Back
வழிபாட்டுத் தலம்
கட்டப்புளி கருப்பணசாமி கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் கட்டப்புளி கருப்பணசாமி கோயில்
வேறு பெயர்கள் கருப்பணசாமி கோயில்
ஊர் தேனூர்
வட்டம் மதுரை மேற்கு
மாவட்டம் மதுரை
உட்பிரிவு 5
திருக்குளம் / ஆறு தோடனேரி கண்மாய்
வழிபாடு ஒருகால பூசை
திருவிழாக்கள் மாசி மகாசிவராத்திரி
காலம் / ஆட்சியாளர் பாண்டியர்
கல்வெட்டு / செப்பேடு இல்லை
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் நின்ற கோலத்தில் தலையில் பெரிய தலைப்பாகை (உருமால்), நெற்றியில் திருமண், மிரட்டும் விழிகள், முறுக்கிய மீசை ஓங்கிய கையில் வீச்சரிவாள், மறு கையில் கதை, சங்கு முழங்காலுக்கும் கீழே வருமளவில் இடுப்பில் கச்சை ஆகியவற்றோடு கருப்பசாமி காட்சி தருகிறார். ஒருபக்கம் சாய்ந்த கொண்டையை வைத்துள்ளார். கருப்பசாமி ஒரு கிராமக் காவல் தெய்வமாவார். இவரைக் கருப்புசாமி என்றும், கருப்பன் என்றும், கருப்பணசாமி என்றும் அழைப்பதுண்டு. இவர் குடிகொண்டிருக்கும் இடத்திற்கு ஏற்றவாறு பல பெயர்களிலும் அழைக்கப்படுகிறார். பொதுவாகப் பெண் தெய்வங்களின் காவல் தெய்வமாக இவர் உள்ளார். கருப்பசாமி வழிபாடு தமிழ்நாட்டுக் கிராமங்களில் பரவலாக காணப்படுகின்றது. கருப்பசாமி வழிபாட்டை சிறுதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர்கள் குறிப்பிடுவதுண்டு.
தலத்தின் சிறப்பு திருமலை நாயக்கர் காலத்திலிருந்தே கட்டப்புளி கருப்பணசாமி வழிபாடு தொடர்கிறது.
சுருக்கம்
தேனூர் எல்லை காவல் தெய்வமாக கட்டப்புளி கருப்பணசாமி விளங்குகிறார். கட்டப்புளி கருப்பணசாமி கட்டப்புளி நகரில் கோயில் கொண்டுள்ளார். இக்கோயில் நெடுஞ்சாலையின் ஓரத்தில் அமைந்துள்ளது. தேனூரில் உள்ள ஒரு கூட்டத்தினருக்கு இக்கோயில் பாத்தியப்பட்டதாக இக்கோயிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இக்கோயில் அவர்களுக்கு குலதெய்வக் கோயிலாக அமைந்திருக்கிறது.
கட்டப்புளி கருப்பணசாமி கோயில்
கோயிலின் அமைப்பு தோப்பின் நடுவே இக்கோயில் அமைந்துள்ளது. தற்காலக் கட்டிடமாக உள்ளது.
பாதுகாக்கும் நிறுவனம் தனியார்
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் விருதால் உடைய அய்யனார் கோயில், தொட்டிச்சி அம்மன் கோயில்
செல்லும் வழி மதுரையிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சமயநல்லூருக்கு அருகே கட்டப்புளிநகர் அமைந்துள்ளது. மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சமயநல்லூருக்கு பேருந்து செல்கிறது.
கோவில் திறக்கும் நேரம் காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை
கட்டப்புளி கருப்பணசாமி கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் தேனூர்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் மதுரை
அருகிலுள்ள விமான நிலையம் மதுரை
தங்கும் வசதி மதுரை நகர விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் சதீஷ் விக்னேஷ், மோகன்தாஸ் சுந்தர்ராஜன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 30
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்