வழிபாட்டுத் தலம்
நல்லமறம் கருப்பசாமி கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் நல்லமறம் கருப்பசாமி கோயில்
வேறு பெயர்கள் கருப்பர் கோயில்
ஊர் நல்லமறம்
வட்டம் பேரையூர்
மாவட்டம் மதுரை
உட்பிரிவு 5
திருக்குளம் / ஆறு நல்லமறம் ஊர்க் கண்மாய்
வழிபாடு ஒருகால பூசை
திருவிழாக்கள் மாசி மகாசிவராத்திரி
காலம் / ஆட்சியாளர் பாண்டியர்
கல்வெட்டு / செப்பேடு இல்லை
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் நல்லமறம் கருப்பசாமி கோயிலில் திறந்த வெளியில் கருப்பசாமியின் நின்ற நிலை சிற்பம் காணப்படுகின்றது. சுமார் ஆறடி உயரத்திற்கு ஓங்கிய அரிவாளுடன் நிற்கும் கருப்பசாமி சிற்பம் கல்லால் ஆனது. கருப்பசாமிக்கு அருகில் பெண் தெய்வ சிற்பம் ஒன்று நின்றநிலையில் கையில் சூலாயுதத்தை ஓங்கியபடி அமைக்கப்பட்டுள்ளது. கருப்பசாமி சிற்பத்தை விட இப்பெண் தெய்வ சிற்பம் உயரம் குறைந்த நிலையில் வடிக்கப்பட்டுள்ளது. இவ்விரு சிற்பங்களும் பீடத்தின் மேல் நின்ற நிலையில் காட்டப்பட்டுள்ளன. கருப்பசாமி வீராவேசம் உடையவராய், நெரித்த புருவத்தினராய், உருட்டிய விழிகளுடன், பெரிய மீசையுடன், இடது கையை சுக்குமாந்தடியில் ஊன்றியபடி காட்டப்பட்டுள்ளார். கருப்பசாமி அருகிலுள்ள பெண்தெய்வமும் முத்தலை சூலத்தை ஓங்கியபடி நின்றாலும் முகத்தில் அமைதி தவழ்கிறது. இக்கோயிலில் அய்யனார் பூரனை, புஷ்கலையுடன் அமர்ந்த நிலையில் காட்டப்பட்டுள்ளார்.
தலத்தின் சிறப்பு பாண்டியர் காலத்தில் உருவான ஊர். இங்குள்ள கருப்பசாமி வழிபாடு தொன்மையானது.
சுருக்கம்
பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனின் தம்பி நன்மாறன் பெயரால் இவ்வூர் அழைக்கப்பட்டிருக்க வேண்டும். நல்லமாறன் என்ற பெயரே காலப்போக்கில் நல்லமாறன் என மருவி, பின்னர் நல்லமறமாக நிலைத்துவிட்டது. மதுரை மாவட்டத்தில் சங்ககால பாண்டிய மன்னனின் பெயரைத் தாங்கிய ஒரே சிற்றூராக நல்லமறம் திகழ்கிறது. நாயக்கர் காலம் வரை மிகப்பெரிய ஊராக நல்லமறம் திகழ்ந்துள்ளது. இங்குள்ள அய்யனார் கோயிலில் கி.பி. 946-966 வரையிலான காலத்தில் வாழ்ந்த சோழன் தலை கொண்ட வீரபாண்டிய மன்னனின் பெயரைக் குறிப்பிடும் கல்வெட்டு உள்ளது. மேலும், ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன் பழைய கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கல் கோடாரிகள் உள்ளிட்ட சான்றுகள் இவ்வூரில் கிடைத்துள்ளன. வடக்கு வாசல் செல்லியம்மன் கோயில் அருகே நூறாண்டுகளுக்கு முந்தைய கல்லால் ஆன எண்ணெய்ச் செக்குகள் கல்வெட்டுடன் காணப்படுவது இவ்வூரின் தனிச்சிறப்பாகும். இங்குள்ள கருப்பசாமி கோயில் இவ்வூரின் காவல் தெய்வமாகும்.
நல்லமறம் கருப்பசாமி கோயில்
கோயிலின் அமைப்பு கோயில் அமைப்பு ஒன்றும் இல்லை. திறந்தவெளியில் மரத்தினடியில் கருப்பசாமி, பெண்தெய்வம், அய்யனார் ஆகிய கற்சிற்பங்களும், குதிரை மேல் அமர்ந்த கருப்பசாமியின் பெரிய அளவிலான சுதைச்சிற்பமும் திறந்த வெளியிடையே வழிபாட்டில் உள்ளன.
பாதுகாக்கும் நிறுவனம் ஊர் நிர்வாகம்
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் நல்லமறம் கிருஷ்ணன் கோயில், நல்லமறம் அய்யனார் கோயில்
செல்லும் வழி தி.கல்லுப்பட்டியிலிருந்து 3 கி.மீ. தொலைவில் நல்லமறம் அமைந்துள்ளது. தி.கல்லுப்பட்டியிலிருந்து மறவப்பட்டி செல்லும் சாலையில் சென்றால் நல்லமறத்தை அடையலாம்.
கோவில் திறக்கும் நேரம் காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை
நல்லமறம் கருப்பசாமி கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் நல்லமறம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் மதுரை
அருகிலுள்ள விமான நிலையம் மதுரை
தங்கும் வசதி திருமங்கலம், மதுரை நகர விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் கே.மதன்குமார், டாக்டர் அர்ஜூன் கருப்பையன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 96
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்