வழிபாட்டுத் தலம்
வரகுணமங்கை விஜயாசனப் பெருமாள்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | வரகுணமங்கை விஜயாசனப் பெருமாள் |
|---|---|
| வேறு பெயர்கள் | வரகுணமங்கை |
| ஊர் | வரகுணமங்கை |
| வட்டம் | ஸ்ரீவைகுண்டம் |
| மாவட்டம் | தூத்துக்குடி |
| உட்பிரிவு | 2 |
| மூலவர் பெயர் | விஜயாசனப் பெருமாள் |
| தாயார் / அம்மன் பெயர் | வரகுணவல்லித் தாயார், வரகுணமங்கைத் தாயார் |
| திருக்குளம் / ஆறு | அகநாச தீர்த்தம், அக்னி தீர்த்தம் |
| வழிபாடு | நான்கு கால பூசை |
| திருவிழாக்கள் | வைகுண்ட ஏகாதசி, இராமநவமி |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.8-9-ஆம் நூற்றாண்டு / பாண்டியர், விசயநகரர் |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | விஜயாசனப் பெருமாள் வீற்றிருந்த திருக்கோலம். கிழக்கே திருமுகமண்டலம். தனி திருமுன்னில் வரகுணவல்லித் தாயார் வீற்றிருந்த திருக்கோலம். |
| தலத்தின் சிறப்பு | 1200 ஆண்டுகள் பழமையானது. திவ்ய தேசம். நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்த திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. |
|
சுருக்கம்
நம்மாழ்வாரால் பாடப்பட்ட இத்திவ்ய தேசம் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து கிழக்கே சுமார் ஒரு மைல் தொலைவில் உள்ளது. ஸ்ரீவைகுண்டத்திலிருந்து நடந்தே செல்லலாம். வரகுணமங்கையென்று சொன்னால் யாருக்கும் தெரியாது. நத்தம் என்று சொன்னால் எல்லோரும் அடையாளம் காட்டிடுவர். தற்போது நத்தம் என்னும் பெயரே பிரதானமாக உள்ளது.ஸ்ரீவைகுண்டத்தில் நின்ற பெருமானுக்கு குடைப்பிடித்த ஆதிசேடன் இங்கு அமர்ந்த பெருமானுக்கு குடைப்பிடித்துள்ளான். பிரம்மாவின் புத்திரனான கனக முனிவர் இத்தலத்தின் வரலாற்று மேன்மையை தட்சிண கங்கை என்று சொல்லப்படும் காவிரியின் தென்கரையில் தர்மபுரம் என்ற நகரத்தைப் பரிபாலித்து வந்த மன்னனுக்கு கூறியதாகவும் புராணக் குறிப்புள்ளது. நம்மாழ்வாரால் மட்டும் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. மணவாள மாமுனிகளும் இங்கு எழுந்தருளினார்.
|
|
வரகுணமங்கை விஜயாசனப் பெருமாள்
| கோயிலின் அமைப்பு | இக்கோயில் விமானம் விஜயகோடி விமானம் என்ற வகையைச் சார்ந்தது. சதுரமான கருவறை. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | ஸ்ரீவைகுண்டம், மயிலேறும் பெருமான் சாஸ்தா கோயில், பட்டனத்தி அய்யனார் கோயில் |
| செல்லும் வழி | ஸ்ரீவைகுண்டத்திலிருந்து கிழக்கே சுமார் ஒரு மைல் தொலைவில் உள்ளது. ஸ்ரீவைகுண்டத்திலிருந்து நடந்தே செல்லலாம். |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 29 Nov 2018 |
| பார்வைகள் | 30 |
| பிடித்தவை | 0 |