வழிபாட்டுத் தலம்
அய்யன் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | அய்யன் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | அய்யனார் கோயில் |
| ஊர் | T.கிருஷ்ணாபுரம் |
| வட்டம் | உசிலம்பட்டி |
| மாவட்டம் | மதுரை |
| உட்பிரிவு | 5 |
| திருக்குளம் / ஆறு | சதுரகிரி மலை சுனை |
| வழிபாடு | ஒருகால பூசை |
| திருவிழாக்கள் | மாசி மகாசிவராத்திரி |
| காலம் / ஆட்சியாளர் | பாண்டியர் |
| கல்வெட்டு / செப்பேடு | இல்லை |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | அய்யன் கோயிலில் ஓங்கிய வீச்சரிவாளுடன் கருப்பசாமி, |
| தலத்தின் சிறப்பு | அய்யனார் வழிபாடு மிகப்பழங்காலந்தொட்டு தொன்மையானது. சதுரகிரி மலையடிவாரத்தில் நீர்நிலைக் கரையில் அமைந்துள்ள இயற்கை எழில் சூழ்ந்த திருக்கோயில். |
|
சுருக்கம்
தமிழகத்தில் அய்யனார் வழிபாடு மிகவும் தொன்மையானது. தமிழ்நாட்டில் மிகப் பரவலாக அய்யனார் வழிபாடு பண்டைய காலத்தில் இருந்துள்ளமை ஆங்காங்கு கிடைக்கும் அய்யனார் சிற்பங்கள் மூலமாகவும், எண்ணற்ற அய்யனார் கோயில்கள் மூலமாகவும் அறியமுடிகிறது. அய்யனாரோடு காவல் தெய்வமான கருப்பசாமியை இணைத்தே வழிபடுவது பண்டிலிருந்து மரபாக இருந்து வந்துள்ளது. அய்யனார் இன்றைய நிலையில் குலதெய்வமாகவும், ஊர்தெய்வமாகவும் விளங்குவது கண்கூடு. அவ்வகையில் தி.கிருஷ்ணாபுரத்தில் வெட்ட வெளியில் அமைந்திருக்கும் அய்யனார் கோயிலும் குறிப்பிடத்தக்கது. இங்குள்ள அய்யனார் சிற்பங்கள் சுடுமண் சிற்பக்கலைக்கு சிறந்த சான்றுகளாகும். T.கிருஷ்ணாபுரம் மதுரை மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். இது மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதி சதுரகிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இவ்வூரின் அருகில் அமைந்துள்ள பெரிய ஊர் தொட்டப்பநாயக்கனூர் ஆகும். T.கிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ள அய்யன் கோயில் புகழ்பெற்றது. கண்மாய் கரையில் அய்யன் கோயில் அமைந்துள்ளது. அய்யன் எனப்படும் அய்யனார் குதிரை வாகனத்தில் அமர்ந்துள்ள பெரிய அளவிலான சுதைச்சிற்பம், காவல் தெய்வம் கருப்பசாமிகளின் உருவங்கள் ஆகியன சுடுமண் சிற்பக் கலைக்கு நற்சான்றாக விளங்குகின்றன
|
|
அய்யன் கோயில்
| கோயிலின் அமைப்பு | இக்கோயில் திறந்த வெளியில் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் சதுரகிரி மலையின் அடிவாரத்தில் நீர்நிலையின் கரையில் அய்யன் கோயில் அமைந்துள்ளது. கரையோரத்தில் குதிரை மேல் அமர்ந்த அய்யனார் இருவரும், கருப்பசாமிகளும் உள்ளனர். தடுப்புச் சுவருக்கு உள்ளே கருப்பசாமி, விநாயகர், யானை, காளை வாகனம் ஆகிய திருவுருவங்கள் வழிபாட்டில் உள்ளன. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | தனியார் |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | கருப்பசாமி கோயில், சிவன் கோயில் |
| செல்லும் வழி | மதுரையிலிருந்து பேருந்தில் திருமங்கலம் சென்று அங்கிருந்து T.கிருஷ்ணாபுரம் செல்லலாம். |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை |
அய்யன் கோயில்
| அருகிலுள்ள பேருந்து நிலையம் | T.கிருஷ்ணாபுரம் |
|---|---|
| அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் | திருமங்கலம் |
| அருகிலுள்ள விமான நிலையம் | மதுரை |
| தங்கும் வசதி | திருமங்கலம், மதுரை நகர விடுதிகள் |
| ஒளிப்படம் எடுத்தவர் | ஜெயவாணி, அருண்குமார் அங்கப்பன், அருண்குமார் சந்திரசேகர், ஜோதிசமயன், குமாரராமசாமி, சிவா, விக்னேஷ் நாராயணன், விஜயகுமார், விஜய் ஆனந்த், தமிழ் |
| ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 52 |
| பிடித்தவை | 0 |