Back
வழிபாட்டுத் தலம்
அருள்மிகு சந்திரசூடேசுவரர் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் அருள்மிகு சந்திரசூடேசுவரர் கோயில்
வேறு பெயர்கள் சந்திரசூடேசுவரர் கோயில்
ஊர் ஓசூர்
வட்டம் ஓசூர்
மாவட்டம் கிருஷ்ணகிரி
தொலைபேசி 04344-652172  
உட்பிரிவு 1
மூலவர் பெயர் சந்திரசூடேசுவரர்
தாயார் / அம்மன் பெயர் மரகதாம்பாள்
தலமரம் செண்பகம், வில்வம்
திருக்குளம் / ஆறு பச்சைக்குளம், பிரம்ம, பர்வத, மரகத, சாம்பவ, மச்ச, ராம, பாண்டவ, அனும, ருத்ர, விஷ்ணு, சிவகங்கை தீர்த்தங்கள்
திருவிழாக்கள் மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம், அன்னாபிஷேகம், கார்த்திகை சோமவாரம், ஆருத்ரா தரிசனம்
காலம் / ஆட்சியாளர் கி.பி.10-17-ஆம் நூற்றாண்டு
கல்வெட்டு / செப்பேடு சோழர்களின் ஆட்சி காலமான கிபி 11, 12-ம் நூற்றாண்டுகளில் இத்தல இறைவன் செவிடநாயனார், உடையார் செவிடநாயனார், செவிடையாண்டார் என அழைக்கப்பட்டார். 13-ம் நூற்றாண்டுவரை இப்பெயரால் அழைக்கப்பட்டுள்ளார். 14-ம் நூற்றாண்டில் விசயநகர ஆட்சிகாலத்தில் சூடநாதா எனவும் சூடலிங்கையா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளார். ஊர் பெயர் செவிடபாடி-செவிடவாடி-சூடவாடி என மருவியிருக்கிறது. அதைப் போல செவிடநாயனார்-சூடநாதர்-சூடநாதேசுவரர்-சூடேசுவரர் என்றாகி சந்திர சூடேசுவர் என அழைக்கப்பட்டுவருகிறார். சோழர்கால கல்வெட்டுகளும் கோயிலில் உள்ளன. கிபி 1261-ல் ஒய்சாலர்கள் ஆட்சி காலத்தில், திரிபுவனமல்ல பூர்வாதிராச அத்தியாழ்வார் மகன் தர்மத்தாழ்வார் இக்கோயிலின் நம்பிராட்டியை (மரகதம்மாள்) எழுந்தருளச் செய்தார்.
சுவரோவியங்கள் சித்தர்களின் ஓவியங்கள் முகப்பில் வரையப்பட்டுள்ளன.
சிற்பங்கள் கோயிலில் உள்ள கணபதிச் சிற்றாலயம் கங்கர்களின் சிற்பக்கூறுகளை கொண்டுள்ளது எனவும், உள் திருச்சுற்றில் உள்ள சப்தமாதர்கள், சூரியன் திருவுருவங்கள் கங்கர்கள் காலத்தவை என்றும் கருதப்படுகிறன.  மேலும் மரகதாம்பிகை சிற்றாலயம், வள்ளி-சண்முகர்- தெய்வானை, இராச கணபதி, சப்தமாதர் ஆகிய தெய்வங்களுக்குத் தனித்தனியே சிற்றாலயங்கள் அமைந்துள்ளன. அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கும் சிலைகள் உள்ளன.
தலத்தின் சிறப்பு 1000 ஆண்டுகள் பழமையானது.
சுருக்கம்
ஒசூரின் மலையுச்சியில் சந்திர சூடேசுவரர் கோயில் உள்ளது.காவிரிக் கரையிலுள்ள தலைக்காட்டை தலைநகராகக் கொண்டு ஆண்ட கங்க மன்னர்கள் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக செவிடபாடி (ஒசூர்) பகுதி இருந்துள்ளது. இக்கோயில் இவர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இராசராச சோழனின் ஆட்சிக்காலத்தால் செவிடபபாடியை உள்ளடக்கிய கங்க நாட்டை சோழர்கள் கைபற்றி தங்கள் ஆட்சிக்குள் கொண்டு வந்தார்கள். இக்கோயில் மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் இரு திருச்சுற்றுகள் கொண்டுள்ளது. இக்கோயில் மூலவர் ஒரு சுயம்பு லிங்கமாகக் காட்சியளிக்கிறார். கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், உற்சவர் மண்டபம் என இக்கோயில் அமைந்துள்ளது. மேலும் மரகதாம்பிகை சிற்றாலயம், வள்ளி-சண்முகர்- தெய்வானை, இராச கணபதி, சப்தமாதர் ஆகிய தெய்வங்களுக்குத் தனித்தனியே சிற்றாலயங்கள் அமைந்துள்ளன. அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கும் சிலைகள் உள்ளன. இக்கோயிலின் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் மாசிமாதம் பௌர்ணமி அன்று நடக்கிறது. அதையொட்டி 13 நாட்கள் திருவிழா நடக்கிறது. இத்திருவிழாவின் போது தமிழகம் தவிர கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களிலிருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் கோயில் திருவிழாவில் கூடுவது சிறப்பு.
அருள்மிகு சந்திரசூடேசுவரர் கோயில்
கோயிலின் அமைப்பு இக்கோயில் மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் இரு திருச்சுற்றுகள் கொண்டுள்ளது. ஐந்து நிலை கொண்ட இராஜகோபுரம் அமைந்துள்ளது. இக்கோயில் மூலவர் ஒரு சுயம்பு லிங்கமாகக் காட்சியளிக்கிறார். கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், உற்சவர் மண்டபம் என இக்கோயில் அமைந்துள்ளது. மேலும் மரகதாம்பிகை சிற்றாலயம், வள்ளி-சண்முகர்- தெய்வானை, இராச கணபதி, சப்தமாதர் ஆகிய தெய்வங்களுக்குத் தனித்தனியே சிற்றாலயங்கள் அமைந்துள்ளன. அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கும் சிலைகள் உள்ளன.
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் ஓசூர் மாரியம்மன் கோயில், இலட்சுமி நரசிம்மர் கோயில்
செல்லும் வழி ஓசூர் நகர் சென்னை நகரில் இருந்து மேற்கே 306 கிலோமீட்டர் தொலைவிலும் பெங்களூர் நகரத்தில் இருந்து 40 கி.மீ தொலைவிலும் உள்ளது. இந்த நகரின் மத்தியிலேயே கோயில் அமைந்துள்ளது.
கோவில் திறக்கும் நேரம் காலை 7.30 மணி முதல் 12.30 மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 வரை
அருள்மிகு சந்திரசூடேசுவரர் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் ஓசூர்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் ஓசூர்
அருகிலுள்ள விமான நிலையம் கோயம்புத்தூர்
தங்கும் வசதி ஓசூர் நகர விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் தாமஸ் அலெக்சாண்டர்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தாமஸ் அலெக்சாண்டர்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 01 Jul 2017
பார்வைகள் 60
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்