வழிபாட்டுத் தலம்
திருநின்றவூர் பக்தவத்சலப் பெருமாள் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | திருநின்றவூர் பக்தவத்சலப் பெருமாள் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | திண்ணனூர் |
| ஊர் | திருநின்றவூர் |
| வட்டம் | ஆவடி |
| மாவட்டம் | திருவள்ளூர் |
| தொலைபேசி | 044-55173417 |
| உட்பிரிவு | 2 |
| மூலவர் பெயர் | பக்தவத்சலப் பெருமாள், பத்தராவிப் பெருமாள் |
| தாயார் / அம்மன் பெயர் | என்னைப் பெற்ற தாயார் |
| தலமரம் | பாரிஜாதம் |
| திருக்குளம் / ஆறு | வருண புஷ்கரணி |
| ஆகமம் | பாஞ்சராத்ர ஆகமம் |
| வழிபாடு | நான்கு கால பூசை |
| திருவிழாக்கள் | பங்குனி திருவோணம், சித்ரா பௌர்ணமி, திருக்கார்த்திகை, தைப்பொங்கல், இரத சப்தமி, வைகுண்ட ஏகாதசி |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.8-ஆம் நூற்றாண்டு / திருமங்கையாழ்வார் பாடல் பெற்ற தலம். |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | இக்கோயிலில் உள்ள மூலவர் பக்தவத்சல பெருமாள் (பத்தராவிப்பெருமாள்) ஆவார். தாயார், பெருமாள் சன்னதிகளுடன் ஆண்டாள், சக்கரத்தாழ்வார், ஆதிசேஷன், விஷ்வக்ஸேனர் (சேனை முதல்வன்), பன்னிரு ஆழ்வார்கள் மற்றும் ராமானுஜர், மணவாள மாமுனிகள் ஆகியோருக்குத் தனித்தனியாகச் சன்னதிகள் அமைந்துள்ளன. திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோவிலின் வடகிழக்கில் உள்ள மண்டபத்தின் உள்ளே வரிசையாக ஆழ்வார்களின் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முன்புறம் 7 தூண்கள், அதில் நான்கு சிங்கத்தூண்கள், மூன்று தூண்களில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. |
| தலத்தின் சிறப்பு | 1200 ஆண்டுகள் பழமையானது. திவ்ய தேசம். திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. |
திருநின்றவூர் பக்தவத்சலப் பெருமாள் கோயில்
| கோயிலின் அமைப்பு | இக்கோயில் விசயநகர ஆட்சி காலத்தில் புனரமைப்பு செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இராஜகோபுரம் இம்மன்னர்கள் ஆட்சியில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலில் கருடன், ஆண்டாள், இராமர் ஆகியோருக்கு தனி சன்னதிகள் அமைந்துள்ளன. சதுர வடிவக் கருவறையில் நின்ற நிலையில் பெருமாள் திருமகள் மற்றும் பூமகளுடன் காட்சியளிக்கிறார். |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | திருநின்றவூர் இருதாயலீசுவரர் சிவன் கோயில், திருநின்றவூர் ஏரி காத்த இராமர் கோயில், சித்தர்காடு சிவன் கோயில், புதுசத்திரம் அருணாச்சலேசுவரர் கோயில் |
| செல்லும் வழி | சென்னை-திருவள்ளூர் செல்லும் வழியில் திருநின்றவூர் அமைந்துள்ளது. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 7.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 13 Mar 2019 |
| பார்வைகள் | 41 |
| பிடித்தவை | 0 |