வழிபாட்டுத் தலம்
அருள்மிகு அகத்தீசுவரர் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | அருள்மிகு அகத்தீசுவரர் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | பனங்குடி பரமேசுவரர் கோயில் |
| ஊர் | பனங்குடி |
| வட்டம் | குளத்தூர் |
| மாவட்டம் | புதுக்கோட்டை |
| உட்பிரிவு | 1 |
| மூலவர் பெயர் | பரமேசுவரர், அகத்தீசுவரர் |
| திருவிழாக்கள் | பிரதோஷம், சிவராத்திரி |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.9-ஆம் நூற்றாண்டு / முத்தரையர்கள் |
| கல்வெட்டு / செப்பேடு | கருவறையின் வடசுவரில் சோழர் காலக் கல்வெட்டுகளில் பரகேசரிவர்மனின் 14- ஆட்சியாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இக்கல்வெட்டுகளில் இக்கோயில் இறைவன் பனங்குடி பரமேசுவரர் என்றே அழைக்கப்படுகிறார். |
| சுவரோவியங்கள் | இல்லை |
| தலத்தின் சிறப்பு | 1100 ஆண்டுகள் பழமையானது. |
|
சுருக்கம்
இக்கோயிலை பரமேசுவரர் கோயில் என்றே அழைக்கின்றனர். தஞ்சை மற்றும் புதுக்கோட்டைப் பகுதிகளை ஆண்டு வந்த முத்தரையர்கள் காலத்திய கட்டடக் கலையைச் சேர்ந்த இக்கலைக் கோயில் பிற்காலத்தில் சோழர்களால் புனரமைக்கப்பட்டுள்ளது என்பதனை இங்குள்ள சோழர் காலக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
|
|
அருள்மிகு அகத்தீசுவரர் கோயில்
| கோயிலின் அமைப்பு | |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறை |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | குடுமியான் மலை, நார்த்தாமலை விசயாலய சோழிச்சுவரம், கேடிலியப்பர் கோயில், சித்தன்னவாசல் |
| செல்லும் வழி | அன்னவாசலிலிருந்து தென்கிழக்கே 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 6.00 -12.00 முதல் மாலை 4.00-8.00 வரை |
அருள்மிகு அகத்தீசுவரர் கோயில்
| அருகிலுள்ள பேருந்து நிலையம் | பனங்குடி, அன்னவாசல் |
|---|---|
| அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் | புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர் |
| அருகிலுள்ள விமான நிலையம் | திருச்சி |
| தங்கும் வசதி | புதுக்கோட்டை நகர விடுதிகள் |
| ஒளிப்படம் எடுத்தவர் | American Institute of Indian Studies |
| ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | American Institute of Indian Studies |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 03 Sep 2018 |
| பார்வைகள் | 192 |
| பிடித்தவை | 0 |