வழிபாட்டுத் தலம்
அருள்மிகு கரியமாலழகர் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | அருள்மிகு கரியமாலழகர் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | அல்லிக்குண்டம் பெருமாள் கோயில் |
| ஊர் | அல்லிக்குண்டம் |
| வட்டம் | உசிலம்பட்டி |
| மாவட்டம் | மதுரை |
| உட்பிரிவு | 2 |
| மூலவர் பெயர் | கரியமாலழகர் |
| தலமரம் | வன்னி |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.17-18-ஆம் நூற்றாண்டு |
| கல்வெட்டு / செப்பேடு | தூண்களில் கி.பி.17-18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்க் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அக்கல்வெட்டுகள் தூண் சிற்ப உருவங்களின் பெயர்களையும், அவற்றை செய்தளித்தவர்களின் பெயர்களையும் குறிப்பிடுகின்றன. கவுண்டர் என்ற பெயர் இறுதி சில கல்வெட்டுகளில் காணப்படுகின்றது. |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | தூண் சிற்பங்கள் அரச உருவங்களாக காட்சியளிக்கின்றன. அரசரும் அரச மகளிரும் வணங்கிய நிலையில் நிற்கின்றனர். பெருமாள், கருடன், அனுமன், கோமாளி, பன்றி ஆகிய புடைப்புச் சிற்பங்களும் தூண்களில் காணப்படுகின்றன. கருவறையின் முகப்பில் துவார பாலகர் சிற்பங்கள் இருபுறமும் காட்டப்பட்டுள்ளன. கருவறையில் கரியமாலழகர் செப்புத்திருமேனியும் அதற்குப் பின்னால் சுயம்பு வடிவாக வணங்கப்படும் திருவுருவும் காட்சியளிக்கின்றன. கருவறை விமானத்தில் தற்காலப் பணியாக பெருமாளின் திருஅவதாரச் சிற்பங்கள் சுதைகளாகக் காட்டப்பட்டுள்ளன. வாகன மண்டபத்தில் கருடன், அனுமன், குதிரை ஆகிய வாகனங்கள் மரச்சிற்பங்களாக உள்ளன. |
| தலத்தின் சிறப்பு | 400 ஆண்டுகள் பழமையானது. |
|
சுருக்கம்
அல்லிக்குண்டத்தில் உள்ள கரியமாலழகர் என்னும் பெருமாள் கோயில் கி.பி.17-18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இக்கோயில் கருவறையில் சுயம்புவாக பெருமாள் திகழ்வதாக மக்களால் நம்பப்படுகிறது. இக்கோயில் உள்ளுர் மக்களால் நிர்வகிக்கப்பட்டு வழிபடப்பட்டு வருகின்றது. இக்கோயில் கொடிமரம் மரத்தினால் செய்யப்பட்டதாக இன்றும் திகழ்வது குறிப்பிடத்தக்கது. கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டிருப்பினும் பழமையின் எச்சமாக தூண்களில் அரசகுலச் சிற்பங்களும், கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. திருச்சுற்று நிறைந்த பரப்பளவைக் கொண்டுள்ளது. திருச்சுற்றில் நந்தவனம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது.
|
|
அருள்மிகு கரியமாலழகர் கோயில்
| கோயிலின் அமைப்பு | இக்கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. நாயக்கர் காலத்திய கட்டிடக் கலையைப் பெற்று விளங்குகிறது. சதுர வடிவக் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், முகமண்டபம் ஆகிய கட்டிட அமைப்பினைப் பெற்றுள்ளது. மண்டபங்களில் உள்ள பெரும்பாலான தூண்களில் அரசவுருவங்கள் வணங்கிய நிலையில் வடிக்கப்பட்டுள்ளன. தூண்களின் சதுரப்பகுதியில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கருவறை விமானம் நாற்கர வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. கூரைப்பகுதி வரை கற்றளியாகவும், அதற்கு மேலே தற்கால கலைப்பணியாகவும் காட்சியளிக்கின்றது. கருவறை விமானம் மூன்று தளங்களைப் பெற்றுள்ளது. விமானத்தின் தளங்களில் பெருமாளின் பத்து அவதாரத் திருவுருவங்கள் சுதைச் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. வாகன மண்டபத்தில் கருடன், அனுமன், குதிரை ஆகிய வாகனங்கள் உள்ளன. திருச்சுற்றில் கொடிமரமும், கருடமண்டபமும், தீர்த்தக் கிணறும் அமைக்கப்பட்டுள்ளன. திருச்சுற்றில் தலமரமான வன்னி உள்ளிட்ட தென்னை மற்றும் பிற தாவரங்கள் காணப்படுகின்றன. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | உள்ளூர் மக்களால் நிர்வகிக்கப்பட்டு வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | ஆனையூர் ஐராவதேஸ்வரர் கோயில், சிந்துபட்டி பெருமாள் கோயில், எழுமலை, புத்தாம்பட்டி ஜைனக்கோயில் |
| செல்லும் வழி | உசிலம்பட்டியிலிருந்து பேரையூர் செல்லும் சாலையில் உசிலம்பட்டிக்கு தெற்கே 10 கி.மீ. தொலைவில் அல்லிக்குண்டம் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 7.30 மணி முதல் 12.30 மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 29 Jun 2017 |
| பார்வைகள் | 121 |
| பிடித்தவை | 0 |