வழிபாட்டுத் தலம்
கோட்டமந்தை கொத்தாள பெரியகருப்புசாமி கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | கோட்டமந்தை கொத்தாள பெரியகருப்புசாமி கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | பெரியகருப்பசாமி கோயில் |
| ஊர் | கருமாத்தூர் |
| வட்டம் | உசிலம்பட்டி |
| மாவட்டம் | மதுரை |
| உட்பிரிவு | 5 |
| திருக்குளம் / ஆறு | கருமாத்தூர் குளம் |
| வழிபாடு | ஒருகால பூசை |
| திருவிழாக்கள் | மாசி மகாசிவராத்திரி |
| காலம் / ஆட்சியாளர் | பாண்டியர் |
| கல்வெட்டு / செப்பேடு | இல்லை |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | கோட்டை மந்தை கொத்தாள பெரியகருப்பசாமி கோயிலின் கருவறையில் பெரியகருப்பசாமி பீடத்தின் மீது சுமார் 7 அடி உயரத்தில் நின்ற நிலையில் அருள் பாலிக்கிறார். அருகில் சின்னகருப்புசாமி சிற்பம் காணப்படுகிறது. மண்பத்தின் முகப்பில் இருமூலைகளிலும் நந்தியும் பூதகணங்களும் காவலுக்கு காட்டப்பட்டுள்ளன. |
| தலத்தின் சிறப்பு | உசிலம்பட்டி வட்டாரத்திலுள்ள பல்குடியினருக்கு குலதெய்வக் கோயில். வீரவழிபாடு இங்கு சிறப்பாக நடைபெறும். |
|
சுருக்கம்
கருமாத்தூரில் உள்ள கோட்டமந்தை கொத்தாள பெரியகருப்புசாமி கோயில் இப்பகுதியில் வசிக்கும் ஒரு வீர இனத்தாருக்கு குலதெய்வக் கோயிலாகும். இவ்வினத்தார் பண்டையக் காலத்திலிருந்து நாயக்கர் காலம் வரை ஊர் காக்கும் மரபில் இருந்தவர்கள். இவர்களின் குலதெய்வமாகிய இந்த பெரியகருப்புசாமி கோயில் இன்றும் இம்மக்களால் வழிபடப்பட்டு வருகின்றது.
|
|
கோட்டமந்தை கொத்தாள பெரியகருப்புசாமி கோயில்
| கோயிலின் அமைப்பு | கோட்டமந்தை கொத்தாள பெரியகருப்புசாமி கோயில் கருவறை படிக்கட்டுகளுடன் கூடிய மண்டபத்தின் மையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கருவறையின் மேல் சிறிய விமானம் சுதை மற்றும் செங்கல் வேலைப்பாடுகளோடு விளங்குகிறது. மண்டபத்தின் மேற்கூரையின் முகப்பில் நான்கு மூலைகளிலும் காவற்பூதங்களும், நந்தியும் அமர்ந்த நிலையில் காட்டப்பட்டுள்ளனர். கோயில் கருவறையின் எதிரே பெரிய கற்தூண் ஒன்றில் அணையாவிளக்கு எரிக்கப்படுகிறது. மணிகளும், இரும்பாலான வேல்களும் வைக்கப்பட்டுள்ளன. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறை |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | சின்னசாமி கோயில், பாண்டி கோயில், ஒய்யாண்டம்மன் கோயில், நல்லகுறும்பன் கோயில் |
| செல்லும் வழி | மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து தேனி செல்லும் நெடுஞ்சாலை வழியில் சுமார் 25 கி.மீ. தொலைவில் கருமாத்தூர் அமைந்துள்ளது. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை |
கோட்டமந்தை கொத்தாள பெரியகருப்புசாமி கோயில்
| அருகிலுள்ள பேருந்து நிலையம் | கருமாத்தூர் |
|---|---|
| அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் | மதுரை |
| அருகிலுள்ள விமான நிலையம் | மதுரை |
| தங்கும் வசதி | திருமங்கலம், மதுரை நகர விடுதிகள் |
| ஒளிப்படம் எடுத்தவர் | சுரேஷ்குமார் சுப்பிரமணியன், அரவிந்தன் அரவிந்த் |
| ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 35 |
| பிடித்தவை | 0 |