வழிபாட்டுத் தலம்
ஆஸ்தானா-இ-மவுலா அலி தர்கா
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | ஆஸ்தானா-இ-மவுலா அலி தர்கா |
|---|---|
| ஊர் | ஜமீன் பல்லாவரம் |
| வட்டம் | தாம்பரம் |
| மாவட்டம் | சென்னை |
| உட்பிரிவு | 8 |
| வழிபாடு | ஐந்து காலத் தொழுகை |
| திருவிழாக்கள் | ரமலான், பக்ரீத், மிலாடி நபி |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.16-ஆம் நூற்றாண்டு |
| கல்வெட்டு / செப்பேடு | இல்லை |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | இறை உருவங்கள், மனித உருவங்கள் மற்றும் விலங்குகள் போன்றவை செதுக்கப்படவில்லை. அது இசுலாத்தின் இறைக்கொள்கைக்கு எதிரானது. |
| தலத்தின் சிறப்பு | 400 ஆண்டுகள் பழமையானது. |
|
சுருக்கம்
இந்த ஆஸ்தானா-இ-மவுலானா-அலி தர்கா இப்பகுதியில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மவுலானா அலி என்னும் பெரியாரின் நினைவாகக் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலமாகும். பல்லாவரம் என்னும் காடுகள் நிறைந்த இப்பகுதியில் கொடிய விலங்கான சிங்கம் ஒன்றை கொன்று இவ்வூர் மக்களைக் காப்பாற்றிய வீரராகக் கருதப்படும் மவுலானா அலி அவர்களின் நினைவாக இந்த தர்கா விளங்குகின்றது. இந்த தர்கா குடைவரை ஒன்றினை மாற்றி வடிவமைக்கப்பட்டு உள்ளமை அதன் கட்டிட அமைப்பை உற்று நோக்கினால் தெரிய வருகிறது.
|
|
ஆஸ்தானா-இ-மவுலா அலி தர்கா
| கோயிலின் அமைப்பு | இந்த ஆஸ்தானா-இ-மவுலா-அலி தர்கா முன்புறம் இசுலாமிய முகப்பு வளைவுகளைப் பெற்றிருந்தாலும் அதன் உட்கட்டமைப்பை உற்று நோக்கினால் கி.பி.7-ம் நூற்றாண்டில் மகேந்திரவர்ம பல்லவ மன்னனால் குடைவிக்கப்பட்ட ஒரு குடைவரை மாற்றி அமைக்கப்பட்டு இசுலாமிய வழிபாட்டுத்தலமாக உள்ளது என்பதை அறிய முடிகிறது. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | பல்லாவரம் தர்ஹா கமிட்டி மற்றும் ஜமாத்தார்கள் |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | பல்லாவரம் தொல்லியல் கற்கருவிகள் |
| செல்லும் வழி | சென்னை எழும்பூர் - செங்கல்பட்டு ரயில் மார்க்கத்தில் உள்ள பல்லாவரத்திற்கு புறநகர் இரயில்கள் இயக்கப்படுகின்றன. பல்லாவரத்திற்கு எழும்பூர், கோயம்பேடு, தாம்பரம் ஆகிய பகுதிகளில் இருந்து பேருந்துகளும் செல்கின்றன. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 5.00 முதல் பகல் 12.00 மணி வரை மாலை 5.00 முதல் இரவு 7.00 மணி வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 27 Feb 2021 |
| பார்வைகள் | 129 |
| பிடித்தவை | 0 |