Back
வழிபாட்டுத் தலம்
திருக்கருகாவூர் வெள்விடைநாதர்கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் திருக்கருகாவூர் வெள்விடைநாதர்கோயில்
வேறு பெயர்கள் மாதவி வனம், முல்லைவனம், திருக்கருகாவூர், கர்ப்பபுரி
ஊர் திருக்கருகாவூர்
தொலைபேசி 04374 - 273502 , 273423
உட்பிரிவு 1
தலமரம் முல்லை
திருக்குளம் / ஆறு பாற்குளம், க்ஷீரகுண்டம், சத்திய கூபம், பிரமதீர்த்தம்
வழிபாடு நான்கு கால பூசை
திருவிழாக்கள் மகா சிவராத்திரி, மாசி மகம், மார்கழி திருவாதிரை.
காலம் / ஆட்சியாளர் கி.பி.7-12-ஆம் நூற்றாண்டு / பல்லவர்கள், சோழர்கள்
கல்வெட்டு / செப்பேடு இக்கோயிலில் சோழர்கள் காலக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. மதுரைகொண்ட கோப்பரகேசரிவர்மன் கால கல்வெட்டுக்கள் உள்ளன. முதலாம் இராசராசன் கல்வெட்டில் "நித்தவிநோத வளநாட்டு ஆவூர்க் கூற்றத்துத் திருக்கருகாவூர் " என்று தலம் குறிக்கப்படுகின்றது.
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் கருவறை விமானத்தின் தேவகோட்டங்களில் மேற்கில் உமையொருபாகரும், தெற்கில் தென்முகக்கடவுளரும் சோழர்கால கலைப்பாணியில் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்கள் ஆகும் இக்கோயிலில் இரதவடிவிலான சபாமண்டபமும் அதில் நித்துவ முனிவர் பூசித்த லிங்கமும் உள்ளது. மூலவர் சுயம்பு இலிங்கமாக புற்று மண்ணாலாகியது. அம்மன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். கற்பக விநாயகர் சிற்பம் இங்கு சிறப்புப் பெற்றது. இங்குள்ள நந்தி - உளிபடாத விடங்கமூர்த்தம் என்பர்.
தலத்தின் சிறப்பு 1300 ஆண்டுகள் பழமையானது. அப்பர், சம்பந்தர் பாடல் பெற்ற தலம்.
சுருக்கம்
திருக்கருக்காவூர் - திருக்கடாவூர் வெள்ளடயீஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடல் பெற்ற சோழ நாட்டு காவிரி தென்கரை தலம் சிவன் கோவிலாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் வட்டத்தில் காவிரி வெட்டாற்று கரையில் அமைந்துள்ள சிவன் கோவில் ஆகும். பசியோடிருந்த சுந்தரருக்கு இறைவன் கட்டமுதும் நீரும் தந்து பசிபோக்கிய தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் தேவாரப்பாடல் பெற்ற சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 18-ஆவது சிவத்தலமாகும்.
திருக்கருகாவூர் வெள்விடைநாதர்கோயில்
கோயிலின் அமைப்பு
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் சீர்காழி பிரமாபுரம், திருமுல்லைவாசல்
செல்லும் வழி கும்பகோணம் - ஆவூர் - மிலட்டூர் வழியாகத் தஞ்சாவூர் செல்லும் சாலையில் உள்ள தலம். இத்தலத்திற்கு தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்தும், கும்பகோணத்திலிருந்தும் நகரப் பேருந்துகள் உள்ளன.
கோவில் திறக்கும் நேரம் காலை 8.00 மணி முதல் 11.00 மணி வரை, மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை
திருக்கருகாவூர் வெள்விடைநாதர்கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் திருக்கருகாவூர்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் சீர்காழி
அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி
தங்கும் வசதி சீர்காழி வட்டார விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் திரு.வேலுதரன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 27 Feb 2021
பார்வைகள் 47
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்