வழிபாட்டுத் தலம்
எருக்கம்பட்டு ஸ்ரீரங்கநாதர் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | எருக்கம்பட்டு ஸ்ரீரங்கநாதர் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | அரங்கநாதர் கோயில் |
| ஊர் | எருக்கம்பட்டு |
| வட்டம் | அரக்கோணம் |
| மாவட்டம் | வேலூர் |
| உட்பிரிவு | 2 |
| மூலவர் பெயர் | ரங்கநாதர் |
| தாயார் / அம்மன் பெயர் | ஸ்ரீதேவி, பூதேவி |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.10-ஆம் நூற்றாண்டு / முற்காலச் சோழர் மற்றும் இராட்டிரகூடர் |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | கருவறையில் சயனக் கோலத்தில் அரங்கநாதர் திருமகள், பூமகளுடன் ஆதிசேஷனில் காட்சியளிக்கிறார். கருவறை வாயிலில் துவாரபாலகர்கள் நின்ற நிலையில் உள்ளனர். தேவகோட்டங்களில் சிற்பங்கள் ஏதும் காணப்படவில்லை. பூமிதேசத்தின் நாற்புறமும் இரட்டை சிம்மங்கள் அமைக்கப்பட்டுள்ளன. |
| தலத்தின் சிறப்பு | 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இராட்டிரகூடர்கள் மற்றும் சோழர்கால கலைப்பாணி |
|
சுருக்கம்
இக்கோயில் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையின் கீழ் மரபுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கற்றளி முழுவதும் அத்துறையால் புனரமைக்கப்பட்டுள்ளது. சிறிய கற்றளியாக காணப்படினும் விமானத்தின் கட்டுமான அமைப்பு சிறப்பாகக் காணப்படுகிறது.
|
|
எருக்கம்பட்டு ஸ்ரீரங்கநாதர் கோயில்
| கோயிலின் அமைப்பு | புனரமைக்கப்பட்டுள்ள நிலையில் காணப்படும் இக்கோயில் முழுவதும் கற்றளியாக வடிக்கப்பட்டுள்ளது. இலாட வடிவில் இக்கோயில் கருவறை கட்டப்பட்டுள்ளது. கருவறை, சிறிய அர்த்த மண்டபம், முன் மண்டபத்துடன் கூடியதாக அமைந்துள்ளது. வாயிற் காவலர்கள் முக மண்டபத்தின் வாயிலின் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ளனர். தேவகோட்டங்கள், பஞ்சரக் கோட்டங்கள் சுவரில் அமைந்துள்ளன. அவற்றில் சிற்பங்கள் காணப்படவில்லை. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறை |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | திருமலை பாறை ஓவியம், தீர்த்தங்கரர் கோயில், மேல்பாடி அரிஞ்சீச்சுவரம் |
| செல்லும் வழி | அரக்கோணம் வட்டத்தில் உள்ள எருக்கம்பட்டு என்னும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 8.00 மணி முதல் இரவு 5.00 மணி வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 13 Mar 2019 |
| பார்வைகள் | 50 |
| பிடித்தவை | 0 |