வழிபாட்டுத் தலம்
மடம் தடாகபுரீஸ்வரர் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | மடம் தடாகபுரீஸ்வரர் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | தடாகபுரீஸ்வரர் கோயில் |
| ஊர் | மடம் |
| வட்டம் | தெள்ளார் |
| மாவட்டம் | திருவண்ணாமலை |
| உட்பிரிவு | 1 |
| மூலவர் பெயர் | தடாகபுரீஸ்வரர் |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.11-ஆம் நூற்றாண்டு / முதலாம் குலோத்துங்க சோழன் |
| கல்வெட்டு / செப்பேடு | இக்கோயிலில் முதலாம் குலோத்துங்க சோழன் காலக் கல்வெட்டே மிகத் தொன்மையானது என்பதால் இவன் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டது எனலாம். எனினும் இக்கோயிலுக்கருகில் உள்ள சறுக்கும் பாறையில் உள்ள கம்பவர்மனுடைய கல்வெட்டு இவ்வூரை குளத்தூர் என்றும், இங்கிருந்து வாணியன் சயவல்லவன் என்பவன் ஊர்ச்சபையிடம் நிலம் விலைக்கு வாங்கி ஏரிப்பட்டியாக வழங்கியுள்ளதையும் கூறுகிறது. தடாகபுரீஸ்வரர் கோயில் கல்யாண மண்டபத்தில் உள்ள மூன்றாம் இராசநாராயணன் காலக் கல்வெட்டு கி.பி.1368-இல் வெட்டப்பட்ட இக்கல்வெட்டு, ”சம்பாபிக அமராபதி சாத்தார் மகன் காதலியார் மண்டபம் கட்டியுள்ளார்” என்பதைக் குறிக்கிறது. |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | இக்கோயில் கருவறை விமானத்தின் தேவக்கோட்டங்களில் சிற்பங்கள் இடம் பெறவில்லை. கருவறையில் இறைவன் இலிங்க வடிவில் உள்ளார். கணபதி, முருகன், ஏழுகன்னியர், பைரவர், சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கான உபகோயில்கள் திருச்சுற்றில் அமைந்துள்ளன. அவ்வவற்றில் அவற்றிற்கான இறையுருவம் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் முதற்சுற்றில் அம்மன் தெற்கு நோக்கியவாறு அருள்பாலிக்கிறாள். |
| தலத்தின் சிறப்பு | 900 ஆண்டுகள் பழமையானது. பிற்காலச் சோழர் கலை, கட்டடக்கலையைப் பிரதிபலிக்கின்றது. |
|
சுருக்கம்
இக்கோயிலுக்கருகில் உள்ள சறுக்கும் பாறையில் உள்ள கம்பவர்மனுடைய கல்வெட்டு இவ்வூரை குளத்தூர் என்கிறது. குளத்தூர் என்பதே வடமொழியில் தடாகபுரி என்றாகி, இங்குள்ள இறைவன் தடாகபுரீஸ்வரர் என அழைக்கப்பட்டுள்ளார் எனக் கருத வாய்ப்புண்டு. இக்கோயிலில் பிற்காலச் சோழர்கள் கல்வெட்டு இடம்பெறுகிறது. இக்கோயிலைச் சார்ந்த கி.பி. 14-ஆம் நூற்றாண்டு கல்வெட்டொன்று “சம்பாபிக அமராபதி சாத்தார் மகன் காதலியார் மண்டபம் கட்டியுள்ளார்” என்பதைக் குறிப்பிடுகின்றது. இம்மண்டபம் நூற்றுக்கால் மண்டபம் அல்லது திருமண மண்டபமாயிருக்கலாம் எனத் தெரிகிறது. பிற்காலச் சோழர்கள் காலத்தில் அம்மனுக்கு தனி திருமுன் கட்டப்பட்டது. அவ்வாறே இக்கோயிலிலும் அம்மனுக்கு தெற்கு நோக்கிய திருமுன் (சந்நிதி) அமைந்துள்ளது. இக்கோயில் கோபுரத்தில் சுதைச் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.
|
|
மடம் தடாகபுரீஸ்வரர் கோயில்
| கோயிலின் அமைப்பு | இக்கோயில் முதலாம் குலோத்துங்கன் காலக் கற்றளியாகும். பிற்காலச் சோழர் கலைப்பாணியை பின்பற்றி இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. தேவகோட்டங்கள் வெற்றிடமாக உள்ளன. இக்கோயில் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், முகமண்டபம், நூற்றுக்கால் மண்டபம், திருமண மண்டபம், உப தெய்வங்களின் திருமுன்கள் மற்றும் கோபுரம் ஆகிய பகுதிகளைக் கொண்டுள்ளது. மிகப் பெரிய வளாகத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் மரபுச் சின்னமாக உள்ளது. வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | திருவேதிபுரம், திருவண்ணாமலை கோயில், உத்திரமேரூர் |
| செல்லும் வழி | சென்னையிலிருந்து 120 கி.மீ. தொலைவில் உள்ள வந்தவாசியிலிருந்து சேத்துப்பட்டு செல்லும் வழியில் 20 கி.மீ. தொலைவில் உள்ள ஏந்தல் கூட்டு சாலையில் இருந்து 5 கி.மீ. தொலைவில் மடம் என்ற ஊர் உள்ளது. வந்தவாசியிலிருந்து மடம் செல்லலாம். |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 6.00 -12.30முதல் மாலை 4.30-8.30 வரை |
மடம் தடாகபுரீஸ்வரர் கோயில்
| அருகிலுள்ள பேருந்து நிலையம் | ஒலக்கூர், தெள்ளார், வந்தவாசி, உத்திரமேரூர் |
|---|---|
| அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் | ஒலக்கூர், திண்டிவனம், தொழுப்பேடு |
| அருகிலுள்ள விமான நிலையம் | சென்னை - மீனம்பாக்கம் |
| தங்கும் வசதி | திருவண்ணாமலை, வந்தவாசி விடுதிகள் |
| ஒளிப்படம் எடுத்தவர் | |
| ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 May 2017 |
| பார்வைகள் | 54 |
| பிடித்தவை | 0 |