கரிணி
ஆகமம் சிவாகமம்
வழிபாடு நான்கு கால பூசை
திருவிழாக்கள் மகாசிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரை
காலம் / ஆட்சியாளர் கி.பி.7-12-ஆம் நூற்றாண்டு / பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்
கல்வெட்டு / செப்பேடு விக்கிரம சோழன் காலத்திய கல்வெட்டில் இத்தலம் 'விருதராச பயங்கர வளநாட்டு கீழ்க்கானாட்டுமுள்ளூராகிய திருச்சிற்றம்பல சதுர்வேதி மங்கலம் ' என்று குறிக்கப்பட்டுள்ளது.
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் கருவறையில் கிழக்கு நோக்கி இலிங்க வடிவில் இறைவன் உள்ளார். இத்தலத்தில் இறைவி கோல்வளைக்கையம்பிகை தெற்கு நோக்கி காட்சி தருகிறாள். அம்மன் கருவறையின் வலப்புறத்தில் சனீசுவரர் தனி திருமுன் ஒன்றில் இருக்கிறார். கருவறை விமானத்தின் மேற்கில் அமைந்துள்ள தேவகோட்டத்தில் மகாவிஷ்ணு நின்ற கோலத்தில் இருக்கிறார். இக்கோட்டத்திற்கு நேரே இருக்கும் திருமுன் (சந்நிதி) ஒன்றில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் நின்ற கோலத்தில் இருக்கிறார். தெற்கு தேவகோட்டத்தில் ஆலமர்க்கடவுள் உள்ளார். கருவறைத் திருச்சுற்றில் காசி விசுவநாதர், காசிவிசாலாட்சி, நிருத்த விநாயகர், கஜலட்சுமி ஆகிய தெய்வங்களுக்கான தனி திருமுன்கள் அமைக்கப்பட்டுள்ளன. முன்மண்டபத்தில் இரண்டு நாகங்களுக்கு நடுவே கிருஷ்ணனும், அருகே நாகங்களுக்கு நடுவே லிங்கமும் உள்ள சிற்பங்கள் உள்ளன.
தலத்தின் சிறப்பு 1300 ஆண்டுகள் பழமையானது. தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலம். திருஞானசம்பந்தர் பாடியுள்ளார்.
சுருக்கம்
இத்தலம் பாடல் பெற்ற காவிரி வடகரையில் உள்ள 32-வது தேவாரத்தலம் ஆகும். இத்தலத்தை சுந்தரர் தனது ஏழாம் திருமுறையில் பாடியுள்ளார். நன்றாக பணி செய்தும் சரியான மரியாதை கிடைக்காமல் இருப்பவர்கள் இங்கு வேண்டிக்கொண்டால் மன அமைதி கிடைக்கும் என்பது நம்பிக்கை. பணி உயர்வு, இடமாற்றம் வேண்டுபவர்களும் இங்கு வழிபாடு செய்வது மரபாக உள்ளது. இத்தலபுராணம் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகரால் பாடப்பட்டுள்ளது. மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் அம்பாள் பேரில் 'வெண்ணீற்றுமை பிள்ளைத்தமிழ்' பாடியுள்ளார்.
கானாட்டம்புலியூர் பதஞ்சலிநாதர் கோயில்
கோயிலின் அமைப்பு மதிற்சுவருடன் கூடிய மூன்று நிலை சிறிய இராஜகோபுரம் நுழைவாயிலாக அமைந்துள்ளது. கோபுரத்தின் வழியே உட்சென்றால் நந்தி மண்டபம் உள்ளது. பிற்காலத்தில் அமைக்கப்பட்ட மண்டபங்களாக காணப்படுகின்றன. இக்கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. அம்மன் கருவறை, மூலவர் கருவறை, திருச்சுற்றில் கணபதி, முருகனுக்கு தனி சந்நிதிகள் ஆகியனவும் புதிய வேலைப்பாடுகளுடன் கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது.
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் மேலக்கடம்பூர் அமிர்தகடேசுவரர் கோயில், கீழக்கடம்பூர் ருத்திராபதீசுவரர் கோயில்
செல்லும் வழி சிதம்பரம் வழியாக காட்டுமன்னார்குடியிலிருந்து 12 கி.மீ. ஓமாம்புலியூர் செல்லும் சாலையில் மோவூர் சென்று, மோவூரிலிருந்து முட்டம் செல்லும் பாதையில் 3 கி.மீ. சென்று இடப்புறம் செல்லும் பாதையில் 1 கி.மீ. செல்ல வேண்டும்.
கோவில் திறக்கும் நேரம் காலை 6.00 முதல் பகல் 11.00 மணி வரை மாலை 5.00 முதல் இரவு 7.00 மணி வரை
கானாட்டம்புலியூர் பதஞ்சலிநாதர் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் கானாட்டம் புலியூர்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் காட்டுமன்னார்குடி
அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி
தங்கும் வசதி காட்டுமன்னார்குடி வட்டார விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் திரு.வேலுதரன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 27 Feb 2021
பார்வைகள் 52
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்