வழிபாட்டுத் தலம்
சியாமளமேனிப் பெருமாள் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | சியாமளமேனிப் பெருமாள் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | உறங்காப்புளி, திருக்கண்ணங்குடி |
| ஊர் | திருக்கண்ணங்குடி |
| வட்டம் | மயிலாடுதுறை |
| மாவட்டம் | நாகப்பட்டினம் |
| உட்பிரிவு | 2 |
| மூலவர் பெயர் | லோகநாதன், நீலமேகவண்ணன் |
| தாயார் / அம்மன் பெயர் | லோகநாயகி |
| தலமரம் | மகிழ மரம் (வகுளம்) |
| திருக்குளம் / ஆறு | சிரவண புஷ்கரிணி |
| வழிபாடு | ஆறுகால பூசை |
| திருவிழாக்கள் | திருநீரணி விழா |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.10-ஆம் நூற்றாண்டு / முதலாம் இராஜராஜசோழன் |
| சுவரோவியங்கள் | இல்லை |
| தலத்தின் சிறப்பு | 1000 ஆண்டுகள் பழமையானது. |
|
சுருக்கம்
கிருஷ்ணாரண்யம் என்றழைக்கப்படும் இத்தலம் பஞ்ச கிருஷ்ண ஷேத்திரங்களில் ஒன்றாகும். பஞ்ச கிருஷ்ண ஷேத்திரத்தின் விபரங்கீழ் வருமாறு. 1. திருக்கண்ணமங்கை 2. திருக்கண்ணபுரம் 3. கபிஸ்தலம் 4. திருக்கோவிலூர் 5. திருக்கண்ணங்குடி. இதனை பஞ்ச பத்ரா என்றும் புராணங்கூறும். (ஆறு, காடு, நகரம், ஆலயம், தீர்த்தம்) இவ்வைந்தினாலும் புகழ்பெற்ற இடமாதலால் பஞ்ச பத்ரா என்றாயிற்று. திருக்கண்ணங்குடிக்கு அருகில் உள்ள மற்ற நான்கு ஸ்தலங்களையும் இதனுடன் சேர்த்து பஞ்ச நாராயண ஸ்தலம் என்றும் வழங்குவர். அவைகளின் விபரம் வருமாறு. 1. தெற்கில் - ஆபரணதாரி என்ற பதியில் ஆனந்த நாராயணன் 2. தென்மேற்கில் - பெரிய ஆலத்தூர் வரத நாராயணன்
|
|
சியாமளமேனிப் பெருமாள் கோயில்
| கோயிலின் அமைப்பு | |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | பெரிய ஆலத்தூர், தேவூர், கீவளுர், ஆபரணதாரி |
| செல்லும் வழி | கீவளூர் இரயில் நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் இவ்வைணவத்தலம் இருக்கிறது. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 6.00 மணி முதல் 11.00 மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 23 Nov 2018 |
| பார்வைகள் | 30 |
| பிடித்தவை | 0 |