Back
வழிபாட்டுத் தலம்
பிரம்மதேசம் சந்திரமௌலீசுவரர் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் பிரம்மதேசம் சந்திரமௌலீசுவரர் கோயில்
வேறு பெயர்கள் பிரம்மதேசம்
ஊர் பிரம்மதேசம்
வட்டம் செய்யாறு
மாவட்டம் திருவண்ணாமலை
உட்பிரிவு 1
மூலவர் பெயர் சந்திரமவுலீசுவரர், சந்திரசேகரர்
காலம் / ஆட்சியாளர் கி.பி.8-12-ஆம் நூற்றாண்டு / பல்லவர், சோழர்
கல்வெட்டு / செப்பேடு கல்வெட்டில் தாமர் கோட்டத்து திருவேகம்புரத்து ராஜமல்ல சதுர்வேதிமங்கலத்து போந்தை பெருமானடிகள் என்று இவ்வூரின் அக்கால பெயரும் இறைவனின் பெயரும் கூறப்பட்டுள்ளது. இராஜேந்திரர் இறந்தவுடன் உடன் கட்டை ஏறியவர் வீரமாதேவி. இவரின் மனக்கேதம் தீரும் பொருட்டு வீரமாதேவியின் உடன் பிறந்தான் மதுராந்தக வேளான் தண்ணீர் பந்தல் ஒன்று வைத்ததாக முதலாம் இராஜாதிராஜனின் 26ம் ஆட்சி ஆண்டு(1044ல்) காலத்தில் வெட்டப்பெற்ற கல்வெட்டு குறிப்பு ஒன்று இதே கோயிலில் காணப்படுகின்றது.
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் விமானத்தின் கருவறைக் கோட்டங்களில் சிற்பங்கள் ஏதும் காணப்படவில்லை. விமானத்தின் தளங்களில் அமைந்துள்ள சாலைக்கோட்டம், பஞ்சரக்கோட்டம், கர்ணக்கூடு ஆகியவற்றில் பிரம்மன், யோகசிவன், கிருஷ்ணனுக்கு பால் கொடுக்கும் பூதகி, இரணியனை வதம் செய்யும் நரசிம்மர் ஆகிய சிற்பங்கள் காணப்படுகின்றன. மகரயாளி வரிசை தளத்தைப் பிரித்துக் காட்டும் உத்தியில் காட்டப்பட்டுள்ளது.
தலத்தின் சிறப்பு 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. பல்லவர் காலக் கற்றளி.
சுருக்கம்
கல்வெட்டுகள் உள்ள கோயில் தற்காலத்தில் சந்திரமெளலீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறது. இக்கோயில் இராஜேந்திரசோழனின் பள்ளிப்படைக் கோயிலாக இருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது. இங்கே கம்பவர்மபல்லவர் காலம் தொடங்கி முதலாம் பராந்தகர், வீரபாண்டியன் தலைக்கொண்ட பார்த்திவேந்திரன், முதலாம் இராஜராஜன், குலோத்துங்கன் காலம் வரையிலும் உள்ள கல்வெட்டுகள் உள்ளது. இராஜேந்திரனின் பள்ளிப்படையாக இந்த கோயிலை எடுத்துக்கொண்டால் இராஜேந்திரனுக்கு முன்னர் ஆட்சி புரிந்தவர்களின் கல்வெட்டு இங்கே இடம்பெற்றிருக்க முடியாது. பல்லவர் காலம் தொட்டு இருந்து வரும் கோயில்.சோழர்களால் ஏற்றம் பெற்ற கோயில்.
பிரம்மதேசம் சந்திரமௌலீசுவரர் கோயில்
கோயிலின் அமைப்பு பல்லவர் கால கலைக்கோயிலான இக்கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. கோபுரம் நுழைவாயிலாக மேற்கூரை சிதிலத்துடன் காணப்படுகின்றது. இக்கற்றளியின் விமானம் மூன்று தளங்களை உடையதாக அமைந்துள்ளது. திராவிடக் கலைப் பாணியில் விமானம் அமைக்கப்பட்டுள்ளது. சுவர்ப்பகுதியில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. தாங்குதளத்திலும் கல்வெட்டுகள் உள்ளன. அர்த்தமண்டபம், முகமண்டபம் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
பாதுகாக்கும் நிறுவனம் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறை
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் கூழம்பந்தல் கங்கை கொண்ட சோழீஸ்வரம், புலிவலம் சிவன் கோயில், உத்திரமேரூர்
செல்லும் வழி பிரம்மதேசம் மாநில நெடுஞ்சாலையில் (மாநில நெடுஞ்சாலை-05) அமைந்துள்ளது. அருகில் ஆற்காடு வந்தவாசி, திண்டிவனம் மற்றும் காஞ்சிபுரத்தை (செய்யாறு) ஆகிய நகரங்களுடனும் இணைக்கப்பட்டுள்ளது. 
கோவில் திறக்கும் நேரம் காலை 8.00 மணி முதல் இரவு 5.00 மணி வரை
பிரம்மதேசம் சந்திரமௌலீசுவரர் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் ஒச்சேரி, பிரம்மதேசம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் செய்யாறு
அருகிலுள்ள விமான நிலையம் சென்னை - மீனம்பாக்கம்
தங்கும் வசதி செய்யாறு விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் திரு. சரவணன் ராஜா
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 30 Jan 2019
பார்வைகள் 96
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்